இந்த படத்துடைய கதை, வருங்காலத்தில் மனித இயந்திரங்கள் மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்படுகிறது. இந்த கதை நடக்கும் 2035 களில் கிட்டத்தட்ட 10 மனிதர்களுக்கு ஒரு இயந்திரம் என USR நிறுவனத்தாரால் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் வேலைக்கார இயந்திரங்கள் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்ட ஒரு காலகட்டம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு கட்டத்தில் இந்த இயந்திர தயாரிப்பு நிறுவனமான USR ன் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த முன்னாள் தொழில் அதிபரும் சைண்டிஸ்ட்டும்மான ஒருவர் மர்மமான முறையில் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து மரணிக்கவே இந்த வழக்கு விசாரணையில் இடம்பெறும் காவல்துறை அதிகாரி ஸ்மித் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மரணம் ஒரு மனித இயந்திரத்தால் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்ற கோணத்தில் ஆராய்ந்து பின்னாட்களில் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட விஷயங்களை உயிரை பணயம் வைத்து கண்டறிந்து நடக்கப்போகும் பேராபத்துக்களை தடுக்க போராடுவதே இந்த படத்தின் கதை. ஒரு படமாக பார்க்க இந்த படம் பிரமாதமாக உள்ளது. இந்த படம் வெளிவந்த ஆண்டான 2004 ல் இவ்வளவு துல்லியமான பிசிறு தட்டாத விஎஃப்எக்ஸ் மிகவுமே பாராட்டத்தக்கது. லொகேஷன் , காஸ்டியூம் , டிசைன் , ஆர்ட் வொர்க் , சவுண்ட் எடிட்டிங் என்று எல்லாமே பிரமாதம். ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்ஸில் கண்ணாடி உடையும் காட்சிகள் எல்லாம் தெளிவாக இருக்கிறது. நம்ம ஊரூ எந்திரன் படம் கூட இந்த படத்தில் இருந்து கொஞ்சம் காட்சிகளை கடன் வாங்கி வைத்து இருக்கிறது என்றே சொல்லலாம். ரொம்பவுமே தெளிவான படமாக குறிப்பாக ஆக்ஷன் அட்வென்சர் மிஸ்ட்டெரி என்று எல்லாமே நிறைந்த ஒரு படமாக இந்த படம் இருக்கிறது. இந்த படத்துடைய கதைக்கு ஏற்றவாறு பெரிய பட்ஜெட் கொடுத்து இருந்தாலும் டெர்மினேட்டர் - ஜெட்ஜ்மென்ட் டே - போன்ற படங்களோடு கம்பேரிஸன் பன்னும்போது மிகவும் சுத்தமான சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்த படம் வெளிவந்ததால் கமேர்ஷியல் சக்ஸஸ் என்று சிறப்பாக பாக்ஸ் ஆபீஸ் சாதனை எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் விருதுகளை இந்த படம் வாங்கி குவித்துள்ளதால் இந்த படத்தினை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள்.
No comments:
Post a Comment