Tuesday, January 7, 2025

ARC - 056 - கண்மூடித்தனமும் பிரித்து தெரிந்துகொள்ளுதலும் !



ஒரு வேட்டை நாய் கிராமத்தைக் காவல் காத்து வந்தது. ஒரு நாள் அது தன குட்டியுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது தெருவில் சுற்றிக்கொண்டிருந்த நாய்கள் வேட்டை நாய்களைப் பார்த்து குரைத்தன. வேட்டை நாயோ அதனை கருத்தில் கொள்ளாது தன வழியே சென்று கொண்டிருந்தது. குட்டி நாய்,தாயிடம் கேட்டது, “அவை குரைப்பதைக் கேட்டுவிட்டு ஒன்றும் செய்யாது வருகிறாயே?அந்த நாய்களைக் கடித்துக் குதற வேண்டாமா?” வேட்டை நாய் பதில் சொன்னது,”அப்படிச் செய்யக் கூடாது. தெரு நாய்கள் இருப்பதால்தான் வேட்டை நாய்களான நமக்கு உயர்ந்த மதிப்பு இருக்கிறது. எனவே அவற்றை ஒன்றும் செய்யக்கூடாது” இதுதான் பிரித்து அறிதல் என்று சொல்லப்படுகிறது. இது ஒரு மன நிலை என்றால் இன்னொரு மனநிலை கண்மூடித்தனம் ஒரு நாய்க்கு நல்ல குரல். குரைத்தால், கிராமமே குரைப்பது போல பெரிசாக சப்தம் கேட்கும். இதில் அதற்கு ரொம்ப பெருமை. இதனால் கிராமத்தைச் சேர்ந்த கொல்லர் ஒருவர் அந்த நாயை விலைக்கு வாங்கினார். அது போகிற வருகிறவரை யெல்லாம் பார்த்து, பலமாகக் குரைத்ததைக் கண்டு கொல்லானார் பெருமைப்பட்டார். ஒருமுறை கிராமத்துப் பஞ்சாயத்துத் தலைவர் மகளைப் பார்த்து நாய் உற்சாகமாகக் குரைத்தது, துரத்தியது. அந்தப் பெண் தன் தந்தையிடம், "என்ன தலைவர் நீங்கள்? கிராமத்து கண்ட கண்ட நாய்களெல்லாம் என்னைப் பார்த்து குரைப்பதைப் தடுக்க முடியவில்லையே!" என்றாள். உடனே கொல்லரைக் கூப்பிட்டு, நாயைக் கட்டிப்போடும்படி சொன்னார். அவர் நாயை சங்கிலி கொண்டுவந்து ஒரு பெரிய மரத்துடன் இணைத்துக் கட்டிவிட்டார். நாயால் நகர முடியவில்லை. நாய் இதையும் பெருமையாக நினைத்ததுக் கொண்டு "பார்! நம் எஜமானர் என் திறமையை வியந்து மரத்தை இழுப்பதற்க்காகக் கட்டி போட்டிருக்கிறார்" என்று அதை இழுக்க முற்பட்டது. கிராமத்தவர் கைகொட்டிக் சிரித்தார்கள். நாய் அதை பாராட்டு என்று எண்ணிக்கொண்டு இன்னும் பலமாக இழுத்தது. சிலருக்கு எது தண்டனை, எது பாராட்டு எனபதே தெரியாது. இதுதான் கண்மூடித்தனம். கண்ணை மூடிக்கொண்டு தனக்கு தோன்றும் விஷயங்களை மட்டுமே நம்புவார்கள். இப்படி இருப்பது பாஸிட்டிவிட்டி இல்லை. இது ஒரு முட்டாள்தனம் என்பதைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும். 

No comments:

ARC - 063 -