Wednesday, January 1, 2025

ARC - 009 - கஷ்டத்தில் இருக்கும்போதும் உடன் இருக்க வேண்டும் !



ஒரு தந்தை தன் மகனுக்கு தைரியமும் தன்னம்பிக்கையும் அதிகரிக்க வேண்டும் என விரும்பினர். அதற்காக ஒரு திட்டம் தீட்டினார். " சிறுவனான தன் மகனை அழைத்துக் கொண்டு அவனது தந்தை ஒரு காட்டிற்குச் சென்றார்". அப்போது மகனுக்கு ஒரு சவாலை முன்வைத்தார். ''மகனே, இப்போது உனக்கு முன் ஒரு பெரிய சவால் உள்ளது. அதில் வெற்றி பெற்றால், தைரியம் மிக்க எதற்கும் அஞ்சாத பெரிய வீரனாகி விடுவாய்!” என்றார். சிறுவன் ஆர்வத்துடன் சவாலை சந்திக்கத் தயாரானான். அவனிடம் சில நிபந்தனைகள் விதித்தார். அதன்படி, இன்று இரவு முழுவதும், நீ தனியாக இந்தக் காட்டிலேயே இருக்க வேண்டும். அவன் இரவு முழுவதும் கண்கட்டை தவிர்க்காமல் அவிழ்க்காமல் இருக்க வேண்டும். மறுநாள் சூரியன் உதிக்கும் வரை அங்கிருந்த அடி மரக்கட்டையின் மேலேயே அமர்ந்திருக்க வேண்டும். வீட்டிற்கு ஓடி வந்து விடவும் கூடாது. வெளியில் யாரிடமும் இதைப் பற்றி சொல்லக்கூடாது. அந்த சிறுவன் அரை மனதோடு ஒத்துக் கொண்டான். அவனது கண்களைத் தந்தை துணியால் இறுகக் கட்டினார். பிறகு, தந்தை திரும்பிச் செல்லும் காலடி ஓசை, மெல்ல மெல்ல மறைந்தது. அந்த மரக்கட்டையின் மேல் கண்ணை கட்டிக் கொண்டே நிலையிலேயே உட்கார்ந்தான். அதுவரை தந்தை அருகில் இருக்கிறார் என்ற தைரியத்தில் இருந்த அவனுக்கு, தூரத்தில் ஆந்தை கத்துவதும், நரி ஊளையிடுவதும், நடுக்கத்தைக் கொடுத்தது. அவனுக்குப் பல விதமான சத்தங்கள் கேட்டன. கொடிய மிருகங்கள் தன்னைச் சுற்றி இருப்பதாக அவன் நினைத்துக் கொண்டான். யாராவது வந்து தன்னை துன்புறுத்துவார்களோ என்ற பயத்துடன் அவன் இருந்தான். காட்டு விலங்குகள் வந்து தாக்கிவிடுமோ, என்ற அச்சத்தில் அவனது இதயத்துடிப்பு வழக்கத்தைத் தாண்டி எகிறியது. நேரம் செல்ல செல்ல அவனுடைய பயம் இன்னும் அதிகரித்தது. பலத்த காற்றினால் மரங்கள் பேயாட்டம் ஆடின,கிளைகள் முறிந்து விழும் சத்தம் கேட்டது. மழை வேறு தூறத் தொடங்கியது. கடுங்குளிர் ஊசியாய் உடலைத் துளைத்தது. மிகவும் பயந்து போய்விட்டான். ‘அய்யோ! இப்படி அனாதையாக தவிக்க விட்டு தந்தை போய்விட்டாரே! யாராவது வந்து என்னைக் காப்பாற்றுங்களேன்." என்று பலமுறை கத்திப் பார்த்தான், சிறிது நேரத்தில், இனி கத்திப் பயனில்லை என்பது அவனுக்குப் புரிந்தது. ஆனாலும் கண்கட்டை அவிழ்க்கவில்லை. திடீரென்று அவனுக்குள் ஒரு துணிச்சல், என்ன தான் நடக்கும், பார்ப்போமே. என்று சுற்றுப்புறத்தில் கேட்கும் ஓசைகளை ஆர்வத்துடன் கவனிக்கத் தொடங்கினான். தன் தந்தை சொன்னபடி தைரியத்தை வரவழைத்துக் கொண்டான். கடவுளிடம் பிரார்த்தனை செய்தான். இப்பொழுது மெல்ல மெல்ல டைம் போயிருந்தது, பயம் போயிருந்தது கொஞ்சம் கொஞ்சமாக தைரியம் அவனுக்குள் வந்தது. விடியற்காலையில் லேசாகக் கண்ணயர்ந்தான். இருளும் மெல்ல மெல்ல விலக தொடங்கியது. பொழுது புலர ஆரம்பித்து விட்டது. சூரியன் உதிக்க மெல்ல மெல்ல வெளிச்சம் வந்தது. மறுநாள் சூரியன் உடம்பைச் சுட்டபோது உணர்ந்த சிறுவன், தன் கண் கட்டை அவிழ்த்தான். கண்ணைக் கசக்கிக் கொண்டு எதிரே பார்த்தபோது, அவனுக்கு ஆச்சரியம். ஆனந்தம். அழுகையே வந்துவிட்டது. தந்தை இரவு முழுவதும் தன் மகன் அருகிலேயே அமர்ந்துக் கொண்டு, அவனுக்கு எந்த விதமான தீங்கும் வராமல் பார்த்துக் கொண்டுஇருப்பதை அப்போது தான் அவன் அறிந்தான். பொதுவாக ஒருவர வாழ்க்கையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருந்தால் நாமும் எப்படியாவது சப்போர்ட்டுக்கு இருக்க வேண்டும். இந்த மாதிரி சப்போர்ட்டில் இருக்கும்போது நமக்கு அது பெரிய விஷயமாக இருக்கலாம் இதுபோல நாம் யாரை சப்போர்ட் பண்ணினாலும் சப்போர்ட் கிடைப்பவர்களுக்கு இது மிகவும் பெரிய விஷயம். குறிப்பிட்ட அந்த நாளில் அந்த விஷயம் அவர்களுக்கு கண்டிப்பாக தேவையான விஷயமாக இருக்கலாம். ‘’அப்பா’’ என்று கூவி, அருகில் அமர்ந்திருந்த தன் தந்தையைப் பாய்ந்து தழுவிக் கொண்டான். ‘’அப்பா நீங்க எப்போ வந்தீங்க?’’ என்று ஆவலாகக் கேட்டான். சோர்வும், மகிழ்ச்சியும் கொண்டிருந்த அந்தத் தந்தை, '' நான் எப்போது மகனே உன்னை விட்டுப் போனேன்’’ என்றார். “இரவு இங்குதான் இருந்தீங்களா? பிறகு ஏன் நான் பயந்து அலறியப் போதெல்லாம் என்னைக் கண்டு கொள்ளவில்லை.? ஏன் என்னிடம் எதுவும் பேசவில்லை?” என்று கேட்டான். ‘’உன் மனோதிடம் வளர வேண்டும். நீ எதற்கும் அஞ்சாத வீரனாக வேண்டும், என்பதற்காக மெளனம் காத்தேன். ஏனென்றால், அச்சத்தின் உச்சத்தை எட்டும்போது, துணிச்சல் தானே வரும்’’ என்றார் தந்தை.மகனுக்கு தந்தையின் நோக்கம் புரிந்தது.





No comments:

ARC - 023 - மலிவாக நடந்துகொள்ளும் மனிதர்கள் !

  ஒரு வீட்டுக்கு வேண்டாத விருந்தாளி என்று ஒருவர் சென்று இருந்தார்! கணவன் மனைவியிடம் காபி போட்டு கொண்டுவருமாறு சொன்னான். இங்கே காபி பொடியும்...