Tuesday, January 7, 2025

ARC - 032 - பொதுத்துறை நிர்வாகிகளின் மமதை



ஒரு நாட்டில் மிகப்பெரிய கோயில் கட்டும் பணி வேகமாக நடந்து கொண்டிருந்தது. அப்பொழுது கட்டுமான ஆட்கள் ஒரு பெரிய பாறையைச் சுவரின் மேல் ஏற்றிக் கொண்டிருந்தார்கள். வேலையாட்கள் பலரும் ஒன்று சேர்ந்து கயிறு போட்டு இழுத்தும் அந்தப் பாறை சிறிதும் நகரவில்லை. எல்லோரும் சோர்வு அடைந்தார்கள். அங்கிருந்த மேற்பார்வையாளரோ, “என்னை எல்லோரும் ஏமாற்றுகிறீர்கள். இந்தப் பாறையை மேலே ஏற்ற முடியவில்லையா?” என்று கோபத்துடன் கத்திக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த ஒரு செல்வந்தர், அவனருகில் போன “ஐயா! நீங்களும் அவர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்யக் கூடாதா?” என்று கேட்டார். “நான் இங்கு மேற்பார்வையாளன் என்பது உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று ஆணவத்துடன் கேட்டான் அவன். “அப்படியா?” என்ற செல்வந்தர் அங்கிருந்த வேலைக்காரர்களுடன் சேர்ந்து அந்தப் பாறையைத் தூக்க முயற்சி செய்தார். ஒரு வழியாக பாறை மேலே போய்ச் சேர்ந்தது. பெருஞ்செல்வந்தரைப் போலிருந்த அவர் வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்தது அந்த மேற்பார்வையாளனுக்கு ஆச்சர்யமாக இருந்தது. மறுநாள் அரசரிடமிருந்து அந்த மேற்பார்வையாளருக்கு ஒரு ஓலை வந்தது. அதில், “கோயில் திருப்பணிக்கு ஆட்கள் போதவில்லை என்றால் உடனே அரசருக்குச் சொல்லி அனுப்பவும். நேற்று வேலை செய்ததைப் போல் அவர் நேரில் வந்து வேலை செய்வார்” என்று எழுதியிருந்தது. அரசர் அந்தப் பணியில் மிகுந்த ஆர்வத்தின் காரணமாக, “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?” என்பதை அறிய விரும்பிய அவர், ஒரு வழிப்போக்கனைப் போல் மாறுவேடம் பூண்டு கோயில் பணி நடக்கும் இடத்துக்கு வந்து சென்றதும் அவரை அரசர் என்று எவரும் அறிந்து கொள்ளவில்லை. அதன் பிறகு தான் தெரிந்தது. இதைப் படித்த மேற்பார்வையாளருக்கு தான்தான் ஆணவம் ஒழிந்தது. பின் அவனும் மற்ற வேலையாட்களுடன் சேர்ந்து வேலை செய்து அவர்களுக்கு ஊக்கமளித்தான். பொதுத்துறையில் இருப்பவர்கள் மமதையை வளர்த்துக்கொள்ளாமல் நம்முடைய நாடு நம்முடைய மக்கள் என்று வேலை பார்த்தால் வாழ்க்கை எவ்வளவோ மேலானதாக நம்மால் கொண்டுவர முடியும். 


No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...