Tuesday, January 7, 2025

GENERAL TALKS - NAALU PER NAALU VIDHAMA PESUVAANGA - ஒரு குட்டி ஸ்டோரி !


அந்த நகரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு பெரிய வங்கி இருந்தது. அதற்கு ஏராளமான வாடிக்கையாளர்கள் இருந்தனர். ஒருநாள் அந்த வங்கியில் கொள்ளையா்கள் துப்பாக்கி மற்றும் வெடி மருந்து ஆயுதங்களோடு வந்து அங்கிருந்த அனைவரையும் மிரட்டினா். "இந்த பணம் அரசுக்கு சொந்தமானது, ஆனால் உங்கள் உயிர் உங்களுக்கு சொந்தமானது"" அனைவரும் அசையாமல் படுத்துவிட்டார்கள்.   அங்கே ஒரு பெண் கொள்ளையர்களின் கவனத்தை திருப்ப அநாகரிகமாக நடந்தாள். அப்பொழுது கொள்ளையா்களில் ஒருவன், இங்கு நடக்க போவது கொள்ளை, நாங்கள் சபலத்துக்கு முக்கியத்துவம் கொடுப்பவர்கள் அல்ல என்று மிரட்டி அமர வைத்தான். இதை தான் செய்யும் தொழில்களில் கவனம் தேவை என்று சொல்கிறோம் - இதுதான் வேலையை பார்த்துக்கொண்டு செல்வது. கொள்ளையடித்துவிட்டு வீட்டிற்கு வந்தவுடன் கொள்ளையா்களுள் ஒருவன் கேட்டான் "வாருங்கள் சீக்கிரம் பணத்தை எண்ணி விடலாம்"" என்று. மற்றொருவன் சொன்னான், பொறு, அவசரம் வேண்டாம். பணம் நிறைய இருக்கிறது நேரம் செலவாகும் அரசே நாம் எவ்வளவு கொள்ளை அடித்தோம் என்று நாளை செய்திகளில் சொல்லி விடும். இதை தான் படிப்பை விட அனுபவம் சிறந்தது என்போம். இதுதான் கடந்த கால அனுபவத்தின் அடிப்படையில் பேசுவது.  வங்கியின் மேலாளா் இச்சம்பவத்தை காவல்துறையிடம் சொல்ல முனைந்த போது அவனுடைய மேல் அதிகாரி தடுத்து அவனிடம் கூறினார் " வங்கியில் கொள்ளை போனது 20 கோடி தான். நாம் மேலும் 30 கோடி பதுக்கி வைத்து மொத்தமாக ஐம்பது கோடி கொள்ளை போய்விட்டது என்று சொல்லி விடுவோம்" என்றார். "காற்றுள்ள போதே தூற்றிக் கொள் ""என்பது இது தான். இதுதான் சாதகமாக பயன்படுத்திக்கொண்டு பேசுவது   இதை கேட்ட மற்றொரு அதிகாரி " வருடம் ஒரு கொள்ளை இவ்வாறு நடந்தால் மிக நன்றாக இருக்கும்" என்றார். ""கலியுகம் "" என்பது இது தான். இப்படி பேசுவது சந்தர்ப்பம் சூழ்நிலைகளை மட்டுமே பார்த்து பயந்து பயந்து பேசுவது.  மறுநாள் செய்திகளில் வங்கியில் 100 கோடி கொள்ளை போய்விட்டது என்று அறிவிக்கபட்டது. கொள்ளையா்கள் அதிர்ந்து போய் பணத்தை எண்ண தொடங்கினர். எவ்வளவு எண்ணியும் அவா்களால் இருபது கோடிகளுக்கு மேல் போக முடியவில்லை. கொள்ளையா்களில் ஒருவன் எரிச்சல் அடைந்து "" நாம் உயிரை பணயம் வைத்து இருபது கோடி கொள்ளையடித்தோம். ஆனால் வங்கி அதிகாரிகள் சிரமம் இல்லாமல் எண்பது கோடி கொள்ளை அடித்து விட்டனர். படிப்பின் அவசியம் புரிகிறது இப்பொழுது. இதற்கு தான் படித்திருக்க வேண்டும் "என்றான். இதுதான் 'பேசாமலே செயலில் சாதிப்பது' ! - உண்மையை சொல்லவேண்டும் என்றால் இது நிஜமல்ல கதை - காவல்துறையும் இன்வெஸ்டிகேஷன் பிரிவும் இவர்களை கண்டுபிடித்து சிறையில் அடைத்து நொறுக்கிவிடுவார்கள். இந்த கதையை சிறுகதை பொத்திக்கு அனுப்பி பரிசு பெற பயன்படுத்த வேண்டாம் என்று கம்பெனி சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

No comments:

ARC - 063 -