Tuesday, January 7, 2025

ARC - 055 - அலுவலக பயன்பாட்டுக்கு மட்டும்




ஒரு ஊரில் வசதி வாய்ப்பு வாய்ந்த ஒரு நபரின் வீட்டின் தொலைபேசி கட்டணம் மிக அதிகமாக வந்தது. அப்பா சொன்னார், நான் நம்ம வீட்டு போனை உபயோக படுத்துவதே இல்லை. ஆனாலும் இவ்வளவு தொகை வந்து இருக்கு. யார் இதற்கு காரணம்? என்று யோசித்துக் கொண்டு தன் மனைவியிடம் கேட்டார். நானும் அலுவலக தொலைபேசி மட்டுமே உபயோக படுத்துறேன். எனக்கு தெரியாது அவரும் கூறிவிட்டு தன மகனிடம் கேட்குமாறு கூறினார். மகனும், நான் காரணம் இல்லப்பா. நான் அலுவலகம் கொடுத்த செல்போன் தான் உபயோக படுத்துறேன். எனக்கும் தெரியாதுப்பா! என்றான். நாம யாரும் உபயோக படுத்தலைன்னா எப்படி இவ்ளோ கட்டணம் வரும்னு தலைய பிச்சிகிட்டு இருந்தாங்க எல்லோரும். வாடிக்கையாளர் சந்தேகம் தீர்க்கும் உதவி தொலைபேசிக்கு அழைத்து காரணம் கேட்டார்கள். அதில் எந்த மாற்றம் இல்லை என கூறிவிட்டனர். அது வரைக்கும் அமைதியா இருந்த வேலைக்காரன் சொன்னான், உங்களை மாதிரி தான் நானும். என்னோட அலுவலக தொலைபேசி மட்டுமே பயன் படுத்துறேன். அய்யா என்றான். என்ன தப்பு இருக்கிறது என்ற மனகுமுரளோடு சில நேரங்களில் நாம் செய்யும் தவறு நமக்கு புரிவதே இல்லை, வேறொருவர் நமக்கு அதை செய்யும் வரை. அலுவலக அடிப்படையில் கொடுக்கப்படும் ஒரு விஷயம் உங்களுக்கு இலவச பயன்பாட்டுக்கு வரவில்லை என்பதை புரிந்துகொள்ளுங்கள். உங்களுக்கு சொந்தமானது இல்லை என்றும் புரிந்துகொள்ளுங்கள். அலுவலக சொத்துக்கள் எப்போதுமே அலுவலகத்துக்கு மட்டுமே சொந்தமானது.





No comments:

ARC - 063 -