Wednesday, January 8, 2025

GENERAL TALKS - வாழ்க்கையின் சமூக இணக்கம் தேவைப்படுகிறது.


பணம்தான் மனுஷனுடைய வாழ்க்கையின் இந்த உலகத்தில் நாம் யாரை உயிராக நினைக்கிறோமோ அவர்கள் நம்மை மயிராக கூட மதிப்பது இல்லை. பணம்தான் மனுஷனுடைய வாழ்க்கையை ஆட்டி படைக்கக்கூடிய அடிப்படை. இந்த ஆட்டிட்யூட் மனிதர்களை நன்றாகவே பிரித்துவிட்டது. நமக்கு ஒரு இடம் பிடிக்கவில்லை என்றால் யாரையும் கவனிக்காமல் சென்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்ற ஒரு மனநிலைதான் இப்போதையை இளைஞர்களோடு இருக்கிறது. வாழ்க்கை நம்மை அதிர்ஷ்டமற்ற மனிதராக யோசிக்க வைக்கிறது. நமக்காக வந்து நன்றாக பழகுபவர்கள் நிரந்தரமாக நம்மோடு இருப்பார்கள் என்று நினைக்கவே முடிவது இல்லை. உப்பு சப்பு இல்லாத காரணங்களை எல்லாம் சொல்லி விலகுகிறார்கள். இன்னும் சொல்லப்போனால் காரணம் சொல்லாமலே விலகிவிடுகிறார்கள். சேகரிக்க சந்தோஷமான நினைவுகள் இருப்பது இல்லை. வருங்காலம் நன்றாக இருக்கும் என்ற நம்பிக்கையும் இருப்பது இல்லை. நாம் யாரை நம்பி வாழ்க்கையை பகிர்ந்துகொள்கிறோமோ அவர்களே நமக்கு எதிராக மாறி நம்முடைய வாழ்க்கையில் நம்முடைய தகவல்களை நமக்கு எதிராகவே பயன்படுத்துகிறார்கள்.  இருந்தாலுமே நெருக்கமான கொஞ்சம் பேர் நம்மை விட்டு பிரிய கூடாது என்றுதான் ஆசைப்படுகிறோம். வாழ்க்கையின் ரியாலிட்டி மாறுவதால் இந்த ஆசை நிறைவேறாத ஆசையாகவே இருக்கிறது. நம்பிக்கையான மனிதர்கள் மக்களுக்கு கிடைப்பதே இல்லை. வருங்காலத்தில் இத்தகைய நம்பிக்கையற்ற சூழ்நிலை மாற்றம் கொண்டு இணைந்த சமூகமாக மனித இனம் வாழும் என்ற நம்பிக்கையோடு காலத்தை நகர்த்துவதை தவிர்த்து வேறு எந்த வழியும் இல்லை !
 

No comments:

ARC - 063 -