Wednesday, January 8, 2025

GENERAL TALKS - சோசியல் மீடியா தாக்கம் !


சோசியல் மீடியாவில் பணம் அதிகமாக புழங்குகிறது. மக்கள் உண்மையாக உழைத்து மேலே வர முடிவது இல்லை. கண்களுக்கு தெரிந்தே கடன்களில் மாட்டிக்கொண்டு கடைசி வரையில் கார்ப்பரேட் விசுவாசியாகேவே மாற வேண்டியது உள்ளது. ஒரு ஜீனியஸுக்கு உரிய வேலை கிடைக்கவில்லை. ரெக்கமேன்டெஷனில் காலத்தை வளைத்து பெரிய பதவியில் உட்கார்ந்துகொண்டு டயலாக் அடிக்கிறார்கள்.  சங்கர் , ராசப்பா , ராஜேஷ் போல வாழ்க்கையில் நாமுமே ஒரு பர்ப்போஸ் இல்லாமல் அடுத்தவர்களுக்கு வேலை பார்த்து வேலை பார்த்து ரொம்பவுமே கஷ்டப்படுகிறோம். இது எல்லாம் எங்கே போய் முடியப்போகிறதோ என்றே தெரியவில்லை ! உண்மையாக படித்தவர்கள் பணத்துக்கு கஷ்டப்படுகிறார்கள் - போலியான டிக் டாக் பண்ணிய தறுதலைகள் ஸ்கேம் ஆப்கள் மற்றும் ஆன்லைன் சூதாட்ட கும்பலுக்கும் கொள்ளை வட்டி ஃபைனான்ஸ் கொடுக்கும் லோன் ஆப்களுக்கும் அப்பாவிகளை மாட்டிவிட்டு இவர்கள் கமிஷன்களை பெற்றுக்கொண்டு சொகுசு வீடு , சொகுசு கார் மற்றும் இன்ப விஷயங்கள் என்று தாராளமாக திரிகிறார்கள். இவர்களை சட்டம் தடுக்காமல் சூதாட்டத்தை அங்கீகரிக்கிறது. இளம் தலைமுறை டோபமைனுக்காக மொத்தமாக வீடியோக்களை தள்ளிவிட்டு பார்த்துக்கொண்டே இருக்கிறது. இது நிச்சயமாக மிகப்பெரிய பேராபத்தில் கொண்டுவந்து நம்மை தள்ளப்போகிறது. இந்த குப்பைகளுக்கு சட்டதிட்டம் கொண்டுவரவேண்டும். தொழில் துறையில் வேலை வாய்ப்புகளை உறுதிப்படுத்த வேண்டும். 

No comments:

ARC - 063 -