செவ்வாய், 7 ஜனவரி, 2025

ARC - 037 - கொஞ்சமாவது தெரிந்து நடந்துகொள்ளுதல் !



ஒரு  பெண்மணி விமான நிலையத்தில் விமானத்துக்காக காத்து கொண்டு இருந்தார். விமானம் வர தாமதமாகும் என்ற அறிவிப்பை கேட்டவுடன் கடைக்கு சென்று படிக்க ஒரு மேகஸின் புத்தகமும், சாப்பிட ஒரு பாக்கெட் பிஸ்கட்டும் வாங்கி வர சென்றார். ஒரு இருக்கையில் அமர்ந்து தான் வாங்கி வந்த புத்தகத்தை பிரித்து படிக்க ஆரம்பித்தார் அவருக்கு அருகில் ஒரு வாட்ட சாட்டமான ஒருவர் உட்கார்ந்து இருந்தார். சிறிது நேரத்தில் அந்த நபர் பிஸ்கட் பாக்கெட்டை பிரித்து ஒரு பிஸ்கெட் சாப்பிட்டுவிட்டு காலியாக இருந்த சேரின் மீது வைத்தார். அந்த பெண்மணி அவரை பார்த்து முறைத்து விட்டு ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த நபர் மறுபடியும் ஒரு பிஸ்கெட் எடுத்து சாப்பிட்டார். அந்த பெண்மணிக்கு கோபம் வந்து விட்டது. இருந்தாலும் அந்த நபரின் உருவத்தை பார்த்துவிட்டு எதுவும் சொல்லாமல் இவரும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். அந்த முரட்டு மனிதன் மறுபடியும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். ச்சே, இப்படி யோசிக்காமல் அடுத்தவர்கள் பிஸ்கட்டை எடுத்து சாப்பிடுகிறானே , இவனுக்கு கொஞ்சம் கூட வெட்கம், மானம், சொரணை  இல்லையா என்று நினைத்து கொண்டே, அந்த பெண்மணி தானும் ஒரு பிஸ்கட் எடுத்து சாப்பிட்டார். இப்படியே இருவரும் மாறி, மாறி பிஸ்கட் சாப்பிட்டு கொண்டே இருந்தனர். கடைசியாக ஒரே ஒரு பிஸ்கட் இருந்தது. இருவரும் அந்த பிஸ்கட்டை பார்த்தனர். சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். அந்த முரட்டு மனிதன் அந்த பிஸ்கட்டை இரண்டாக புட்டு பாதியை அவர் சாப்பிட்டு விட்டு மீதியை அந்த இருக்கையில் வைத்தார். அந்த பெண்மணி மீதி பாதி பிஸ்கட்டை சாப்பிட்டு விட்டு விமானம் ஏற கிளம்பி விட்டார். விமானத்தில் ஏறி அமர்ந்தவுடன், என்ன மோசமான மனிதன் பிஸ்கெட் வேண்டும் என்றால் கேட்டு வாங்கி சாப்பிட வேண்டியது தானே. இப்படியா திருட்டு செய்து, உலகத்தில் இப்படியும் சில ஜென்மங்கள் இருக்கத்தான் செய்கின்றன என்று நினைத்துக் கொண்டே தண்ணீர் குடிப்பதற்கு பையில் கையை விட்டார். அவருக்கு ஒரே ஆச்சரியம்! இவர் கடையில் வாங்கிய பிஸ்கட் பாக்கெட் பையில் அப்படியே இருந்தது. அப்படின்னா நான் இவ்வளவு நேரம் அங்கு சாப்பிட்ட பிஸ்கட் அந்த முரட்டு மனிதனுடையதா… நான் தான் பிஸ்கெட் புடுங்கி சாப்பிட்டேனா…எனறு சொல்லிக்கொண்டே தன் செயலுக்காக வருந்தினார் இந்தக் கதை நமக்கு உணர்த்துவது, ”எப்பவுமே ஒருவருடைய உருவத்தை வைத்து அவர் குணத்தை நாம் அறிய முடியாது. அவர் நல்லவராகவும் இருக்கலாம், மோசமானவராகவும் இருக்கலாம். ஏன் அவர் நம்மைக் காட்டிலும், எல்லாவற்றிலும் உயர்ந்த பண்புடையவராகவும் கூட இருக்கலாம். குறிப்பாக பெண்கள் தங்களுக்கு கண்ணுக்கு தெரிந்த விஷயங்களை மட்டுமே வைத்து முடிவு எடுக்காமல் ஆண்களின் மனதையும் தெரிந்து முடிவு எடுத்தால் நாட்டில் பாதி பிரச்சனை குறைந்துவிடும். 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - ORU POIAAVADHU SOL KANNE KANNE - UN KAADHALAN NAANDHAAN ENDRU ENDRU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

ஒரு பொய்யாவது  சொல் கண்ணே உன் காதல்  நான் தான் என்று அந்த சொல்லில்  உயிர் வாழ்வேன் பூக்களில் உன்னால் சத்தம் அடி மௌனத்தில்  உன்னால் யுத்தம் இ...