Saturday, January 18, 2025

ARC - 085 - பொறுப்புகளை எடுத்து செய்தல் !

 

ஒரு காலத்தில் மிகவும் வசதி படைத்த ஒரு படகின் உரிமையாளர் அதை பெயிண்ட் அடித்து அழகாக்க விரும்பி ஒரு பெயிண்ட் காண்ட்ராக்டரிடம் பணியை ஒப்படைத்தார்! அப்பணியை கண்ணும் கருத்துமாய், கவனத்துடன் செய்து வரும்போது அப்படகின் அடியில் ஒரு சிறிய ஓட்டை இருப்பதைக் கண்ட பெயிண்ட்டர் மிகவும் நேர்த்தியாக அந்த ஓட்டையை அடைத்து சீர் செய்து, பெயிண்ட் வேலையையும் முடித்து, அதன் உரிமையாளரிடம் காண்ட்ராக்ட் பேசியபடி தன் தொகையை வாங்கிக்கொண்டு, மிக அழகாக பெயிண்ட் செய்துள்ளதற்காக பாராட்டையும் பெற்றுக்கொண்டு சென்றுவிட்டார். மறுநாள், அந்தப்படகின் உரிமையாளர் பெயிண்டரை தேடி அவரிடத்திற்கு ஒரு பெரிய தொகை மற்றும் பரிசுடன் வந்தார். "நேற்றே எனக்கு சேர வேண்டியதை தந்து விட்டீர்களே ஐயா" என்றார் பணிவாய்! அதற்கு அவர் "இது நீங்கள் செய்த பெயிண்ட்டிங்காக அல்ல! நீங்கள் அடைத்த படகின் ஓட்டைக்காக! " " அது ஒரு சிறிய வேலை! அதற்குப்போய் ஏன் இதெல்லாம் " என்றார் பெயிண்ட்டர்! அதற்கு அந்த படகின் உரிமையாளர் சொன்னார். "நண்பரே! உங்களுக்குத் தெரியாது என்ன நடந்தது என்று! நான் உங்களை பெயிண்ட் செய்ய சொன்னபோது அதிலிருந்த ஓட்டையை முற்றிலும் மறந்திருந்தேன்! பெயிண்ட் காய்ந்தபின் என் குழந்தைகள் அந்த படகை எடுத்துக்கொண்டு விளையாட்டாய் மீன் பிடிக்க போய்விட்டனர்! அவர்களுக்கும் படகில் ஓட்டை இருந்தது தெரியாது! அவர்கள் படகை எடுக்கும் போது நானும் வீட்டில் இல்லை! வீட்டிற்கு திரும்பி வந்தபோது படகை எடுத்துக்கொண்டு குழந்தைகள் மீன்பிடி விளையாட போய் உள்ளதாக கேள்விப்பட்ட போதுதான் படகில் இருந்த ஓட்டை ஞாபகம் வந்தது! மிகவும் பதறிப்போய் அவர்களைத் தேடி ஓடினேன், என்ன ஆயிற்றோ என்று! அவர்கள் மகிழ்ச்சியாய் குதூகலத்துடன் திரும்பி வந்துகொண்டிருப்பதை பார்த்தவுடன் நெகிழ்ந்துபோனேன்! ஓடிப்போய் அந்த ஓட்டையை தேடினேன்! வெகு கவனமாய், அக்கறையோடு சரிசெய்யப்பட்டிருந்த்தை கண்டவுடன் மிகவும் ஆச்சர்யமான உங்கள் செயலை பாராட்ட ஓடி வந்தேன். இந்த சிறிய செயல்தான் மகத்தாய் சில உயிர்களை காப்பாற்றியுள்ளது" என்றார்! நாமும் நம் வாழ்வில் கடமையே என காரியமாற்றாமல், எதையும் பிரியமாய், கவனமாய், அக்கறையாய் ,பொறுப்பாய் செய்வோம்! மேலும் பொறுப்புகளை எடுத்து செய்யும்போது சமூக அக்கறையும் கொஞ்சம் இருந்தால் வாழ்க்கை இன்னுமே சிறப்பானதாக அமையும் !

ARC - 084 - சமூகத்துக்கு உண்மையாக இருந்தால் ?



ஒரு கோழிப்பண்ணை முதலாளியை பேட்டி எடுக்க வந்திருந்தார்கள். உங்கள் கோழிகள் எல்லாம் கொழு கொழுவென்று இருக்கிறதே? அதற்குக் காரணம் என்ன என்று கேட்டனர். பண்ணைக்காரர், அதெல்லாம் ஒன்னுமில்லீங்க, நான் அவைகளுக்கு, பாதாம், பிஸ்தா எல்லாம் கொடுக்குறேன், அதனாலத்தான் இப்படி இருக்கு என்றார். வந்தவர்கள், அதைக் கேள்விப்பட்டுத்தான் நாங்கள் இங்கே வந்தோம். நான்கள் எல்லாம் வருமானத்துறை அதிகாரிகள், எடு கணக்கு நோட்டை என்று சொல்லி 50,000 ரூபாய் அபராதம் விதித்தனர். பண்ணைக்காரர், தலையில் கையைவைத்துக் கொண்டு வருத்தமாக இரண்டு நாள் சாப்பிடவில்லை. ஒருவாரம் கழித்து, ஒரு கும்பல் வேனில் வந்திறங்கியது. உங்கள் கோழிக்கெல்லாம் என்ன தீனி போடுகிறீர்கள் என்று கேட்டனர். பண்ணைக்காரர் சுதாரித்துக் கொண்டு, இந்தமுறை வந்தவர்கள் மூக்கை அறுக்கிற மாதிரி ஏதாவது பதில் சொல்லனும்னு, நான் ஒன்றுமே போடுவதில்லை என்றார். வந்தவர்கள் நாங்கள் (மிருகவதை தடுப்பு சட்டம்) ஜீவ காருண்ய சங்கத்திலிருந்து வந்துள்ளோம். நீங்கள் கோழிகளை பட்டினி போட்டதற்காக உங்களுக்கு ரூபாய் 50,000 அபராதம் என்று பணத்தைப் பிடுங்கிக்கொண்டு, ரசீது கொடுத்தனர். பண்ணையார் நிலைமை கேட்கணுமா? என்னடாயிது, எதைச் சொன்னாலும் பணம் பிடுங்குரானுங்க... என்றிருந்த நிலையில்... மூன்றாவது அணி ஒன்று வந்து, அதே போல உங்கள் கோழிகளுக்கு என்ன சாப்பாடு போடுறீங்க என்றனர். பண்ணையார் பாதி பயத்துடன், அதுங்க கிட்ட ஆளுக்கு ஒரு அனா கொடுத்துடுறேன். அதுங்க எதையோ வாங்கி தின்னுட்டு வந்திடுது. என்னா திங்குதுனு எனக்குத் தெரியாது என்று சொல்லி ஒருவழியாக தப்பித்தார். இந்த சமூகத்துக்கு நாம் உண்மையாக இருந்தால் நாம் என்ன செய்தாலும் அதனை நம் மூலமாகவே தெரிந்துகொண்டு பின்னாட்களில் நமக்கே ஆப்பு வைத்து விடுவார்கள் ! இவர்களுக்கு நிறைய விஷயம் தெரிந்துகொள்ள வைப்பதை விட நம்முடைய தொழில்களை வருமானத்தை இரகசியமாக வைத்துக்கொண்டு சந்தோஷமாக இருப்பதே நல்லது !

ARC - 083 - தேவையற்ற போட்டிகள் எதுக்கு ?


ஒரு அரங்கத்தில் ஒரு என்ஜினீயர் மற்றும் ஒரு டாக்டர் இவர்களில் யார் கெட்டிகாரங்கன்னு ஒரு விவாதம் வந்தது. அதை எப்படியாவது நிரூபிக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். இருவரும் ஒத்துக்கொண்டார்கள். என்ஜினீயர் ஓர் கிளினிக் திறந்தார். வாசலில் ஒரு போர்டு மாட்டினார். அதில் எல்லா நோய்களும் குணப்படுத்தப்படும். பீஸ் 3௦௦ ரூபாய். அப்படி குணமாகவில்லையென்றால் 1000 ரூபாயாக திருப்பி தரப்படும் என்று. அந்த டாக்டருக்கு இதை பார்த்து விட்டு இவனை எப்படியாவது ஏமாற்றிவிடணும்னு அந்த கிளினிக் சென்று. சொன்னார். "எனக்கு எந்த ருசியும் தெரியவில்லை. குணப்படுத்துங்கள். உடனே அந்த என்ஜினீயர் நர்ஸிடம் நம்பர் 22 வது பாட்டில் மருந்து மூன்று சொட்டு இவர் நாக்கில் விடசொன்னார். நர்ஸும் அவ்வாறு செய்ய. உடனே அந்த டாக்டர் இது பெட்ரோல் என அலறினார். அந்த என்ஜினீயர் உங்களுக்கு இப்போது சுவை தெரிய ஆரம்பித்து விட்டது. என சொல்லி 300 ருபாய் வாங்கி விட்டார். டாக்டர் மிகவும் கோபமடைந்து சிறிது நாள் கழித்து மீண்டும் அங்கு சென்று. என்னுடைய ஞாபக சக்தி குறைந்து விட்டது என மருந்து கேட்டார். உடனே எஞ்சினீயர் நர்சிடம் அந்த நம்பர் 22 ல் உள்ள மருந்தை 3 சொட்டு வாயில் விட சொன்னார். உடனே டாக்டர் அது வாய் சுவைக்கான மருந்து என்றவுடன். உங்கள் ஞாபக சக்தி திரும்ப வந்து விட்டது என எஞ்சினீயார் 300 ருபாய் வாங்கிவிட்டார். மீண்டும் டாக்டருக்கு, கோவம் & அவமானம். மீண்டும் சிறிது நாட்கள் கழித்து டாக்டர் அந்த கிளினிக் சென்று என் கண் பார்வை குறைந்து விட்டது சரிசெய்ய கேட்டார். உடனே அந்த என்ஜினீயர் இந்தாருங்கள் 1000 ருபாய் என்றார். அந்த டாக்டர் உடனே இது 500 ருபாய் நோட். 1000 ருபாய் என்கிறீர்களே என்றார். பின். அவரே 300 ரூபாயை கொடுத்துவிட்டு வெளியே சென்றார்! - இங்கே எப்போதுமே நமக்கு திறமை இருப்பதற்காக வேறு ஒரு திறமையாளரின் சாதுரியமான திறமைகளோடு போட்டி போடவேண்டும் என்று நினைக்க கூடாது !

ARC - 082 - மோசடிகளால் பாதிக்கப்படுதல் கஷ்டமானது !



ஒரு காலத்தில் சந்தைக்கடையில் இரண்டு பையன்கள் மீன் விற்றுக் கொண்டிருந்தனர். வியாபாரம் மிகவும் மந்தமாகத்தான் இருந்தது. சற்று நேரம் கழித்து ஒரு வாடிக்கையாளர் வந்தார். முதல் பையனிடம் சென்று மீன் விலை விசாரித்தார். “ஒரு கிலோ 100 ருபாய் ஆகும், சார்,” என்று அவன் கூறினான். சற்று தூரத்தில் இரண்டாவது பையனும் அதே வகை மீனை வைத்துக்கொண்டிருந்ததால், அவனிடம் சென்று இந்த விலைக்குக் குறைவாகக் கொடுக்கச்சொல்லி, பேரம் பேசி வாங்கலாம் என்று நினைத்து அவனை அணுகினார். விலை என்னவென்று விசாரித்தபோது, அவனோ, “ மீன் விலை ஒரு கிலோ 300 ருபாய் ஆகும், சார்,” என்று கூறினான். விலையைக்கேட்டுத் திடுக்கிட்டுப்போன அவர், “ என்னப்பா இது? அந்தப் பையனும் இதே மாதிரி மீன்தான் வைத்திருக்கிறான். அவன் விலை 100 ரூபாய் என்று சொல்கிறான். நீ அதே மாதிரி மீனுக்கு விலை 300 ரூபாய் என்று சொல்கிறாயே. இது நியாயமா?” என்று வினவினார். அந்தப் பையனோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் சொன்னான்: “ சார், பார்க்கத்தான் இரண்டும் ஒரே மாதிரியாகத்தெரியும். ஆனால் என்னுடைய மீன் மிகவும் விசேஷமானது. அதனால்தான் கூடுதல் விலை,” என்றான். “அப்படி என்னப்பா விசேஷம் உன் மீனில் இருக்கிறது?” என்று கேட்டார் வாடிக்கையாளர். “சார், இது புத்திசாலியான மீன். இதைச் சாப்பிடுபவர்களும் நாளடைவில் புத்திசாலியாகி விடுவார்கள். அதனால்தான் இவ்வளவு விலை,” என்றான் பையன். “உண்மையாகவா?” என்று வியந்தார் வாடிக்கையாளர். “வாங்கிப்பாருங்கள், சார், உங்களுக்கே தெரியும்,” “சரி, சரி, ஒரு கிலோ கொடு. “ட்ரை” பண்ணிப் பார்க்கிறேன்”, என்று சொல்லி, ஒரு கிலோ மீனை 3௦௦ ருபாய்க்கு வாங்கிச் சென்றார். அடுத்தடுத்து தொடந்து 6 நாட்களுக்கு அதே மீனை அதே பையனிடம் அதே விலைக்கு வாங்கிச் சென்று சாப்பிட்டுவந்தார்.
புத்திசாலித்தனத்தில் ஏதாவது முன்னேற்றம்...? ம்ஹும்....! எதுவும் தெரியவில்லை. அப்போதுதான் அவருக்குப் புரிந்தது “புத்திசாலி மீன்” என்று அந்தப் பையன் சொன்னது எல்லாம் வெறும் பித்தலாட்டம் என்று. கடுமையான கோபம் வந்துவிட்டது அவருக்கு. “இன்று அவனைப்போய் “உண்டு அல்லது இல்லை” என்று ஆக்கிவிடவேண்டியதுதான் என்ற தீர்மானத்துடன் சந்தைக்குச் சென்றார். அந்தப் பையனிடம் சென்று, தன் கோபத்தை வெளிக்காட்டாமல், “என்னப்பா, அந்த புத்திசாலி மீன் இருக்கா?”, என்று இவர் கேட்க, இவரின் கோபத்தைப் புரிந்துகொள்ளாமல் அவனும், “ஓ, இருக்கே. உங்களுக்காகவே தனியாக எடுத்து வைத்திருகிறேனே!” என்று உற்சாகமாகக் கூறினான். வந்ததே கோபம் அவருக்கு! “அயோக்கியப் பயலே! என்னையா ஏமாற்றப் பார்க்கிறாய்? உன் பேச்சைக்கேட்டு ஒரு வாரமாக நானும் அந்த மீனை வாங்கிச் சாப்பிட்டுப் பார்த்துவிட்டேன். அணுவளவும் முன்னேற்றம் இல்லை. புத்திசாலி மீனும் கிடையாது, ஒரு மண்ணும் கிடையாது. என்னை ஏமாற்றிவிட்டாய். உடனடியாக என் பணத்தையெல்லாம் திருப்பித் தந்துவிடு. இல்லையென்றால் உடனடியாகப் போலீசைக் கூப்பிட்டுவிடுவேன்”, என்று கத்தினார். பையனோ அலட்டிக்கொள்ளாமல் பதில் சொன்னான்: சார்,இங்கே பாருங்க. இதே மீனை புத்திசாலி மீன் என்று நான் ஒரு வாரத்திற்கு முன்னால் சொன்னபோது நீங்கள் ஆட்சேபிக்கவேயில்லை. இப்போ பாருங்க, ஒரு வாரத்திலேயே இது புத்திசாலி மீன் இல்லை என்று நீங்களே கண்டு பிடித்துவிட்டீர்கள். என்ன பிரமாதமான முன்னேற்றம்! இதைப் போய் முன்னேற்றம் இல்லை என்று சொல்கிறீர்களே, சார் ! தொடர்ந்து சாப்பிடுங்க, சார். இன்னும் பிரமாதமான முன்னேற்றம் கிடைக்கும்.” வாடிக்கையாளர் வாயடைத்து நின்றார். இப்படித்தான் மோசடியான பணம் சேர்ப்பு ஆள் சேர்ப்பு திட்டங்களில் அல்லது வேஸ்ட்டான கோச்சிங்களில் பணத்தை போடுபவர்கள் செய்வது தெரியாமல் தவித்து நிற்கின்றார்கள் !

ARC - 081 - நம்முடைய பேச்சுகள் நம்மை கட்டுப்படுத்த கூடாது !



ஒரு ஆசிரியர் இருந்தார். அவரிடத்தில் பல மாணவர்கள் படித்து வந்தனர். ஒவ்வொருவருமே நல்ல அறிவாளிகளாக இருந்தனர். அதில் ஒரு மாணவன் எல்லோரையும் விட மிருந்த புத்திசாலியாக விளங்கினான். ஓயாத ஆர்வத்தோடு ஒவ்வொரு நாளிலும் புதிய புதிய காரியங்களைக் கற்றுக் கொண்டான். இதனால் அங்கிருந்த அனைத்து மாணவர்களிலும் அவனே சிறந்தவனாகத் திகழ்ந்தான். ஆசிரியரும் அவனிடம் தனிப்பட்ட அன்பும், கவனமும் செலுத்தினார். சிறிது காலம் சென்றது. அவனிடம் பல மாறுதல்கள் தெரிய ஆரம்பித்தன. அவன் எல்லோரையும் ஏளனமாக நோக்க ஆரம்பித்தான். தன்னை விட மூத்த மாணவர்களைக் கூட மதிப்பதில்லை. பலருக்கு மத்தியில் மூத்த மாணவர்களிடம் கடினமாகக் கேள்வி கேட்டு, அவர்கள் விடை தெரியாமல் விழிப்பதைப் பார்த்து கைகொட்டிச் சிரித்து, அவர்கள் அவமானத்தில் அழும்வரை கேலி செய்யத் தொடங்கினான். ஆசிரியரின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டிவிட்டது. இந்த அகம்பாவம் அவனை அழித்து விடும் என்பதை உணர்ந்தார். ஒரு நல்ல மாணவன் நாசமாவதை அவர் விரும்பவில்லை. அவனது பிழையை அவனுக்கு உணர்த்த விரும்பினார். நேரடியாக அறிவுரை சொன்னால் அவன் கண்ணை மறைக்கும் அகம்பாவத்தில் அவரையே கூட எதிர்த்துப் பேசக் கூடும். வேறொரு வழியை யோசித்தார். மறுநாள் அவனை அழைத்தார். "மகனே! இன்று அதிகாலையில், பக்கத்து கிராமத்தில் உள்ள என் நண்பர் ஒருவர் இறந்து விட்டார். அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. நீ போய் பக்கத்துத் தெருவிலுள்ள தச்சு ஆசாரியிடம் போய் விவரத்தைச் சொல்லி ஒரு தரமான சவப்பெட்டியை செய்து வைக்கச் சொல். இன்று மதியம் அவரது அடக்கத்திற்குத் தேவைப் படுகிறது. இதை உன்னால் மட்டுமே சிறப்பாகச் செய்ய முடியும் " என்றார். கடைசியாக அவர் அவனை உயர்த்திச் சொன்ன வார்த்தைகள் அவனை மிகவும் உற்சாகப் படுத்தி விட்டன. “இதோ உடனே. செய்து முடிக்கிறேன் ஐயா" என்று சொல்லிவிட்டு ஆசாரி வீட்டுக்கு விரைந்தான். ஆசாரி அவனை வரவேற்று அவன் வந்த விஷயத்தைக் கேட்டார். அவனும் மதியத்திற்குள் ஒரு தரமான சவப்பெட்டி வேண்டுமென்ற விஷயத்தை சொன்னான். ஆசாரி இறந்து போனவரைக் குறித்த விபரங்களைக் கேட்டார். அவனும் ஆசிரியர் சொன்னபடியே " அவர் தர்க்க சாஸ்திரத்தை கரைத்துக் குடித்தவர். இரு நூறுக்கு மேற்பட்ட நூல்களை எழுதியவர். பத்து முறை அரசாங்கத்தால் சிறந்த அறிஞருக்கான விருதினைப் பெற்றவர். பல அயல் நாடுகளிலும் கூட இவரது மாணவர்கள் உண்டு. " அவன் சொல்லி முடிப்பதற்குள் ஆசாரி சூடாகி விட்டார். "ஏன்டா! இன்னிக்கு நீ பொழுது போக்க நான் தான் கிடைச்சேனா? செத்த பிணத்தோட விவரம் சொல்லாம வேறென்னமோ உளர்றியே! நீ படிச்சவன்தானா? " என்றார். இந்தக் கேள்வி அவனை ஆத்திரமூட்டியது. " அவரைப் பத்தி இவ்வளவு சொல்லியும் புரியலைன்னு சொன்னா நீங்கதான் ஒரு அடி முட்டாள் " என்றான். ஆசாரி " அடேய் அறிவு கெட்டவனே! என்னதான் படிச்சிருந்தாலும், விருதெல்லாம் வாங்கி இருந்தாலும் எனக்கு அது பிணந்தான். எனக்கு வேண்டியது அதோட உயர, அகலந்தான். நீங்க படிக்கிற படிப்பெல்லாம் உடம்புல உசிரு இருக்கிற வரைக்கும் தான். உனக்குப் பெட்டி வேணும்னா மரியாதையா போய் அளவெடுத்துக் கிட்டு வா" என்றார். எங்கோ பளீரென்று அடி விழுந்தது அவனுக்கு. "மனித ஞானம் இவ்வளவுதானா? இதுக்காகவா இத்தனை பேரை அவமானப் படுத்தினேன்? "அவமானம் பொங்கியது. கூனிக் குறுகியபடியே ஆசியரின் முன்னால் போய் நின்றான். ஆசிரியர் சிரித்துக் கொண்டே கேட்டார்," என்னப்பா! சவப்பெட்டி அடிச்சாச்சா ". அவன் பதில் சொன்னான். "அடிச்சாச்சு. என்னோட தலைக் கனத்துக்கு ". என்னதான் படித்தாலும் இது அழியப் போகிற சரீரம் தான். இதை உணர்ந்து மனத்தாழ்மையாய் நடப்பதே உண்மையான ஞானம். இப்படித்தான் ஒருமுறை மிகவும் பேர் பெற்ற ஒரு சொற்பொழிவாளர் மன நல மருத்துவமனை ஒன்றினைப் பார்வையிட வந்தார்.  சொற்பொழிவாளர் அவர்களிடம் பேச விரும்பினார். அங்கிருந்த நோயாளிகள் அனைவரையும் ஓரிடத்தில் உட்கார வைத்திருந்தனர். அங்கிருந்த அதிகாரிகள் மகிழ்வுடன் சம்மதித்தனர். அவரும் பேச ஆரம்பித்தார். மன நலம் அற்ற அந்த நோயாளிகள் ஒவ்வொருவரும் ஒரு திசையைப் பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒரே ஒரு நோயாளி மட்டும் அவர் பேசுவதை மிக உன்னிப்பாகக் கவனித்துக் கொண்டிருந்தார். அவருடைய இமைகள் கூட அசையவில்லை. சொற்பொழிவாளரின் ஒவ்வொரு வார்த்தையையும் கவனமாகக் கேட்டுக் கொண்டிருந்தார். மன நல மருத்துவமனை என்பதால் சொற்பொழிவாளர் எதையும் எதிர் பார்க்கவில்லை. ஆனால் அந்த ஆள் தீவிரமாகக் கவனித்தது குறித்து மிக்க மகிழ்ச்சியடைந்தார். பேச்சு முடிவுற்றதும் அந்த ஆள் எழுந்து போய் அங்கிருந்த வார்டனிடம் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தார். சொற்பொழிவாளரும் தன்னுடைய பேச்சுக் குறித்து அவர் ஏதோ சொல்லிக் கொண்டிருக்கிறார் என்பதை புரிந்து கொண்டார். பின்னர் வார்டனிடம் அந்த ஆள் என்ன சொன்னார் என்று வினவ வார்டன் சிறிது தயங்கிவிட்டு சொன்னார்,'''என்ன கொடுமையடா சாமி, இவனெல்லாம் வெளியே இருக்கிறான், நான் உள்ளே இருக்கிறேன்.'என்கிறான் !


ARC - 080 - எப்போதுமே மதிப்பு கொடுக்க வேண்டும் !

\


ஒரு உழவன் தன் மனைவியின் மீது உயிரையே வைத்திருந்தான். மனைவி அவனிடம், "எனக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும். ஆசையாக உள்ளது!” என்றாள். மனைவியின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற நினைத்தான் அவன். "இது மாம்பழம் பழுக்கும் பருவம் அல்ல. அரண்மனைத் தோட்டத்தில் உள்ள மாமரத்தில்தான் எப்போதும் மாம்பழம் கிடைக்கும். என்ன செய்வது?” என்று சிந்தித்தான் அவன். நள்ளிரவில் யாரும் அறியாமல் அரண்மனைத் தோட்டத்திற்குள் நுழைந்தான். நீண்ட நேரம் தேடி மாம்பழம் இருந்த மரத்தை கண்டுபிடித்தான். உயரமாக இருந்த மரத்தில் முயற்சி செய்து ஏறினான். மாம்பழத்தை பறித்தான். பொழுது புலரத் தொடங்கியது. மரத்தைவிட்டு இறங்கினால் காவலர்களிடம் சிக்கிக் கொள்வோம். இருட்டும் வரை மரத்திலேயே ஒளிந்து இருப்போம் என்று நினைத்தான். மரத்தின் கிளைகளுக்கு இடையே ஒளிந்து கொண்டான்.அவனுடைய கெட்ட நேரம், அரசர் தம் ஆசிரியருடன் அங்கே வந்தார். அவன் ஒளிந்திருந்த மரத்தின் நிழலில் அவர்கள் இருவரும் நின்றனர். அங்கிருந்த காவலர்கள் அரசர் அமர்வதற்காக நாற்காலி ஒன்றைக் கொண்டு வந்தனர். அதில் அமர்ந்தார் அவர். ஆசிரியரைப் பார்த்து, "இப்போது நான் ஓய்வாகத்தான் இருக்கிறேன். நீங்கள் பாடம் நடத்தலாம்! ” என்றார். அரசே! அப்படியே செய்கிறேன்! ” என்ற ஆசிரியர் தரையில் அமர்ந்தார். அவருக்குப் பாடம் சொல்லத் தொடங்கினார். மரத்தில் ஒளிந்து இருந்த அவன் இதைப் பார்த்தான். "இவர்கள் இருவரும் என்னைவிட முட்டாள்களாக இருக்கிறார்களே” என்று நினைத்தான். "இங்கே மூன்று முட்டாள்கள்! ” என்றபடி கீழே குதித்தான். இதைக் கேட்ட அரசன், "இங்கே மூன்று பேர்தாம் இருக்கிறோம். இவன் என்னையும் முட்டாள் என்கிறானே. ” என்று கோபம் கொண்டார். அவனைப் பார்தது,"எங்கள் இருவரையும் உன்னுடன் சேர்த்து முட்டாள்கள் என்று சொல்கிறாயா? நாங்கள் முட்டாள்களா? எங்களை முட்டாள்கள் என்று நிரூபிக்காவிட்டால் உன் உடலில் உயிர் இருக்காது! ” என்று கத்தினார் மன்னர். நடுக்கத்துடன் அவன், "அரசே! நான் ஏன் சொன்னேன் என்பதற்கு விளக்கம் சொல்கிறேன். மாம்பழப் பருவம் அல்லாத காலத்தில் என் மனைவி மாம்பழத்திற்கு ஆசைப்பட்டாள். அரண்மனைத் தோட்டத்தில்தான் மாம்பழம் கிடைக்கும். அங்கே சென்றால் உயிருக்கு ஆபத்து என்பது எனக்கு நன்றாகத் தெரியும். இருந்தும் மனைவியின் மீது கொண்ட அன்பினால் இங்கே வந்து ஆபத்தில் சிக்கிக் கொண்டேன். என்னை நீங்கள் முட்டாள் என்று ஒப்புக் கொள்வீர்கள்.” மதிப்பிற்கு உரியவர் ஆசிரியர். எப்போதும் அவர் உயர்ந்த இருக்கையில் அமர வேண்டும். மாணவர்கள் கீழே அமர்ந்து பணிவாகப் பாடம் கேட்க வேண்டும். ஆனால், நீங்களோ அரசர் என்பதால் ஆசிரியரை மதிக்கவில்லை. நாற்காலியில் அமர்ந்து உள்ளீர். ஆசிரியரை மதிக்காத நீங்கள் இரண்டாவது முட்டாள்.” "எந்த நிலையிலும் ஆசிரியர் தன் பெருமையை விட்டுத் தரக்கூடாது. பொருளாசை காரணமாக இவர் தன் நிலையைவிட்டுக் கீழே அமர்ந்து உங்களுக்கு பாடம் சொல்லித் தந்தார். இவர் மூன்றாவது முட்டாள்!” என்றான் அவன். இதைக் கேட்ட அரசர், "ஆசிரியருக்கு மதிப்பு அளிக்காதவன் முட்டாள், என்பதை உன்னால் அறிந்து கொண்டேன். இனி இப்படிப்பட்ட தவறு செய்ய மாட்டேன்! ” என்றார். அவனுக்கு ஒரு கூடை மாம்பழமும், பரிசும் தந்து அனுப்பி வைத்தார்.

 

Friday, January 17, 2025

ARC - 078 - மனதை கவனமாக பார்த்துக்கொள்ளவேண்டும் !



ஒரு குரு வெளிநாட்டுப் பயணம் செய்வதற்காக, மிகப் பிரபலமான விமானம் ஒன்றில் பயணம் செய்தார். விமானம் நடுவானில் பயணித்தபோது பணிப் பெண், எல்லாருக்கும் வரவேற்பு பானமாக விலை உயர்ந்த மதுபானத்தைக் கொடுத்து உபசரித்தபடி வந்து கொண்டிருந்தார். இப்போது குருவின் முறை வந்தது. அவரிடமும் பணிப் பெண் ஒரு மதுக்கோப்பையை நீட்டினார். அவர் வாங்க மறுத்துவிட்டார். பணிப் பெண், " ஐயா, எங்கள் விமானத்தில் பயணிக்கிற ஒவ்வொருவருக்கும் நாங்கள் கொடுக்கும் உயர்தர மரியாதை இது. ஏற்றுக் கொள்ளுங்கள் " என்றார். மதகுரு, "அம்மா, உங்கள் அன்புக்கு நன்றி. இது எனக்கு வேண்டாம் " என்றார். பணிப்பெண் விடவில்லை. " உலகிலேயே விலை உயர்ந்த மதுவகை இது. கொஞ்சம் குடித்தால் அப்புறம் விடவே மாட்டீர்கள்” என்றார். அப்போதும் மதகுரு ஏற்றுக் கொள்ளவில்லை. பணிப் பெண் கடைசியாகச் சொன்னார், “"இவ்வளவு தூரம் நான் சொன்னதற்காக ஒரு துளியேனும் பருகுங்களேன். குரு சொன்னார், " அம்மா, நான் ஒரு சிந்தனையாளன் மதுவெல்லாம் பருக மாட்டேன். நீங்கள் ஒன்று செய்யுங்கள். இதை விமான ஓட்டியிடம் கொடுத்து விடுங்கள் " அவர் அப்படிச் சொன்னதும் பணிப் பெண் ஆடிப்போனார். "ஐயோ, பணியில் இருக்கிற விமானி எப்படி மது அருந்த முடியும்? இதை, அவர் குடித்தால் அவர் புத்தி தடுமாறி விமானம் விபத்துக்கு உள்ளாகுமே. இத்தனை உயிர்கள் பறிபோகுமே " என்று பதறினார். குரு சொன்னார், “சகோதரி, வாழ்க்கையும் இப்படிப் பட்டதுதான். தகாத காரியங்களை செய்தால் புத்தி தடுமாறி விபத்து நேரிடும். “ இதுதான் நாம் வாழ்க்கையில் கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டிய விஷயம் ! - நம்முடைய மனதை நாம் எப்போதும் கவனமாக தடுமாற்றம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் !

ARC - 079 - அனுபவம் இல்லாமல் அளந்துவிட கூடாது !




அவன் ஒரு கடைந்தெடுத்த நாத்திகன். மேடையினின்று பிரசங்கிக்கிறான். "அவன் பிரசங்கம் செய்தால் பிணம் கூடத் துடிக்கும்" என்று. அவன் கட்சிக்காரர்கள் அவனைப் பெருமையோடு புகழ்வார்கள். "கடவுள் இல்லை, மதம் இல்லை, வேதமோ புராணமோ எதுவுமேயில்லை. மதத் தலைவர்கள். "தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக உண்டாக்கிக் கொண்ட கட்டுக்கதைகள். என்று வாய்ஜாலத் திறமையுடன் சாதுரியமாகப் பிரசங்கித்துக் கொண்டிருக்கிறான். அவனுடைய பேச்சுத் திறமையைக் கண்டு ஜனங்கள் திரள் திரளாகக் கூடிவிட்டார்கள். கடைசியாக., "கடவுளுமில்லை. , கத்திரிக்காயுமில்லை. , எல்லாம் பித்தலாட்டம்". எனச் சொல்லி முடித்துவிட்டு. "யாராவது கேள்வி கேட்க வேண்டுமானால் மேடைக்கு வரலாம்". என்றும் அழைத்தான். அந்நகரில் எல்லோருக்கும் நன்கு தெரிந்த. " பெரிய குடிகாரன் ஒருவன் மேடைமீது ஏறினான்". தன் கோட்டுப் பாக்கெட்டிலிருந்து ஒரு ஆரஞ்சுப் பழத்தை எடுத்து. , "தோலை மெதுவாக உரித்தான்".! ! "கேட்க வேண்டிய கேள்வியை கேட்காமல் பழத்தை உரிக்கிறாயே". , எனக் கோபங் கொண்டான் நாத்திகன். "பழத்தை உரித்தவன் சுளை சுளையாகத் தின்று கொண்டே". , பொறு.! பொறு.! " தின்று முடித்து விட்டுக் கேள்வியைக் கேட்கிறேன்". , என்று சொல்லியவாறு ரசித்துத் ஆரஞ்சு பழத்தை தின்று கொண்டிருந்தான். தின்று முடித்த பின்பு நாத்திகனை நோக்கி. , "பழம் இனிப்பாய் இருக்கிறதா"? . எனக் கேட்டான், "பைத்தியக்காரனே".! "நான் தின்று பார்க்காமல் பழம் இனிப்பா. , இல்லை புளிப்பா என்று எவ்வாறு சொல்லமுடியும்". , என்றான் நாத்திகன் ஆங்காரத்துடன்.! "கடவுள் யார்? அவர் எப்படிபட்டவர்? அவரின் ஆற்றல் என்ன? என்பதை. , " நீ பக்தி மார்க்கத்தில் ஈடுபட்டு பார்த்தால் தானே உனக்குத் தெரியும்".! ! " இப்ப நான் சாப்பிட்ட ஆரஞ்சு பழத்தின் சுவையை பற்றியே உன்னால் தெரிந்து கொள்ள முடியாத போது". பல ஆயிரம் வருடங்களாக நம் மூதாதையர் வணங்கி வழிபட்டு. , நமக்கு வழிகாட்டி பாரம்பரியமாக கொண்டாடிவரும். , "கடவுளை இல்லை என்று எவ்வாறு சொல்லுவாய்"? "அனுபவித்து, ருசித்துப் பார்க்காமல் ஏன் உளறுகிறாய்". , என்றான் அந்த மெகாக்குடிகாரன்.! ! கூடி இருந்த ஜனங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தார்கள். ஒரு பெரிய கூட்டமே நாம் சொன்னதை வாயைப் பொத்தி கேட்டுக் கொண்டிருக்க. , "இந்த குடிகாரப்பயல் நம்மையே மடக்கிவிட்டானே". என நாத்திகன் மூக்கறுபட்டு தலைகுனிந்து போனவன் போனவன் தான்.! !

 

ARC - 077 - கொடுப்பவர்களுக்கு மனம் இல்லை



ஒரு கோவில் மண்டப வாசலில் இரண்டு வழிப்போகர்கள் அமர்ந்து கொண்டிருந்தனர். இரவு நேரம். பெருத்த மழை வேறு. அப்போது அங்கே மற்றொருவரும் வந்து சேர்ந்தார். வந்தவர் நானும் இரவு இங்கே தங்கலாமா என்று கேட்டார். அதற்கென்ன? தாராளமாய் தங்குங்கள் என்றார்கள். சிறிது நேரம் கழித்து எனக்கு சாப்பிட ஏதாவது கிடைக்குமா? என்றார் வந்தவர். முன்னவர் இருவரில் ஒருவர் சொன்னார். என்னிடம் ஐந்து ரொட்டிகள் இருக்கின்றது என்றார். இரண்டாமவர் என்னிடம் மூன்று ரொட்டிகள் இருக்கின்றது என்றவர் ஆக மொத்தம் எட்டு ரொட்டிகள். இதனை நாம் எப்படி மூவரும் சமமாய் பிரித்துக்கொள்ள முடியும்? என்றார். மூன்றாம் நபர் இதற்கு நான் ஒரு வழி சொல்ல்கிறேன். (ஏதேனும் ஆதாயம் கிடைக்குமா என எண்ணுபவனும் தேவை உள்ளவனும் தான் தீர்வு சொல்வான்!) நீங்கள் உங்கள் ரொட்டிகளை ஒவ்வொரு ரொட்டியையும் மூன்று துண்டுகள் போடுங்கள். இப்ப்பொது இருபத்து நான்கு துண்டுகள் கிடைக்கும்! நாம் மூவரும் ஆளுக்கு எட்டு துண்டுகள் எடுத்து கொள்ளலாம் என்றார். இது சரியான யோசனை என்று அப்படியே செய்தனர். ஆளுக்கு எட்டு துண்டு ரொட்டிகளை சாப்பிட்டுவிட்டு உறங்கினார்கள். பொழுது விடிந்தது. மழையும் நின்றது. மூன்றாவதாய் வந்தவர் கிளம்பும்போது உங்கள் உதவிக்கு மிக்க நன்றி என்று சொல்லி எட்டு தங்க நாணய்ங்களை கொடுத்து நீங்கள் உங்களுக்குள் பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டு விடை பெற்றார். மூன்று ரொட்டிகளை கொடுதவர் அந்த காசுகளை சமமாகப்பிரித்து ஆளுக்கு நான்காய் எடுத்துக்கொள்ளலாம் என்றார் . மற்றொருவர் இதற்கு சம்மதிக்கவில்லை. மூன்று ரொட்டிகள் டிகள் கொடுத்த உனக்கு மூன்று காசுகள். ஐந்து ரொட்டிகள் கொடுத்த எனக்கு ஐந்து காசுகள் என்று வாதிட்டார் மூன்று ரொட்டிகள் கொடுத்தவர் ஒப்புக் கொள்ளவில்லை. என்னிடம் மூன்றே ரொட்டிகள் இருந்தபோதும் நான் பங்கிட சம்மதித்தேன். நிறைய இருப்பவன் கொடுப்பது ஒன்றும் பெரிய செயல் ஆகாது. அதனால் என் செய்கையே பாராட்ட தக்கது! என்றாலும் பரவாயில்லை. சமமாகவே பங்கிடுவோம் என்றார். சுமுகமான முடிவு எட்டாத்தால் விஷயம் அரசனின் சபைக்கு சென்றது. அரசனுக்கு யார் சொல்வது சரி என்று புரிபடவில்லை. நாளை தீர்ப்பு சொல்லதாய் அறிவித்து அரண்மனைக்கு சென்றான். இரவு முழுவதும் இதே சிந்தனை. வெகு நேரம் கழித்தே தூங்க முடிந்தது. கனவில் கடவுள் காட்சி அளித்து சொன்ன தீர்பும் அதற்கு அவர் அளித்த விளக்கமும் மன்னரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அடுத்த நாள் சபை கூடியது. மன்னன் இருவரையும் அழைத்தான். மூன்று ரொட்டிகளை கொடுத்தவனுக்கு ஒரு காசும் ஐந்து ரொட்டி கொடுத்தவருக்கு ஏழு காசுகளும் கொடுத்தார். ஒரு காசு வழங்கப்பட்டவர் மன்னா! இது அனியாயம். அவரே எனக்கு மூன்று கொடுத்தார். அரசர் சொன்னார். நீ கொடுத்தது ஒன்பது துண்டுகள். அதிலும் எட்டு துண்டுகள் உன்னிடமே வந்து விட்டது. அவன் தந்தது பதினைந்து துண்டுகள். அவனுக்கும் எட்டுத்துண்டுகள்தான் கிடைத்தது. ஆக நீ தருமம் செய்தது ஒரு துண்டு ரொட்டி. அதற்கு இதுவே அதிகம் என்றார். கொடுப்பதற்கு விருப்பம் இல்லாத ஆட்கள் இப்படித்தான் பின்னாட்களில் கெட்ட பேரை வாங்கிக்கொண்டு கஷ்டப்படுகிறார்கள் !



ARC - 075 - கஷ்டப்படும் மக்களுடைய வாழ்க்கை


மன்னர் ஒரு முறை கிராமங்களை சுற்றிப் பார்க்க குதிரையில் கிளம்பிச் சென்றார். அப்போது வயலில் ஒரே ஒரு பெண் மட்டும் வேலை செய்து கொண்டிருந்தார். மன்னர் அவரிடம், ”மற்றவர்கள் எல்லாம் எங்கே?”என்று கேட்டார். விசாரிப்பது மன்னர் என்பதை அறியாத அந்த பெண், ”அவர்கள் எல்லாம் மன்னரைப் பார்க்கப் போயிருக்கிறார்கள்,” என்று சொன்னார். ”அப்படியானால் நீங்கள் மட்டும் ஏன் போகவில்லை?”என்று மன்னர் கேட்டார். அதற்கு அந்தப்பெண், ”மன்னரைப் பார்ப்பதற்காக ஒருநாள் கூலியை இழக்கும் அளவிற்கு நான் முட்டாள் இல்லை.எனக்கு ஐந்து குழந்தைகள்.அவர்களை காப்பாற்ற வேண்டிய கட்டாயம் எனக்கு இருக்கிறது. அதனால்தான் போகவில்லை, ”என்றார். மன்னர் அவரது கையில் சில நூறு தங்க பணத்தைக் கொடுத்துவிட்டு , ”உங்களது நண்பர்களிடம் சொல்லுங்கள். நீங்கள் எல்லாம் மன்னரைப் பார்க்க சென்றீர்கள்.ஆனால் மன்னரோ என்னைப் பார்க்க வந்தார் என்று..” என கூறிவிட்டு சென்றார். எதையும் தேடி செல்லாதே தகுதி இருந்தால் எல்லாம் உன்னை தேடி வரும் என்பது உண்மை அல்ல. நமக்காக தேர்ந்தெடுத்த தலைவர்கள் நம்மை காப்பாற்ற முயற்சிகளை எடுக்க வேண்டும்.  கஷ்டப்படுபவர்களுக்கு அவர்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்கிறேன் என்று சொல்லி பணத்தை கொள்ளை அடிப்பவர்கள் எல்லோருமே தங்களின் வீட்டை விட்டு வெளியே வந்து இந்த கஷ்டங்களால் பாதிக்கப்பட்ட மனிதர்களின் வாழ்க்கையோடு வாழ்ந்து பார்த்தால் மட்டும்தான் வாழ்க்கையின் கடினத்தன்மை என்னவென்று அவர்களால் புரிந்துகொள்ள முடியும். நாளைய நாளுக்கு சொகுசான வாழ்க்கை இருப்பதால்தான் இன்றைய வாழ்க்கையில் மற்றவர்கள் படும் கஷ்டங்களுக்கு எந்த பொறுப்பும் ஏற்றுக்கொள்ளாமல் இவர்கள் சுயநலத்துக்காக தொடர்ந்து இல்லாதப்பட்டவர்கள் படும் கஷ்டங்களை கண்டும் காணாமல் இருப்பது சரியானதா ? உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள் !



 

ARC - 076 - ப்ரைவசி வாழ்க்கைக்கு அவசியமானது





ஒரு இளைஞர் ஒருவர் தன்னுடைய பழைய ஆசிரியரை சந்திக்கின்றார். அப்போது அந்த முன்னாள் மாணவ இளைஞர் "தன்னைத் தெரிகின்றதா? " என்று அந்த ஆசிரியரிடம் கேட்கின்றார். ஆசிரியரோ "எனக்கு நினைவில் இல்லை எனவே நீங்களே யார் என்று அறிமுகம் செய்து கொள்ளுங்களேன் " என்றார். இளைஞர் கூறினார், "நான் உங்கள் முன்னாள் மாணவன் " என்றார். அதற்கு அந்த ஆசிரியர் "மிக்க மகிழ்ச்சி, எங்கு உள்ளீர்கள், வாழ்க்கை எப்படி உள்ளது, என்ன செய்கிறீர்கள் " எனக் கேட்டார். இளைஞர், "நான் ஆசிரியராக உள்ளேன் ". என்றார். "அவ்வாறு ஆசிரியர் ஆக வேண்டும் என்று எது உங்களைத் தூண்டியது " என வினவினார் அந்த ஆசிரியர். "உங்களால் தான் தூண்டப்பட்டேன். உங்களைப் பார்த்துத் தான் நானும் ஆசிரியனாக வேண்டும் என்ற உணர்வு மேலோங்கியது " என்றார். மேலும் "உங்களுடைய செயல்களின் தாக்கத்தினால் தான் நானும் கற்றுக் கொடுக்கும் தொழிலில் உள்ளேன் " என்றார். " எப்படி என்ன தாக்கம் உங்களிடததிலே உண்டாக்கினேன் " எனக் கேட்டார் ஆசிரியர். " நான் உங்களுக்கு ஒரு கதை கூறட்டுமா? " என்று கூறி சொல்ல ஆரம்பித்தார் அந்த இளைஞர். " ஒரு நாள் என்னுடைய வகுப்புத் தோழர் மிகவும் விலையுயர்ந்த கடிகாரத்தை அணிந்து வந்தார். அப்படிப்பட்ட ஒரு கைக்கடிகாரம் வாங்குவது என்னுடைய சக்திக்கு அப்பாற்ப்பட்டது. எனவே அதனைத் திருட நினைத்து அவர் கடிகாரத்தை பாக்கெட்டில் வைத்திருந்த போது எடுத்து விட்டேன். அவர் வகுப்பறைக்குள் வந்தவுடன் தன்னுடைய கடிகாரம் காணவில்லை என்று ஆசிரியரிடம் புகார் செய்தார். ஆசிரியர் அவர்களும் இவருடைய கடிகாரத்தை எவர் எடுத்து இருந்தாலும் அதனை திரும்பக் கொடுத்து விடுங்கள் என அறிவித்தார். நான் எப்படி கடிகாரத்தை திருப்பித் தருவேன் என நினைத்து எனக்கு மிகவும் சங்கடமாகப் போய் விட்டது. ஆசிரியர் வகுப்பறையின் கதவை மூடச் செய்தார். எல்லோரையும் எழுந்து வரிசையாக நிற்கச் சொன்னார். எனக்கு மிகவும் அவமானமாகப் போய் விட்டது. அவர் கூறினார், மாணவர்களே வரிசையாக நில்லுங்கள், ஆனால் எல்லோரும் கண்ணை மூடிக் கொண்டு தான் நிற்க வேண்டும் என்றார். அவர் ஒவ்வொருவரின் பாக்கெட்டுகளிலும் கையை விட்டுப் பார்த்துக் கொண்டே சென்றார். என்னுடைய பாக்கெட்டுக்குள்ளும் கையை விட்டார் கடிகாரத்தையும் எடுத்துக் கொண்டார். ஆனால் எல்லோரும் கண்களை மூடி இருந்ததால் எவரும் எதையும் பார்க்க இயலவில்லை. பின்னர் அந்த கடிகாரத்தை உரியவரிடம் கொடுத்து விட்டார். ஆனால் இது பற்றி ஒரு வார்த்தை கூட என்னிடம் கேட்கவில்லை. வேறு எவரிடமும் இது பற்றிக் கூறவோ, சம்பவத்தை விவரிக்கவோ இல்லை. அந்நாளிலே நீங்கள் என்னுடைய மானத்தை காபாற்றினீர்கள் என்னைத் திருடன், மோசடிக்காரன், என்றெல்லாம் திட்டாமல் ஒன்றுமே பேசாமல் இருந்தீர்கள் என்னுடைய கவுரத்தையும், மானத்தையும் காபாற்றினீர்கள். என்னிடமும் எதுவும் கூறவில்லை. அது மட்டுமின்றி கடிகாரத்தின் உரிமையாளரிடமும் இது பற்றி எதுவும் கூறவில்லை. இது எனக்கு ஒரு செய்தியைக் கற்றுத் தந்தது. அது ஆசிரியர் என்பவர் இப்படித் தான். கற்பித்தல் என்பது எவ்வளவு அற்புதம். இதைத் தான் என் வாழ்க்கையிலும் மேற்கொள்ள வேண்டும் என்றும், கற்பித்தலை செய்ய வேண்டும் என விரும்பினேன்" இதனைக் கேட்ட அந்த ஆசிரியர் "அற்புதம்" என்றார். மீண்டும் அந்த இளைஞர் கேட்டார், "இப்பொழுதாவது என்னைத் தெரிகின்றதா" எனக் கேட்டார். அதற்கு மீண்டும் "எனக்கு எதுவும் நினைவில் இல்லை, யார் என்பதும் தெரியவில்லை"? என்றார். "ஏன் தெரியவில்லை " என்று கேட்டார் அந்த இளைஞர். ஆசிரியர் கூறினார், "நானும் அந்த சமயத்தில் கண்ணை மூடிக் கொண்டிருந்தேன்" என்றார். இதுபோல ஒவ்வொருவரின் வாழ்க்கைக்கும் ப்ரைவசி மிகவும் முக்கியமானது. இணையதளத்தின் ப்ரைவசியும் இது போன்றதுதான். இது எல்லாம் ஒரு விஷயமா என்று யோசித்தாலும் இதுவும் ஒரு விஷயம்தான் ! ஒரு தனிப்பட்ட மனிதருடைய வளர்ச்சியானது ப்ரைவசியான தகவல்களை  கவனமாக கையாளுவதன் மூலமாகவே வெற்றியை கொடுக்கிறது 
 

ARC - 074 - சந்தோஷமும் கவலையும் கலந்தது !




ஒரு பெரியவரிடம் அய்யா! நான் துன்பச் சிறையில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கிறேன்” என்றான் ஒருவன். “ என்ன காரணம்?” என்று கேட்டார் ஒரு பெரியவர். “மற்றவர்கள் எனக்குத் துன்பம் கொடுக்கிறார்கள்” என்றான் “உனக்குத் துன்பம் கொடுப்பது உன்னுடைய மனம் தான்” என்றார் பெரிவர் “அப்படியா சொல்கிறீர்கள்?“ “ஆமாம்! ” “அப்படியானால் துன்பத்திலிருந்து விடுபட என்ன வழி?” “மனதைப் புரிந்து கொள். அது போதும். ” “எப்படிப் புரிந்து கொள்வது?” என்றான் அவன். "இந்தக் கதையைக் கேள்“ என்று அவர் சொன்னார்.“ஆசையாக ஒரு பூனையை வளர்த்தார் ஒருவர். அந்தப் பூனை ஒரு நாள் எலியைப் பிடித்து கவ்விக் கொண்டு வந்தது, அவருக்கு அது மகிழ்ச்சியாக இருந்தது. மறுநாள் அந்தப் பூனை, அவர் ஆசையாக வளர்த்த ஒரு கிளியைக் கவ்கிக் கொண்டு வந்தது, அவருக்கு அது அதிர்ச்சியாக இருந்தது, இன்னொரு நாள் அந்தப் பூனை எங்கேயோ சென்று காட்டிலிருந்து ஒரு குருவியைப் பிடித்துக் கவ்விக் கொண்டு வந்தது. இப்போது அவர் மகிழவும் இல்லை. வருந்தமும் இல்லை. எதையாவது பிடிப்பது பூனையின் சுபாவம் என்பதைப் புரிந்து கொள்ள அவருக்குக் கொஞ்ச காலம் ஆயிற்று. தனக்குப் பிடிக்காத எலியைப் பிடிக்கிறபோது இன்பம். தனக்குப் பிடித்தமான கிளியைப் பிடிக்கிறபோது துன்பம், தனக்குச் சம்பந்தமே இல்லாத குருவியைப் பிடிக்கிறபோது இன்பமுமில்லை. துன்பமுமில்லை. ” அவர் கதையை முடித்தார். இவன் சிந்திக்கத் தொடங்கினான். துன்பச் சிறையின் கதவுகள் திறக்கப்படுகிற ஓசை அவன் செவிகளில் விழுந்தது. மனதைப் புரிந்து கொள்கிறவர்களே மகிழ்ச்சியாக வாழ்கிறார்கள். ” - நம்முடைய மனதுடைய மாற்றங்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம்மை கட்டுப்பாட்டில் எடுத்துக்கொள்ள கூடாது ! நம்முடைய தன்மை எப்போதுமே மாறாது. இந்த தன்மையால் உருவாகும் விளைவுகள் பாஸிட்டிவாக இருக்கலாம் அல்லது நெகட்டிவ்வாகவும் இருக்கலாம். நாம்தான் முடிவுகளை எடுக்கும் இடத்தில் இருக்க வேண்டும். 

 

ARC - 073 - தன்னிறைவு நமக்கு தேவைப்படுகிறது !



அந்த ஆசிரியரை எல்லா மாணவர்களும் நேசித்தார்கள். காரணம் மிகவும் கஷ்டமான பாடத்தையும் எளிமையான உதாரணங்களைக் கொண்டு புரிய வைப்பதில் அவர் வல்லவராக இருந்தார். அவரிடம் படித்த மாணவர்கள் பெரிய பெரிய பதவிகளை வகித்தார்கள். பலரும் பல நாடுகளுக்குச் சென்று பிரகாசித்தார்கள். பெரிய தொழிலதிபர்களாகத் திகழ்ந்தார்கள். அவர்களுக்கு எத்தனையோ ஆசிரியர்கள் இருந்திருந்த போதிலும் அவர் மேல் காட்டிய அன்பையும் மரியாதையையும் அவர்கள் மற்றவர்களிடம் காட்டவில்லை. அந்த ஆசிரியரிடம் மட்டும் பெரும்பாலான மாணவர்கள் இன்னும் கடிதம் மூலமும், E மெயில் மூலமும் தொடர்பு வைத்திருந்தார்கள். அவரும் தன் மாணவர்களை மிகவும் நேசித்தார். அவர்களுடைய வெற்றியை தன் சொந்தப் பிள்ளைகளின் வெற்றியென அவர் மகிழ்ந்தார். ஆனால் ஒரே ஒரு உண்மை மட்டும் அவர் மனதில் நெருடலாக இருந்தது. பதவி, பணம், கௌரவம் ஆகியவற்றில் உயர்ந்து விளங்கிய அவருடைய மாணவர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அவருக்குத் தெரியவில்லை. அவர்கள் அனுப்பிய கடிதங்களும், ஈ-மெயில்களும் அதைக் கோடிட்டுக் காண்பித்தன. மன உளைச்சல்கள், பிரச்சனைகள் நிறைந்த வாழ்க்கை முறையில் அவர்கள் வாழ்ந்து வந்தார்கள் என்பதை அவர் உணர்ந்தார். பெரிய பெரிய சாதனைகள் புரிய ஓடிக் கொண்டிருந்த ஓட்டத்தில் மகிழ்ச்சியை அவருடைய மாணவர்கள் தொலைத்திருந்தார்கள். அவருடைய மாணவர்கள் எல்லோரும் அவருடைய எழுபதாவது பிறந்த நாளுக்கு ஒன்று சேர்ந்து அவரைக் கௌரவிக்க முடிவு செய்தார்கள். அவருக்கு அது போன்ற பிறந்த நாள் விழாக்களில் பெரிய ஈடுபாடு இல்லை என்றாலும் அவர்கள் அன்பை மறுக்க முடியாததால் அதற்கு சம்மதித்தார். பெரியதொரு அரங்கத்தில் அவர்கள் அவருடைய பிறந்த நாளன்று ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவர் அதற்கு முந்திய நாள் தன் வீட்டில் தேநீர் அருந்த அவர்கள் அனைவரையும் வரச் சொன்னார். உள்நாட்டிலிருந்தும், வெளிநாட்டிலிருந்தும் பல மாணவர்கள் அவருடைய பிறந்த நாளுக்கு முந்தைய நாளே அவர் வீட்டில் கூடினார்கள். அவரைக் கண்டதில் அவர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி. அவரும் அவர்களை மகிழ்ச்சியுடன் வரவேற்று உரையாடினார். பின் தன் சமையலறைக்குச் சென்ற அவர் பெரிய பாத்திரம் ஒன்றில் தயாரித்து வைத்திருந்த சூடான தேநீரைக் கொண்டு வந்தார். மேசை மீது வைத்திருந்த வித விதமான தம்ளர்களைக் காண்பித்து அவர்களை தாங்களே ஊற்றிக் கொண்டு குடிக்கச் சொன்னார். மிக அழகான வேலைப்பாடுடைய பீங்கான் தம்ளர்கள், வெள்ளி தம்ளர்கள், சாதாரண தோற்றமுள்ள எவர்சில்வர் தம்ளர்கள் அழகில்லாத அலுமினியத் தம்ளர்கள், ப்ளாஸ்டிக் தம்ளர்கள் என்று பல வகைப்பட்ட தம்ளர்கள் மேசை மீது இருந்தன. விலையுயர்ந்த தம்ளரிலிருந்து மிக மலிவான தம்ளர் வரை இருந்ததைக் கவனித்த மாணவர்கள் இயல்பாகவே விலையுயர்ந்த, அழகான தம்ளர்களையே தேர்ந்தெடுத்துக் கொள்வதில் முண்டியடித்துக் கொண்டு போனார்கள். அந்தத் தம்ளர்களில் தேநீரை ஊற்றிக் குடித்த அவர்கள் தேநீரின் சுவை பற்றி ஆசிரியரிடம் புகழ்ந்தார்கள். அந்த ஆசிரியர் ஒரு தேயிலைத் தோட்டத்தில் பிரத்தியேகமாகச் சொல்லித் தருவித்த உயர்தரத் தேயிலையை உபயோகித்து அந்தத் தேநீரைத் தயாரித்ததை அவர்களிடம் தெரிவித்தார். பின் கேட்டார்.” எத்தனையோ பாடங்கள் உங்களுக்கு சொல்லித் தந்திருக்கிறேன். இப்போது ஒரு வாழ்க்கைப் பாடத்தையும் உங்களுக்கு சொல்லட்டுமா?” அவர்கள் ஏகோபித்த குரலில் உற்சாகமாகச் சொன்னார்கள். “தயவு செய்து சொல்லுங்கள்” ” எத்தனையோ தம்ளர்கள் இருந்த போதிலும் நீங்கள் அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டுக் கொண்டு போனீர்கள். அது இயற்கை தான். ஆனால் எடுத்தது எந்த தம்ளராக இருந்தாலும் உண்மையில் உங்களுக்கு முக்கியமானது நீங்கள் குடித்த தேநீர் தான். அதன் சுவையும் தரமும் மட்டுமே நீங்கள் ருசிக்கப் பயன்படுகிறது. உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து எல்லாம் அந்தத் தம்ளர்களைப் போல. வாழ்க்கை தேநீர் போல. தம்ளர்களின் தரம் தேநீரின் தரத்தை எப்படித் தீர்மானிப்பதில்லையோ அது போல உங்கள் வேலை, பணம், பதவி, அந்தஸ்து ஆகியவை உங்கள் வாழ்க்கையின் தரத்தைத் தீர்மானிப்பதில்லை.” “அதை மறந்து இப்போது அழகான விலையுயர்ந்த தம்ளர்களை எடுக்கப் போட்டி போட்டதைப் போல வாழ்க்கையிலும் மிக உயர்ந்த வேலை, மிக அதிகமான பணம், மிக உயர்ந்த பதவி, பலர் மெச்சும் அந்தஸ்து ஆகியவற்றைப் பெற போட்டி போட்டுக் கொண்டு வாழ்வதால் தான் நீங்கள் மன உளைச்சலாலும், பிரச்சனைகளாலும் அவதிப்படுகிறீர்கள். வாழ்க்கை என்ற தேநீரின் தரத்தை இந்தத் தம்ளர்கள் தீர்மானிக்கிறது என்று தப்பர்த்தம் செய்து கொள்வதாலேயே போட்டி, பொறாமை, அவசரம், பேராசை என்ற வலைகளில் சிக்கிக் கொள்கிறீர்கள் தோற்றங்களில் அதிக கவனத்தைத் தரும் போது உண்மையான வாழ்க்கையை நாம் கோட்டை விட்டு விடுகிறோம். வாழ்க்கையை ருசிக்கத் தவறி விடுகிறோம். எத்தனை தான் பெற்றாலும் உள் மனம் அந்த உண்மையை உணர்ந்திருப்பதால் அது என்றும் அதிருப்தியாகவே இருக்கிறது.” அவர் சொல்லி முடித்த போது அந்த மாணவர்களிடையே பேரமைதி நிலவியது. சிலர் பிரமித்துப் போய் அவரைப் பார்த்தார்கள். சிலர் கண்களில் நீர் தேங்கி நின்றது. இருட்டில் இருந்ததால் தெரியாமல் போன பலதையும் வெளிச்சம் வந்தவுடன் தெளிவாகப் பார்க்க முடிந்தது போல அனைவரும் உணர்ந்தார்கள். இத்தனை நாள்கள் அவர் சொல்லித் தந்த பாடங்களை விட இப்போது சொல்லித் தந்த வாழ்க்கைப் பாடத்தை இவ்வளவு எளிமையாக மனதில் பதியும் படி வேறு யாரும் சொல்லித் தர முடியாது என்று நினைத்த அவர்கள் மனதில் அவர் இமயமாக உயர்ந்து போனார். ஒருவன் கண்ணீருடன் கை தட்ட ஆரம்பிக்க அவர் வீடு அடுத்த நிமிடத்தில் கை தட்டல்களால் அதிர்ந்தது. ஒரு கட்டத்துக்கு மேலே அந்தஸ்த்து போட்டியில் பெரிதாக வாழ்க்கையை செலுத்துவது அவ்வளவு சரியானதாக இருக்காது. வாழ்க்கை என்பதே வாழ்வதற்காக மட்டும்தானே, வாழ்க்கையின் உண்மையான சந்தோஷம் வெளியே பண்ணும் மாற்றங்களில் இருக்காது. இந்த உண்மையான சந்தோஷம் நமக்குள்ளே பண்ணும் மாற்றங்களால் அதனால் உருவாகும் தன்னிறைவால் மட்டுமே அமையும். 


 

GENERAL TALKS - சரியான நபருக்கு சரியான நேரத்தில்




நெடுநாட்கள் தொடர் பயணத்தில் இருந்த ஒரு துறவி தன் பயணத்தில் ஒரு ஊருக்கு வந்தார். அப்போது நன்பகல். கடுமையாய் வெயில் அடித்துக் கொண்டிருந்தது. அந்த ஊரில் கடுமையான வறட்சி. துறவிக்கோ கடுமையான தண்ணீர் தாகம். அலைந்து பார்த்தும் எங்கும் நீர் கிடைக்கவில்லை. அப்போது ஒரு இளைஞன் தன வயலில் கிணற்றிலிருந்து நீர் இறைத்துக் கொண்டு இருந்ததைக் கண்டு அங்கு விரைந்து அவனிடம் குடிக்கத் தண்ணீர் கேட்டார். அவனும் தண்ணீர் கொடுக்க அவருக்கு தாகம் தீர்ந்தது. அவர் இளைஞனிடம், “தம்பி,நீ கொடுத்து வைத்தவன். ஊரே வறட்சியின் பிடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் போது, உன் நிலம் மட்டும் பசுமையாக இருக்கிறது. உன் கிணற்றில் மட்டும்தான் நீர் இருக்கிறது. கடவுளின் முழுமையான அருள் உனக்கு இருக்கிறது” என்றார். இளைஞன் சொன்னான், “அய்யா, வந்த வழியில் பார்த்திருப்பீர்கள். இந்த ஊரில் நிலம் எல்லாம் பாறையாக இருக்கிறது. இந்த இடமும் அப்படித்தான் இருந்தது. இரவு பகலாய்க் கடுமையாய் உழைத்து இந்த நிலத்தைச் சீர்திருத்தி அதன் பலன் இப்போதுதான் கிடைத்திருக்கிறது. அப்படி நான் உழைத்ததன் பலனை, சாதாரணமாக வெறும் கடவுளின் அருள் என்று சொல்லி விட்டீர்களே! ” துறவி, “தம்பி, உன் உழைப்பு என்பதெல்லாம் உண்மைதான். இருந்தாலும், கடவுள் அருள் இல்லாமல் உன் கிணற்றில் தண்ணீர் ஊறி உன் வயலில் விளைச்சல் வந்திருக்குமா?” என்று கேட்டார். அதற்கு அந்த இளைஞன், “அய்யா, நான் இங்கு வருவதற்கு முன்னும் இந்த நிலமும் இருந்தது. கடவுளும் இருந்தார். நான் இங்கு வராமல் கடவுள் மட்டும் இருந்த போது இந்த நிலத்தைப் பார்க்கச் சகிக்கவில்லையே! ” என்றான். துறவிக்குப் பதில் சொல்ல முடியவில்லை. சரியான நபருக்கு சரியான இடத்தில் சரியான நேரத்தில் உதவிகள் கிடைக்காதபோதுதான் எல்லா நேரமும் நமக்கு மேலான ஒரு சக்தி என்று இருந்து என்ன பிரயோஜனம் ? என்று தோன்றுகிறது. கஷ்டப்படுபவர்களை அதிர்ஷ்டம் கண்டுகொள்வதே இல்லை !
 

ARC - 072 - பார்வையாலே முடிவுகள் எடுப்பது !


ஒரு காலத்தில் செத்துப்போன ஒருவன் நரகத்துக்கு அனுப்பப்பட்டான். நரகத்தில் மூன்றுவிதமான தண்டனை முறைகள் இருந்தன. மூன்றையும் பார்த்துவிட்டு எந்த தண்டனையை ஏற்றுக்கொள்வதென்று அவனே முடிவு செய்துகொள்ளலாம் என்று சொல்லப்பட்டது. முதலாவது அறைக்குப் போனவன், அங்கே எல்லோரும் தலைகீழாக நின்று கொண்டிருந்ததைப் பார்த்தான். ஒவ்வொருவர் முகத்திலும் வலியின் அவஸ்தை பிரதிபலித்தது. இது வேண்டாம் என்று அடுத்த அறைக்குப் போனான். அங்கே, எல்லோரும் தலையில் பனிக்கட்டிகளைச் சுமந்தபடி இருந்தார்கள். பனிக்கட்டிகள் உருகி வழிந்துகொண்டிருக்க, அந்தக் குளிர்ச்சியில் ஜில்லிட்டு நடுங்கிக் கொண்டிருந்தார்கள். ஒரு நிமிடம் அந்த வேதனையை எண்ணிப் பார்த்தவன், “ஐயோ. இது வேண்டாம்” என்று அடுத்த அறைக்குத் தாவினான். மூன்றாவது அறையில் ஆச்சரியம்! அங்கிருந்தவர்கள் படுரிலாக்ஸ்டாக காபி சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். “ஆஹா. இதுதான் நான் தேடிவந்த இடம். இங்கேயே நான் இருந்துவிடுகிறேனே” என்று தன் முடிவையும் சொல்லிவிட்டான். ”நீங்கள் போய் இந்தக் குழுவில் சேர்ந்துகொள்ளலாம்” என்று அனுமதியும் தரப்பட, உள்ளே போய் ஒரு கப் காபி வாங்கி சுவைக்க கையிலெடுத்ததும் அங்கே ஒரு எஜமானரின் குரல். “ஓகே.! உங்களது காபி இடை வேளை முடிந்துவிட்டது. எல்லோரும் அந்த தீச்சட்டியை எடுத்துத் தலையில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படித்தான் மேலோட்டமாக புரிந்துகொண்டு கஷ்டப்படுவதை தவிர்க்க கூடாது. இங்கே எல்லோருடைய வாழ்க்கையிலும் கஷ்டங்கள் தவிர்க்க முடியாததாகவே உள்ளது. ஒரு இடத்தில் இருக்கும் மனிதர்களிடம் விசாரிக்காமல் பார்வையாலே முடிவுகள் எடுப்பவர்களுடைய வாழ்க்கை இப்படித்தான் இருக்கிறது !

 

ARC - 071 - பொறாமை பிடித்து போட்டு கொடுப்பவர்கள்

 




ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறிவிட்டது. அப்பொழுது அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதைப் பார்த்த நாய் ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது. அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது. சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது. சுவைத்து கொண்டே சத்தமாக, “சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்” என்று கூறியது. இதைக் கேட்ட சிங்கம் “அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது” என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது. இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது. சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது. உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது. அதை கவனித்த நாய் எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது. குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, “இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறி கொள்” என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது. இப்போது அந்த நாய் என்ன செய்திருக்கும் என்று உங்களால் கற்பனை செய்ய முடியுமா? தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, “இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே” என்று உரக்க கூறியது. இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது. இதுபோன்று நாம் பாதுகாப்புக்காக செய்யும் சின்ன விஷயத்தை கூட தேவையே இல்லாமல் மேலதிகாரிகளிடம் போட்டு கொடுக்கும் குரங்குகளை போல நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள். “கடுமையாக உழைப்பதை விட இந்த முட்டாள் பொறாமை ஆட்களுக்கு மத்தியில் திறமையாக பிழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்...!!!

GENERAL TALKS - யாரோ ஒருவருடைய நாட்குறிப்பில் இருந்து ஒரு பதிவு !




ஒரு நாட்குறிப்பு பதிவு - சிறு வயதில் நான் மிகுந்த சுயநலக்காரனாக இருந்தேன். நல்ல பொருள் எதுவாக இருந்தாலும், எது கிடைத்தாலும், அதை நானே கைப்பற்றிக் கொள்வேன். இந்தக் குணத்தின் காரணமாகவே, மெதுவாக எல்லோரும் என்னை விட்டு விலக ஆரம்பித்தார்கள். ஒரு கட்டத்தில் எனக்கு நண்பர்களே இல்லாமல் போய் விட்டார்கள். நானோ என் மீது தவறு இருக்கிறது என்றே நினைக்கவில்லை. மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டிருந்தேன். அந்தச் சமயத்தில் என் அப்பா எனக்குக் கற்றுக் கொடுத்த மூன்று வாக்கியங்கள் தாம் வாழ்க்கையில் எனக்கு உதவியாக இருந்தன. ஒருநாள் அப்பா, இரண்டு அகலமான பாத்திரங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். அந்த இரண்டையும் சாப்பாட்டு மேஜை மேல் வைத்தார். ஒரு பாத்திரத்திலிருந்த நூடுல்ஸின் மேல் மட்டும் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது. இன்னொன்றின் மேல் முட்டையில்லை. அப்பா என்னிடம் கேட்டார். கண்ணு. உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே எடுத்துக் கொள்! ” என்றார். அந்த நாட்களில் முட்டை கிடைப்பது அரிதாக இருந்தது. புத்தாண்டின் போதோ, பண்டிகைகளின் போதோ தான் எங்களுக்குச் சாப்பிட முட்டை கிடைக்கும். எனவே, நான் முட்டை வைத்திருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். நாங்கள் சாப்பிட ஆரம்பித்தோம். என்னுடைய புத்திசாலித்தனமான முடிவுக்காக எனக்கு நானே என்னைப் பாராட்டிக் கொண்டேன். முட்டையை ஒரு வெட்டு வெட்டினேன். என் தந்தை அவருடைய கிண்ணத்தை எடுத்து சாப்பிட ஆரம்பித்த போது எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. அவருடைய கிண்ணத்தில் நூடுல்ஸுக்கு அடியே இரண்டு முட்டைகள் இருந்தன. அதைப் பார்த்து விட்டு நான் மிகவும் வருத்தப்பட்டேன். அவசரப்பட்டு நான் எடுத்த முடிவுக்காக என்னை நானே திட்டிக் கொண்டேன். அப்பா மென்மையாகச் சிரித்தபடி என்னிடம் சொன்னார். மகனே நினைவில் வைத்துக் கொள். உன் கண்கள் பார்ப்பது உண்மையில்லாமல் போகலாம். மற்றவர்களுக்குக் கிடைப்பதை நீ அடைய வேண்டும் என நினைத்தால் இழப்பு உனக்குத் தான். ” அடுத்த நாளும் என் அப்பா இரண்டு பெரிய கிண்ணங்கள் நிறைய நூடுல்ஸ் சமைத்துக் கொண்டு வந்து சாப்பாட்டு மேஜையில் வைத்தார். முதல் நாளைப் போலவே ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸின் மேல் ஒரு முட்டை வைக்கப்பட்டிருந்தது. இன்னொன்றில் இல்லை. அப்பா என்னிடம் கேட்டார். “ மகனே. உனக்கு இந்த இரண்டில் எது வேண்டுமோ, நீயே தேர்ந்தெடுத்துக் கொள்! ” இந்த முறை நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக யோசித்தேன். முட்டை வைக்கப்படாத கிண்ணத்தை எடுத்துக் கொண்டேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. நூடுல்ஸை அள்ளும் குச்சியால், கிண்ணத்துக்குள் அடிவரை எவ்வளவு துழாவிப் பார்த்தும் ஒரு முட்டை கூடக் கிடைக்கவில்லை. அன்றைக்கும் அப்பா சிரித்தபடி சொன்னார். மகனே. எப்போதும் அனுபவங்களின் அடிப்படையிலேயே ஒன்றை நம்பக் கூடாது. ஏனென்றால், சில நேரங்களில் வாழ்க்கை உன்னை ஏமாற்றக் கூடும், தந்திரத்தில் விழ வைக்கும். இதை ஒரு பாடமாக எடுத்துக் கொள். இதை எந்தப் பாடப்புத்தகங்களிலிருந்தும் கற்றுக் கொள்ள முடியாது. ” மூன்றாவது நாள், அப்பா மறுபடியும் இரு பெரிய கிண்ணங்களில் நூடுல்ஸ் சமைத்து எடுத்து வந்தார். இரு கிண்ணங்களையும் மேஜையின் மேல் வைத்தார். வழக்கம் போல ஒரு கிண்ணத்திலிருந்த நூடுல்ஸில் முட்டை. மற்றொன்றில் இல்லை. அப்பா கேட்டார். மகனே நீயே தேர்ந்தெடுத்துக் கொள். உனக்கு இவற்றில் எது வேண்டும்?” இந்த முறை அவசரப்பட்டு கிண்ணத்தை எடுத்து விடாமல் நான் பொறுமையாக அப்பாவிடம் சொன்னேன். அப்பா நீங்கள் தான் இந்தக் குடும்பத்தின் தலைவர். நீங்கள் தான் நம் குடும்பத்துக்காக உழைக்கிறீர்கள். எனவே, முதலில் நீங்கள் உங்களுக்கான கிண்ணத்தை எடுத்துக் கொள்ளுங்கள். மற்றதை நான் எடுத்துக் கொள்கிறேன்” என்றேன். அப்பா என் கோரிக்கையை நிராகரிக்கவில்லை. முட்டை இருந்த நூடுல்ஸ் கிண்ணத்தை எடுத்துக் கொண்டார். நான் எனக்கான நூடுல்ஸைச் சாப்பிட ஆரம்பித்தேன். நிச்சயமாக இந்தப் பாத்திரத்தில் முட்டை இருக்காது என்று தான் நினைத்தேன். அன்றைக்கும் எனக்கு ஆச்சர்யம் காத்திருந்தது. கிண்ணத்தின் அடியில் இரண்டு முட்டைகளிருந்தன. அப்பா கண்களில் அன்பு கனிய என்னைப் பார்த்தார். பிறகு புன்முறுவலோடு சொன்னார். மகனே, நினைவில் வைத்துக் கொள். மற்றவர்களுக்கு நீ நல்லது நினைக்கும் போதெல்லாம், உனக்கும் நல்லதே நடக்கும்! ” அப்பா சொன்ன இந்த மூன்று வாசகங்களை, வாழ்க்கைப் பாடங்களை எப்போதும் நான் நினைவில் வைத்திருக்கிறேன். அதன்படி தான் நான் செயலாற்றுகிறேன். உண்மையைச் சொல்லப் போனால், நான் வெற்றி பெற்றுக் கொண்டிருக்கிறேன்
 


Thursday, January 16, 2025

ARC - 070 - சர்வைவல் பண்ணுவதே ஒரு சாதனைதான் !


ஒரு நாட்டில் ஒரு இளவரசன் இருந்தான். அவன் சிறந்த போர் வீரன். அவனுடைய வாள் வீச்சுக்கு அந்த நாடே ஈடு கொடுக்க முடியாது. அந்த அளவுக்கு சிறந்த வீரன். அவன் ஒருமுறை அரண்மனையில் வாள் வீசி பயிற்சி செய்து கொண்டிருந்தான். அப்போது ஒரு எலி குறுக்கே ஓடியது. உடனே அதன் மீது வாளை வீசினான். அந்த எலி லாவகமாக தப்பித்துச் சென்றது. பிறகு மீண்டும் அதனைத் துரத்தி வாளை வீசினான். மீண்டும் தப்பித்து வளைக்குள் புகுந்துகொண்டது எலி. மனம் உடைந்து போனான் இளவரசன். அப்போது அங்கு வந்த அரசர் “ஏன் சோகமாக இருக்கிறாய்?” எனக் கேட்க, “இந்த நாடே எனது வாள் வீசும் திறமைக்கு ஈடு கொடுக்க முடியாதபோது, இந்த சாதாரண எலியை என்னால் கொல்ல முடியவில்லையே!” என்றான். மன்னர் சிரித்துவிட்டு “எலியைக் கொல்ல வாள் பயிற்சி எதற்கு? அரண்மனைப் பூனையைக் கொண்டுவந்தாலே போதுமே!” என்றார். உடனே அரண்மனை பூனை வரவழைக்கப்பட்டது. அந்தப் பூனையும் எலியை வேட்டையாட முயன்றது. ஆனாலும் அந்த எலி எளிதாக அதனிடம் இருந்து தப்பித்துச் சென்றது. இப்போது இளவரசருடன் அரசரும் சோகமானார். அப்போது மந்திரி வந்தார். “என்ன அரசே. நீங்களும் இளவரசரும் சோகமாக இருக்கிறீர்கள்?” என்று கேட்டார். அரசர் நடந்ததைக் கூறினார். அதற்கு, “நம் நாட்டு பூனைகள் எதற்கும் லாயக்கில்லை. ஜப்பான், பாரசீகம் போன்ற நாடுகளில் உள்ள பூனைகள் புலியளவு உயரம் கொண்டவை. எனவே அங்கிருந்து வரவழைப்போம்” என்றார் மந்திரி. உடனே அந்நாடுகளில் இருந்து பூனைகள் வரவழைக் கப்பட்டன. ஆனால் அவற்றிடமிருந்தும் அந்த எலி சாமர்த்தியமாகத் தப்பித்துச் சென்று வளைக்குள் புகுந்தது. ‘எலிக்கு இவ்வளவு திறமையா!’ என அனைவரும் வியந்தனர். அப்போது அங்கே இருந்த அரண்மனைக் காவலன் “இளவரசே! இந்த எலிக்குப் போய் ஜப்பான், பாரசீகப் பூனையெல்லாம் எதற்கு? எங்கள் வீட்டுப் பூனையே போதும்” என்றான். மன்னருக்கு நப்பிக்கை ஏற்படவில்லை. “அரண்மனையில் வளர்ந்து வரும் பூனையால் முடியாதது, சாதாரண வீட்டுப் பூனையால் முடியுமா?” என்றார். இளவரசர் அவரை இடைமறித்து, “சரி… எடுத்து வா உனது பூனையை” என்றார். வீட்டுக்குச் சென்று தனது பூனையைக் கொண்டு வந்தான் காவலன். அந்தப் பூனை அந்த எலியை ஒரே தாவலில் ‘லபக்’ என்று கவ்விச் சென்றது. இதனைப் பார்த்த இளவரசருக்குப் பெருத்த ஆச்சரியம். ஜப்பான், பாரசீக, அரண்மனையில் வளர்ந்த பூனைகளிடம் இல்லாத திறமை எப்படி இந்தச் சாதாரண பூனைக்கு ஏற்பட்டது என்று வியந்தார். இதுபற்றி காவலனிடம் கேட்டார். அதற்குக் காவலாளி “என் பூனைக்கு பெரிதாக திறமையோ, பயிற்சிகளோ எதுவும் இல்லை இளவரசே… என் பூனைக்கு ரொம்பப் பசி அவ்வளவுதான்” என்றான். உடனே இளவரசருக்கு சுரீர் என்றுரைத்தது. அரண்மனைக்குள் பூனைகள் நன்கு தின்று கொழுத்திருப்பதால் அவற்றுக்கு பசி என்றால் என்னவெற்று தெரிய வாய்ப்பில்லை, எனவே அவற்றால் எலியை எப்படி பிடிக்க முடியும்?.
ஆக, எந்த ஒரு வேலையையும் வெற்றி கரமாகச் செய்து முடிக்க வேண்டுமென் றால், முதலில் அதனைப் பற்றிய பசி அல்லது தேவை இருக்க வேண்டும். அப்போதுதான் அந்தக் காரியத்தை கச்சிதமாக செய்து முடிக்க முடியும் என்பதை இளவரசர் தெரிந்து கொண்டார். 

ARC - 069 - சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது !


ஒரு வங்கிக்கு புதிதாக வந்த மேனேஜர் வங்கியின் கணக்கு வழக்குகளை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அதில் ஒரு அக்கௌண்ட்டில் மட்டும் தினமும் 1000 ரூபாய் போடப்பட்டே. வந்தது. ஒரு நாள்கூட தடையில்லாமல் அந்த கணக்கில் போடப்பட்டு வந்தது. இடையில் ஞாயிறு போன்ற விடுமுறை தினங்கள் வந்தால் அன்றைக்கும் சேர்த்து அடுத்த வேலைநாட்களில் அந்த கணக்கில் சேர்க்கப்பட்டு வந்தது கண்டு அதிசயித்தார். கேஷியரை கூப்பிட்டு “யாருய்யா அந்த ஆள்” என்று கேட்டார். தெரியலை சார்! தினமும் காலையில் 10 மணிக்கு டான்னு வருவார், பணத்தை போடுவார் போய்ட்டே இருப்பார். ஆள் கொஞ்சம் சிடுமூஞ்சி மாதிரி இருக்கிறதால நாங்கலாம் யாரும் பேசுறதில்லை சார்! என்றார். மேனேஜருக்கு இப்படி ஒரு கேரக்டரை சந்திச்சே ஆக வேண்டுமென்று பெரிய ஆவலாகவிட்டது. அடுத்த நாள் காலையிலேயே வந்து காத்திருந்து அந்த நபர் வந்தவுடன் பக்கத்தில் போய் பேச்சு கொடுக்க முயன்றார். அந்த நபரோ இவரை கண்டுகொள்ளாமல் போய்விட்டார். அவர் புறக்கணித்ததும் வங்கி மேனஜருக்கு அவருடன் பழகி அவர் ஏன் தினமும் ஆயிரம் ரூபாய் வங்கியில் போடுகிறார் என்றும் கண்டுபிடிக்கவேண்டும் என்று பெரிய வெறியே ஆகிவிட்டது. தினமும் பணம் செலுத்தும் இடத்தின் அருகே நிற்பது சிரிப்பதுமாய் இருந்து அந்த நபரும் லேசாக புன்னகைக்க துவங்கியிருந்தார். ஒரு நாள் மேனஜர் வரும் வழியில் அந்த ஆயிரம் ரூபாய் பார்ட்டி வண்டி பழுதாகி ரோட்டில் நின்றிருந்தார். மேனேஜர் லிஃப்ட் கொடுத்து வங்கிக்கு அழைத்து வரவே கொஞ்சம் பேசவும் துவங்கியிருந்தார். ஒரு நாள் அவரிடம் மேனேஜர் “சார் நாமதான் நண்பர்களாகிட்டோம்ல இப்பவாவது சொல்லுங்க, எதுக்கு தினமும் ஆயிரம் ரூபாய் பேங்ல போடுறீங்க. அப்படி என்ன வருமானம் வரும்படி தொழில் செய்யுறீங்க“ என்று கேட்டார். “சார், நான் வேலையெல்லாம் பாக்கலை தொழிலிலும் செய்யலை, நான் தினமும் பந்தயம் கட்டுவேன் அதுல எப்படியும் ஜெயிச்சுருவேன், அந்த காசுதான் சார் அது என்றார். மேனேஜருக்கு நம்பவே முடியவில்லை, அது எப்படி தினமும் ஒருத்தன் பந்தயத்தில ஜெயிக்க முடியும், இந்தாளு பொய் சொல்லுறான் என்று எண்ணிக்கொண்டார். அவரின் முகமாற்றத்தை கண்ட அவன் “சார் இதுக்குதான் நான் யாரிடமும் இந்த பந்தய மேட்டரை சொல்வதில்லை என்றான். அப்படியும் சந்தேகமாய் பார்த்த மேனேஜரிடம் ” சரி சார், நாம ரெண்டு பேருமே இப்ப ஒரு பந்தயம் போடுவோம், நான் ஜெயிக்கலைன்னா பாருங்க என்றான், டென்சாகிய மேனேஜரும் சரிய்யா பந்தயத்துக்கு ரெடி என்னய்யா பந்தயம்னாரு. “சார், சரியா நாளைக்கு காலையில 10. 15க்கு உங்க "கால் தொடை பகுதி பச்சைக்கலரா மாறிடும்" ரெண்டாயிரம் ரூபாய் பந்தயம் “ என்றான். யோவ் என்னய்யா சொல்ற, எதாவது நடக்குற கதைய சொல்லு என்று மேனேஜர் சொல்ல. பந்தயத்துக்கு வர்றீங்களா இல்லையான்னு கட் அண்ட் ரைட்டா சொல்லுங்க சார்னு கேட்டான். சரின்னு ஒத்துகிட்டார். காலையில வருவேன் உங்க " கால் தொடை பகுதி " பச்சை பசேல்ன்னு மாறியிருக்கும் ரெண்டாயிரம் ரூவாயை எடுத்து வையுங்க என்றபடி சென்றுவிட்டான் மேனஜர்க்கு எப்படி இவ்வளவு தைரியமா பந்தயம் கட்டுறான் என்று ஆச்சர்யம். அவன் போனவுடன் முதல் வேலையாக பாத்ரூம் சென்று தனது பேண்ட்டை அவிழ்த்து கண்ணாடியில் முன்னும் பின்னும் தொடை பகுதியை பார்த்தார், அது வழக்கம் போல் கண்ணங்கரேல் என்று என்றுதான் இருந்தது. இருந்தாலும் அவருக்கு இருப்பு கொள்ளவில்லை, அரைமணிக்கொரு முறை பேண்ட்டை அவிழ்த்து பார்க்கவும் போடுவதுமாய் இருந்தார். விடிந்தது. முதல் வேலையாக அதை போய் பார்த்தார், இப்பவும் அப்படியே கருப்பாகவே இருந்தது. நம்ம "கால் தொடையாவது" பச்சை கலராகிறதாவது என்று அவரே சமாதானம் சொல்லிக்கொண்டே குளித்து அலுவலகம் கிளம்பினார். எங்கே பஸ்ஸில் உட்கார்தால் எதும் செட்டப் செய்து நிறம் மாற செய்து விடுவார்களோ என்று எண்ணி நடந்தே போனார். பத்து மணி அலுவலகத்துக்கு 9 க்கே வந்துவிட்டாலும் 10 நிமிடத்துக்கு ஒரு முறை போய் போய் பார்த்து உறுதி செய்தபடியே இருந்தார். இன்னைக்கு அவனை ஜெயிச்சு ரெண்டாயிரம் ரூபாயை வாங்கிறனும் என்று ஆவலோடு காந்திருந்தார். சொல்லி வைத்தாற்போல் சரியாக 10:15 அவன் அந்த அறைக்குள் நுழையவே வேகமாய் சீட்டிலிருந்து எழுந்து தனது பேண்ட்டை கழட்டி நின்று “ இந்தா பார்த்துக்கோ“ அப்படியே கருப்பாதான் இருக்கு என்று முன்பக்கத்தையும் பின்பக்கத்தையும் காட்டினார். அவன் உடனே அருகிலிருந்தவனிடம்.,” என்னமோ பேங்க் ஆபிசர், பெரிய மனுசன், அப்படியெல்லாம் செய்யமாட்டருன்னு இந்தாளை நம்பி பந்தயம் கட்டினே இப்ப என்ன சொல்லுறே, எடு மூவாயிரத்தை “ என்றான் அவன். அப்போதுதான் கவனித்தார் பந்தயக்காரனுடன் வேறு ஒருவனும் வந்திருந்தான். அவனும் மேனேஜரை முறைத்தபடி மூன்று "ஆயிரம் ரூபாய்" தாள்களை எடுத்து நீட்டினான். அதை வாங்கிய பந்தயக்காரன் இரண்டாயிரம் ரூபாய்களை மேனேஜரிடம் நீட்டி உங்கிட்ட கட்டின பந்தயத்தில நான் தோத்துட்டேன், ஆனா இவன் கிட்ட கட்டின பந்தயத்தில ஜெயிச்சுட்டேன், ஆயிரம் ரூபாய் லாபம் என்று வழக்கமாய் பணம் கட்டும் கவுண்ட்டருக்கு போய்விட்டான். அவனுடன் பந்தயம் கட்டி மூவாயிரம் ரூபாய் தோற்றவனிடத்தில் நீ எதற்கு அவனிடம் பந்தயம் கட்டினாய் என்று மேனஜேர் கேட்க வந்தவன் கடுப்பாகி அவரிடம் “போய்யா நீயெல்லாம் ஒரு பேங்க் ஆபிசரா? என்னைய பார்த்தவுடனே பேண்டை கழட்டி காமிப்பாருன்னு உன்னைய சொன்னான், ச்சேசே அப்படியெல்லாம் இருக்காதுன்னு உன்னிய நம்பி பந்தயம் கட்டினா இங்க நீ ரெண்டாயிரம் ரூபாய்க்கு இவ்வளவு கேவலமான வேலை செய்யற ! வெட்கமாவே இல்லையா என்று கேவலப்படுத்திவிட்டு போனான். இதனால் சொல்லப்படும் கருத்து என்னவென்றால் அவன் அவன் வேலையை அவன் அவன் பார்க்கனும், அடுத்தவன் வேலையிலே தலையிடக்கூடாது. குறிப்பாக சந்தை முதலீடுகள் இப்படித்தான் கண்ணை மூடிக்கொண்டு பணத்தை இன்வெஸ்ட் பண்ணுவாதாக இருப்பதால் மொத்தமாக தெரியாமல் கண்டிப்பாக இறங்க கூடாது !

GENERAL TALKS - TEAM WORK முக்கியம் பிகிலு !




ஒரு காட்டில் ஒரு யானை இருந்தது. அதற்குத் தான் பலசாலியென்று ரொம்ப கர்வம். சிறிய பிராணிகளை அது ரொம்ப கஷ்டப்படுத்தி வந்தது.யானை ஒரு நாள் நடந்து போய்க் கொண்டிருக்கும் போது, வழியில் ஒரு எறும்புப்புற்றைப் பார்த்தது. அங்கே நூற்றுக்கணக்கான எறும்புகள் வாயில் உணவைக் கவ்விக் கொண்டு அங்குமிங்கும் போய்க் கொண்டிருந்தன. அதைப் பார்த்த யானை,“எனக்கு வழி விடுங்கள். இல்லாவிட்டால் ஒரே மிதியில் உங்களை நசுக்கி விடுவேன்” என்று கத்திற்று. "யானையே! நீங்கள் பலசாலி என்பது எங்களுக்குத் தெரியும். ஆனால் உன்னை நாங்கள் என்ன செய்தோம்?” என்று கேட்டது ஒரு எறும்பு. யானை. “இவ்வளவு சிறிய பிராணி நீ! என்னைக் கேள்வி கேட்கிறாயா?” என்று கோபப்பட்டது “சிறிய பிராணியாக இருந்தால் என்ன? எனக்கும் அறிவு இருக்கிறது. வேண்டுமானால் பந்தயத்தில் உன்னை ஜெயித்துக் காட்டுகிறேன்” என்றது எறும்பு. ஜம்பமாக சிரித்த யானை “ஆகட்டும், பார்க்கலாம். நீ தோற்றால், உன்னுடன் உன் புற்றையும் சேர்த்து அழித்து விடுவேன்” என்றது  பந்தயம் ஆரம்பித்தது. யானைக்கும், எறும்புக்கும் இடையில் ஓட்டப் பந்தயம். காட்டுப் பிராணிகளெல்லாம் வேடிக்கை பார்க்க அங்குக் குவிந்தன. யானை கொஞ்ச தூரம் ஓடியது. பிறகு கீழே பார்த்தபோது அருகிலேயே எறும்பு ஓடிவருவதைப் பார்த்து “நீயும் இங்கேதான் இருக்கிறாயா?” என்று இன்னும் வேகமாக ஓடியது. ஓடி ஓடி அதற்கு மூச்சிரைத்தது. ஒரு நிமிசம் நின்று யானை குனிந்து பார்த்தது. தன் பக்கத்திலேயே எறும்பு வருவது தெரிந்தது. யானைக்குப் பைத்தியமே பிடித்து விடும் போல இருந்தது. யானை வேகமாக ஓடி ஓடி அங்கிருந்த ஆழமான பள்ளத்தில் விழுந்து விட்டது. உண்மையில் யானை ஒவ்வொரு முறையும் பார்த்த எறும்பு, பந்தயம் கட்டிய அதே எறும்பு இல்லை. அதன் நண்பர்களான வேறு வேறு எறும்புகள். கர்வம் பிடித்த யானை சிறிய எறும்பைக் கவனிக்கும் நிலையில் இருக்கவில்லை. உருவம் சிறியதேயானாலும் அதற்கும் மதிப்புக் கொடுத்தேயாக வேண்டும். இது திட்டமிடலாலும் நண்பர்கள் உதவியாலும் நுணுக்கமான செயல்பாடுகளும் மட்டுமே சாத்தியமாகும் !

MUSIC TALKS - ROJA POO AADIVANDHATHU ! - RAAJAVAI THEDI VANDHATHU ! - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது

லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

நேற்று நீர் விட்டது
இன்று வேர் விட்டது
நெஞ்சில் அம்மாடியோ
நூறு பூ பூத்தது

சின்னஞ்சிறு பருவம்
இன்னும் கொதிப்பதோ
சொல்லி சொல்லி 
பொழுதை
இன்னும் கழிப்பதோ

தொடு தொடு 
தொடாமல்
நிலாவின் மேனி 
நாளெல்லாம்
தேடுது 

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

நீயும் அச்சம் விடு
நூறு முத்தம் இடு
மீதம் மிச்சம் எடு
மேலும் சொல்லிக்கொடு

அந்தி பகல் இரவு
சிந்தை துடிக்குது
அந்தப்புறா நினைவில்
சிந்து படிக்குது

இதோ இதோ 
உன்னாலே
விழாமல் மோகம் 
வாட்டுது
தாங்குமா

ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது
பூவை கொஞ்சம் நீ சூடு
பூவின் தேனில் நீராடு
பேசி பேசி தீராது
ஆசை என்றும் ஆறாது

லவ் லவ் என்பதா
சொல் சொல் மன்மதா
சொன்னால் போதுமா
தாகம் தீருமா
ரோஜாப்பூ ஆடிவந்தது
ராஜாவை தேடி வந்தது

MUSIC TALKS - GRAMMATHTHU PONNU NERUPPUNU SONNIYE - CITY LA VANDHU KALAKKUDHU KALAKKUDHU DAA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



கிராமத்து பொண்ணு
நெருப்புன்னு சொன்னியே 
பார் !
சிட்டில வந்து 
கலக்குது கலக்குது டா~

அடி வாடி புள்ளை 
மாமன்காரன் 
கட்டியணைக்க
அடி விடலை புள்ளை 
தாவணியை நனைக்க

\
ஒரு கதை 
சொல்ல போறேன்
விடுகதை 
சொல்ல போறேன்
கிராமத்து பொண்ணு 
சிட்டிக்கு வந்த 
கதைய கேளேன்

அவ சொன்னா 
என்கிட்டே
ஐ லவ் யூ 
லவ் யூ லவ் யூ 
கோளாறா ஆனேன் 
மச்சான்
ஜோக்கோ 
செம்ம லையனு

ஓகேனா KNOCK -ஆவேன்னு
இல்லாட்டி ஜலன்னு
அவ கடைச்சில 
கூட்டிட்டு போயி
சொன்னா மச்சான் 
பை பைனு

நான் விழுந்தேன் 
சேத்துக்குள்ளே
நடந்தேன் 
ஆத்துக்குள்ளே
பறந்தேன் வானத்துல
மனச உடைச்சி 
கனவ கலைச்சு 

கலர் கலரா 
வளையல் போட்டு
பூவை தலையிலே 
வச்சுக்கோ
பாவாடை தாவணி 
போல
வருமா கண்ணு 
ஒத்துக்கோ

மனசெல்லாம் 
மார்கழி ஆச்சு
தெருவெல்லாம் 
கார்த்திகை ஆச்சு
தங்க மயில் போறதெங்கே
சம்மதம் சொல்லம்மா

பொம்பள பூ தலையோடு புள்ள
என் பொழப்பு இசையோடு செல்ல
அலை வந்து ஆடுது மேல
மைதானம் தேவையில்லை

ஒத்தையடி பாதையிலே
ஊர்வலம் போறவளே
பிந்தி பிந்தி போனதெங்கே
தாகத்துக்கு எல்லை இல்லை

துண்டில் முள் 
கண்ணழகா
தூரத்திலே பேரழகா
போறவனே கட்டி விழுங்கும்
சொல் மக்கா பல்லழகா

மைனா மைனா 
பறந்திருச்சி
என் மனசை கிழிச்சு 
எறுஞ்சிருச்சி
உன்னை பார்த்ததுனாலே 
என்னை மறந்தேன்
கண்ணை பார்த்ததுனாலே 
நானும் விழுந்தேன்

காலையும் மாலையும் 
தெரியலையே
நான் போகுற பாதையும் 
புரியலையே
உன்னை பார்த்ததுனாலே 
என்னை மறந்தேன்
கண்ணை பார்த்ததுனாலே 
நான விழுந்தேன்

கிராமத்து பொண்ணு 
தெரிஞ்சுக்கிட்டேன்
சிட்டிக்கு வந்து 
புரிஞ்சுக்கிட்டேன் 
கிராமத்து பொண்ணு 
தெரிஞ்சுக்கிட்டேன்
சிட்டிக்கு வந்து 
புரிஞ்சுக்கிட்டேன்

அடி சந்தையிலே 
போன்றவளே
வாடி என் பக்கம்
இந்த மாமன்காரன் 
காத்திருக்கேன்
நீதான் என் நெசம்

பச்சரிசி பல்வரிசை 
சொக்குது நித்தம்
இப்ப ஊர் அறிய 
சொல்லப்போறேன்
நீதான்டி சொர்க்கம்

கருவாச்சி கூந்தலுக்கு
ரெட்டை சடை பின்னி வச்சேன்
நச்சுன்னு பொண்ணு நிக்கயிலே…
மருதாணி போட்டு வச்சேன்…

ராத்திரி வாரேன் புள்ளே
வளையலே தாரேன் புள்ளே
நீ போகும் பாதையிலே வாரேன் பின்னாலே…

கிராமத்து பொண்ணு 
நெருப்புன்னு சொன்னியே
சிட்டில வந்து 
கலக்குது கலக்குதுடா


ARC - 068 - காலத்தால் கொடுக்கபடும் சோதனைகள் !





ஒரு புகழ் பெற்ற கோவிலில், பணியாள் ஒருவர் இருந்தார். கோவிலை தூய்மையாக கூட்டி பெருக்கி சுத்தம் செய்வது தான் அவரது பணி. அதை குறைவின்றி செவ்வனே செய்து வந்தார். கோவில், தன் வீடு. இரண்டும் தான் அவரது உலகம். இதை தவிர வேறொன்றும் தெரியாது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் வந்து இறைவனை தரிசனம் செய்த வண்ணமிருந்தனர். இறைவன் இப்படி எல்லா நேரமும் நின்றுகொண்டே இருக்கிறானே அவனுக்கு கஷ்டமாக இருக்காதா? என்று எண்ணிய அவர். ஒரு நாள் இறைவனிடம். எல்லா நேரமும் இப்படி நின்று கொண்டே இருக்கிறாயே. உனக்கு பதிலாக நான் வேண்டுமானால் ஒரு நாள் நிற்கிறேன். நீ சற்று ஓய்வெடுத்துக் கொள்கிறாயா? என்று கள்ளம் கபடமில்லாமல் கேட்க, அதற்கு பதிலளித்த இறைவன். , “எனக்கு அதில் ஒன்றும் பிரச்சனையில்லை. எனக்கு பதிலாக நீ நிற்கலாம். ஆனால். ,. ஒரு முக்கிய நிபந்தனை. நீ என்னைப் போலவே அசையாமல் நிற்கவேண்டும். வருபவர்களை பார்த்து புன்முறுவலுடன் ஆசி வழங்கினால் போதும். யார் என்ன சொன்னாலும். , கேட்டாலும் நீ பதில் சொல்லக் கூடாது. நீ ஒரு சாமி விக்ரகமாக இருக்கிறாய் என்பதை மறந்துவிடக்கூடாது. என்று கூற, அதற்கு அந்த பணியாள் ஒப்புக்கொண்டார். அடுத்த நாள். , இறைவனைப் போலவே அலங்காரம் செய்துகொண்டு. , கோவில் மூலஸ்தானத்தில் இவர் நின்று கொள்ள. , இறைவனோ. இவரைப் போல தோற்றத்தை ஏற்று. , கோவிலைப் கூட்டிப் பெருக்கி சுத்தம் செய்து வந்தார். முதலில், ஒரு மிகப் பெரிய செல்வந்தன் வந்தான். தன் வியாபாரம் சிறப்பாக இருக்கவேண்டும் என்று. , இறைவனிடம் பிரார்த்தனை செய்துவிட்டு. , ஒரு மிகப் பெரிய தொகையை உண்டியலில் காணிக்கையாக போட்டான். செல்லும்போது, தவறுதலாக தனது பணப்பையை அங்கு தவற விட்டுவிடுகிறான். இதை இறைவன் வேடத்தில் நின்று கொண்டிருக்கும் பணியாள் பார்க்கிறார். ஆனால், இறைவனின் நிபந்தனைப்படி அவரால் ஒன்றும் பேசமுடியவில்லை. அப்படியே அசையாது நிற்கிறார். சற்று நேரம் கழித்து. , ஒரு பரம ஏழை அங்கு வந்தான். அவனிடம் உண்டியலில் போட ஒரே ஒரு ரூபாய் மட்டுமே இருந்தது. “என்னால் இது மட்டும் தான் உனக்கு தர முடிந்தது. என்னை மன்னித்துவிடு இறைவா. என்னை ரட்சிக்கவேண்டும். என் குடும்பத்தில் ரொம்ப வறுமை. மிக கஷ்டமாக இருக்கிறது இறைவா. உன்னை நம்பியே வாழ்கிறேன் ஐயனே. எனக்கு ஒரு வழி காட்டு இறைவா”. என்று மனமுருக கண்கள் மூடி பிரார்த்தனை செய்தான்.
கண்ணை திறந்தவனுக்கு எதிரே, அந்த செல்வந்தன் தவறவிட்ட பணப்பை கண்ணில் பட்டது. உள்ளே பணத்தை தவிர. தங்கக் காசுகளும் சில வைரங்களும் கூட இருந்தன. இறைவன் தனக்கே தன் பிரார்த்தனைக்கு செவிமெடுத்து அதை அளித்திருக்கிறான் என்றெண்ணி. , அப்பாவித்தனமாக அதை எடுத்துக் கொண்டான். இறைவன் வேடத்தில் நின்றிருந்த சேவகர் இதை கவனித்தார். வாய் விட்டு எதுவும் சொல்ல முடியவில்லை. சிறிது நேரம் கழித்து. , வேறு ஒரு கப்பல் வியாபாரி வந்தான். ஒரு நீண்ட தூர பயணமாக கப்பலில் அவன் செல்லவிருப்பதால். , இறைவனை தரிசித்து அவர் ஆசி பெற வேண்டி வந்தான். இறைவனிடம் பிரார்த்தனை செய்தான். அந்த நேரம் பார்த்து. , பணப் பையை தொலைத்த செல்வந்தன் காவலர்களுடன் திரும்ப கோவிலுக்கு வந்தான். கப்பல் வியாபாரி பார்த்து. “இவர் தான் என் பணப்பையை எடுத்திருக்க வேண்டும். இவரை பிடித்து விசாரியுங்கள்” என்று காவலர்களிடம் கூற, காவலர்களும் அந்த கப்பல் வியாபாரியை பிடித்து செல்கிறார்கள். “இறைவா என் பணத்தை அபகரித்தவரை அடையாளம் காட்டியமைக்கு நன்றி. ” என்று அந்த செல்வந்தன் இறைவனைப் பார்த்து நன்றி கூறிவிட்டு செல்ல, இறைவன் வேடத்தில் இருந்த பணியாள். இறைவனை நினைத்து. , “இது நியாயமா? அப்பாவி ஒருவன் தண்டிக்கப்படலாமா? இனியும் என்னால் சும்மாயிருக்க முடியாது. என்று கூறி, “கப்பல் வியாபாரி திருடவில்லை. தவறு அவர் மீது இல்லை. என்று இறைவன் வேடத்தில் நின்றிருந்த பணியாள். , நடந்த உண்மைகளை அனைவரிடமும் சொல்கிறார். அந்த ஏழையிடம் பணப்பையை வாங்கி கொண்டு செல்வந்தர் சென்றார். கப்பல் வியாபாரி விடுவிக்கப்பட்டார்.
இரவு கோவில் நடை சாத்தப்படுகிறது. இறைவன் வருகிறார். இறைவனுக்கு பதிலாக நின்று கொண்டிருந்த பணியாளிடம். , இன்றைய பொழுது எப்படியிருந்தது என்று கேட்கிறார். “மிகவும் கடினமாக இருந்தது. உன் வேலை எத்தனை கஷ்டம் என்பதை புரிந்துகொண்டேன். ஆனால் ஒரு நல்ல காரியம் செய்தேன். ”. என்று காலை கோவிலில் நடந்ததை கூறினான். இறைவனோ இதை கேட்டவுடன் மிகவும் அதிருப்தியடைந்தார். “நாம் ஏற்படுத்திக் கொண்ட ஒப்பந்தப்படி நீ ஏன் நடந்து கொள்ளவில்லை? என்ன நடந்தாலும் பேசக்கூடாது. , அசையக்கூடாது என்ற என் நிபந்தனைகளை. , நீ ஏன் மீறினாய். …? உனக்கு என் மீது நம்பிக்கை இல்லை. இங்கு வருபவர்களது சூழ்நிலையை அறியாதவனா நான். “செல்வந்தன் அளித்த காணிக்கை. , தவறான வழியில் சம்பாதித்தது. அது அவனோட மொத்த செல்வத்தில் ஒரு சிறு துளி தான். ஒரு துளியை எனக்கு காணிக்கையாக அளித்துவிட்டு நான் பதிலுக்கு அவனுக்கு நிறை தரவேண்டும் என்று அவன் எதிர்பார்க்கிறான். ஆனால். , அந்த ஏழை கொடுத்ததோ. , அவனிடம் எஞ்சியிருந்த இருந்த ஒரே ஒரு ரூபாய் தான். இருப்பினும். என் மீது முழு நம்பிக்கை வைத்து என்னை வணங்க வந்தான். இந்த சம்பவத்தில், கப்பல் வியாபாரியின் தவறு எதுவும் இல்லை. இருந்தாலும். , இன்றைக்கு அவன் திட்டமிட்டபடி கப்பல் பயணம் செய்தால் விபத்தை சந்திக்க நேரிடும். புயலில் தாக்குண்டு அவனும் அவன் கப்பலும் காணாமல் போயிருப்பார்கள். அதிலிருந்து அவனை காக்கவே. அவனை தற்காலிகமாக திருட்டு பட்டம் சுமத்தி சிறைக்கு அனுப்ப நினைத்தேன். அந்த ஏழைக்கு அந்த பணமுடிப்பு போய் சேரவேண்டியது சரி தான். அவன் அதை நான் கொடுத்ததாக எண்ணி போற்றுவான். இதன் மூலம் அந்த செல்வந்தனின் கர்மா ஓரளவாவது குறைக்கப்படும். அவன் பாவப் பலன்கள் துளியாவது குறையும். இப்படி ஒரே நேரத்தில் அனைவரையும் நான் ரட்சிக்க நினைத்தேன். ஆனால், நீயோ என் எண்ணங்கள் எல்லாம் உனக்கு தெரியுமென்று நினைத்து. , உன் எண்ணங்களை செயல்படுத்தி. அனைத்தையும் பாழ்படுத்திவிட்டாய். ” என்றான் இறைவன் கோபத்துடன். சேவகன் இறைவனின் கால்களில் விழுந்து தன் தவறுக்கு மன்னிக்க வேண்டினான் “இப்போது புரிந்துகொள். நான் செய்யும் அனைத்திற்க்கும் காரணம் இருக்கும். அது ஒவ்வொன்றையும். மனிதர்களால் புரிந்து கொள்ள முடியாது. அவரவரது கர்மாவின் படி பலன்களை அளிக்கிறேன். நான் கொடுப்பதிலும் கருணை இருக்கிறது. கொடுக்க மறுப்பதிலும் கருணை இருக்கிறது. ” என்றான் இறைவன் 
 

ARC - 067 - பணம் சம்பாதிக்க தப்பான விஷயமா ?





சாது ஒருவர் மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில் பாதையின் ஒரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனை கண்ட சாது குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து அவன் முகத்தில் தெளித்து வாயிலும் புகுட்டினார். மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார்.குதிரைமீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்த குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும் குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் தெரிந்தது அவருக்கு. குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்தவர் சில தினங்கள் கழித்து சந்தைக்கு குதிரை வாங்க போனார். அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்த திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான். சாது மெல்லச் சென்று அவனது தோளைத் தொட்டார்.திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். சாது மெல்லச் சிரித்தார். "சொல்லாதே!" என்றார். திருடன் மிரண்டான்."எது?என்ன?" என்று சம்பந்தமில்லாமல் உளறிக் கொட்டினான். சாது சொன்னார். "குதிரையை நீயே வைத்துக்கொள்.ஆனால்,நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால் எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள். நான் இந்த குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலை படவில்லை.காரணம், சில தினங்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கி விட முடியும். தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய,நல்லவர்கள் பலருக்கு காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும். புரிகிறதா?" திருடனின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது.
நீதி: “குறுகிய லாபங்களுக்காக நல்ல கோட்பாடுகளைச் சிதைத்து விட கூடாது.” - இதுபோல பணம் சம்பாதிக்க தப்பான விஷயங்களை செய்பவர்களால் தேவைகள் இருப்பவர்கள் உதவிகள் கிடைக்காமலே கஷ்டப்படுகிறார்கள் !
 

ARC - 067 - பரந்த மனதோடு யோசிக்க வேண்டும்


ஒரு முனிவரிடம் இரண்டு சீடர்கள் இருந்தனர். இருவரும் பலசாலிகள், புத்திசாலிகள். ஒருமுறை தங்களில் யார் புத்திசாலி என்பதில் இவர்களுக்குள் சண்டை ஏற்பட்டது. விஷயம் முனிவரிடம் வந்தது. அவர் சீடர்களிடம், சீடர்களே! இன்று ஏனோ எனக்கு அதிகமாகப் பசிக்கிறது. சமையல் முடிய தாமதாமாகும். அதோ! இரண்டு பேரும் அதோ அந்த மரத்தில் இருக்கும் பழங்களைப் பறித்து வாருங்கள், என்றார். குருவிடம் மிகவும் பணிவாக நடந்து கொள்ளும் அந்த சீடர்கள் மரத்தை நோக்கி ஓடினர். மரத்தை நெருங்க முடியாமல், முள்செடிகள் சுற்றி நின்றன. முதல் சீடன் சற்று பின்னோக்கி வந்தான். பின்னர் முன்னோக்கி வேகமாக ஓடினான். ஒரே தாண்டில் மரத்தை தொட்டான். பழங்களை முடிந்தளவுக்கு பறித்தான். மீண்டும் ஒரே தாவில் குருவின் முன்னால் வந்து நின்று, பார்த்தீர்களா! கணநேரத்தில் கொண்டு வந்து விட்டேன், என்றான் பெருமையோடு . இரண்டாமவன் ஒரு அரிவாளை எடுத்து வந்தான். முள்செடிகளை வெட்டி ஒரு பாதை அமைத்தான். அப்போது சில வழிப்போக்கர்கள் அலுப்போடு வந்தனர். அவர்கள் வெட்டப்பட்ட பாதை வழியே சென்று, பழங்களைப் பறித்து சாப்பிட்டனர். மரத்தடியில் படுத்து இளைப்பாறினர். சிஷ்யனும் தேவையான அளவு பழங்களைப் பறித்து வந்தான். இப்போது முனிவர் முதல் சீடனிடம், இரண்டாவது சீடன் தான் அதிபுத்திசாலி என்றார். முதலாமவன் கோபப்பட்டான். சுவாமி! இன்னும் போட்டியே வைக்கவில்லை. அதற்குள் அவனை எப்படி சிறந்தவன் என சொன்னீர்கள்? என்றான். முனிவர் அவனிடம், சிஷ்யா! நான் பழம் பறிக்கச் சொன்னதே ஒரு வகை போட்டி தான்! நீ மரத்தருகே தாவிக்குதித்து, பழத்தைப் பறித்தது சுயநலத்தையே காட்டுகிறது. ஏனெனில், அதை எனக்கு மட்டுமே தந்தாய். நான் மட்டுமே பலன் அடைந்தேன். இரண்டாம் சீடனோ பாதையைச் சீரமைத்ததால், எனக்கு மட்டுமின்றி ஊராருக்கும் இன்னும் பல நாட்கள் பழங்கள் கிடைக்கும். எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்பவனே அதிபுத்திசாலி, என்றான். இங்கே செயல் ஒன்று தான். ஆனால், செய்த விதத்தில் தான் வித்தியாசம். 

 

ARC - 065 - தேடினேன் வந்தது

 



அந்த மகான் மிகவும் பசியோடு இருந்தார். அவர் நான்கு நாட்களாக தொடர்ந்து பட்டினியாகக் கிடந்ததால் அவரால் எழுந்து நடமாடவும் முடியவில்லை. பசியை தாங்க முடியாமல் ஏதேனும் கிடைக்காதா என்ற ஆர்வத்தால் வெளியில் சென்று தேட ஆரம்பித்தார்.   ஒரு இடத்தில் அழுகிய கிழங்கொன்று கிடைத்தது. ஆனால் சாப்பிட மனமில்லாமல் தூக்கிப் போட்டுவிட்டு மீண்டும் தன் இருப்பிடத்திற்கே வந்தார். என்ன செய்வது என்று அவருக்கு புரியவில்லை. சற்று நேரத்திற்கெல்லாம் ஒருவர் மகான் அவர்களை தேடி வந்தார். வந்ததும் ஐநூறு பொற்காசுகள் அடங்கிய ஒரு பையை நீட்டி "இது உங்களுக்கு " என்றார் . என்ன இது? ஏன் எனக்குத் தருகிறீர்கள்? என்று மகான் கேட்டதற்கு அவர் சொன்னார்: பத்து நாட்களாக நான் கப்பலில் பயணித்துக் கொண்டிருந்தேன் கப்பல் தீடீரென மூழ்குகின்ற நிலைக்கு வந்துவிட்டது. எல்லோரும் பிரார்த்தனையில் ஈடுபடலாயினர். கப்பல் மூழ்காமல் உயிர் தப்பி விட்டால் அனைவரும் தத்தம் வசதிக்கேற்ப ஏதோ ஒன்றை தர்மம் செய்வதாக உறுதி செய்தார்கள். இந்த ஆபத்திலிருந்து மீண்டு விட்டால், நான் கப்பலை விட்டு இறங்கியதும் எனக்குத் தென்படுகின்ற முதல் ஆளுக்கு ஐநூறு பொற்காசுகள் தருவதாக நேர்ந்து கொண்டேன்' நீங்கள் தான் என் கண்களுக்கு தெரிந்த முதல் ஆள்' ஆகவே இது உங்களையே சார்ந்தது. இதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றார்  அதை ஏற்றுக் கொண்ட மகான் தன் மனதை நோக்கி கூறலானார்: மனமே,. உனக்கு சேர வேண்டியது பத்து நாட்களாக உன்னை நாடி வந்து கொண்டிருந்தது நீயோ பாழடைந்த வெளியில் எல்லாம் சென்று தேடிக் கொண்டிருந்தாய் என்று மனதுக்குள்ளே சொல்லிக்கொண்டார் !


GENERAL TALKS - பேச்சு - தேவையான அளவு !



ஒரு குரு இருந்தார். முற்றும் துறந்தவர். எல்லாம் கற்றவர். அவரை பிரசங்கம் செய்ய ஒரு ஊரில் கூப்பிட்டிருந்தார்கள். கூட்டத்திற்கு ஆயிரம் பேர் வருவார்கள் எனச் சொன்னார்கள். குறிப்பிட்ட தேதியில் குருவும் அவ்வூருக்கு வந்தார். அன்று நல்ல மழை. கூட்டத்திற்கு வந்தவர்களும் கலைந்து சென்று விட்டார்கள். குரு வந்த போது யாருமில்லை. பேசுவதற்கு நிறைய தயார் பண்ணி வந்திருந்ததால் அவருக்கு ஏமாற்றம். அங்கு இருந்ததோ அவரை அழைத்து வந்த குதிரை வண்டிக்காரன் மட்டும் தான். என்ன செய்யலாம் என்று அவனையே கேட்டார். அவன் சொன்னான், ”ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. அனால் ஒன்றே ஒன்று மட்டும் தெரியும். நான் முப்பது குதிரை வளர்க்கிறேன். புல்லு வைக்கப் போகும் போது, எல்லாக் குதிரைகளும் வெளியே சென்றிருக்க, ஒரே ஒரு குதிரை மட்டும் இருந்தாலும், நான் அந்தக் குதிரைக்குப் புல்லை வைத்து விட்டுத்தான் வருவேன். ”படாரென்று அறைந்தது போல் இருந்தது குருவுக்கு. அந்தக் குதிரைக் காரனைப் பாராட்டி விட்டு, அவனுக்கு மட்டும் தன பிரசங்கத்தை ஆரம்பித்தார். தத்துவம், மந்திரம், பாவம், புண்ணியம், சொர்க்கம், நரகம் என்று சரமாரியாகப் பேசிப் பிரமாதப் படுத்தி விட்டார். பிரசங்கம் முடிந்ததும், எப்படி இருந்தது என்று அவனைப் பார்த்துப் பெருமையாகக் கேட்டார். “ஐயா, நான் குதிரைக்காரன். எனக்கு ஒன்றும் தெரியாது. ஆனால் ஒன்று மட்டும் தெரியும். நான் புல்லு வைக்கப் போன இடத்தில் ஒரே ஒரு குதிரை தான் இருந்தது என்றால், அதற்கு மட்டும் தான் புல் வைப்பேன். முப்பது குதிரைக்கான புல்லையும் அந்த ஒரு குதிரைக்கே கொட்டி விட்டு வர மாட்டேன்”. என்றான் அவன். அவ்வளவு தான்! குரு அதிர்ந்து விட்டார். இந்த விஷயம் அன்டர்ஸ்டான்டிங் அதாவது புரிதல் என்று சொல்லலாம். இங்கே எப்போதுமே எங்கே எவ்வளவு பேச வேண்டும் என்பதையும் புரிந்து பேச வேண்டும்.

MUSIC TALKS - ANDHIYILE VAANAM THANDHANA THOM PODUM - ALAIYODU SINDHU PADIKKUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


அந்தியில வானம்
தந்தன தோம் 
போடும் 
அலையோட சிந்து படிக்கும்

சந்திரரே வாரும் 
சுந்தரியைப் பாரும் 
சதிராட்டம் 
சொல்லி கொடுக்கும்

கூடும் காவிரி 
இவள் தான் என் காதலி 
குளிர் காயத் தேடித் தேடி
கொஞ்ச துடிக்கும் 
ஹோய் 

கட்டுமரத் தோணி 
போல 
கட்டழகன் உங்க 
மேல 
சாஞ்சா 
சந்தோஷம் உண்டல்லோ

பட்டுடுக்க தேவையில்ல 
முத்துமணி 
ஆசை இல்ல 
பாசம் நெஞ்சோடு 
வந்தல்லோ

பாலூட்டும் சங்கு 
அது தேனூட்டும் இங்கு
பாலாறும் தேனாறும் 
தாலாட்டும் பொழுது
பாய் மேல நீ போடு 
தூங்காத விருந்து
நாளும் உண்டல்லோ 
அத நானும் கண்டல்லோ
இது நானும் நீயும் 
பாடும் பாட்டல்லோ 

வெள்ளி அலை 
தாளம் தட்ட 
சொல்லி ஒரு 
மேளம் கொட்ட
வேளை வந்தாச்சு 
கண்ணம்மா

மல்லிகை பூ 
மாலை கட்ட 
மாலையிட 
வேளை கிட்ட
மஞ்சம் போட்டாச்சு 
பொன்னம்மா

கடலோரம் காத்து 
ஒரு கவி பாடும் பார்த்து
தாளாம நூலானேன் 
ஆளான நான்தான்

தோளோடு 
நான் சேர 
ஊறாதோ தேன்தான்

தேகம் இரண்டல்லோ இரு ஜீவன் ஒன்றல்லோ
இரு தேகம் ஒன்று ஜீவன் ஒன்று கூடும் இன்றல்லோ

\

MUSIC TALKS - ANBULLA MANNAVANE - EN AASAI KAADHALANE - IDHAYAM PURIYAADHA - EN MUGAVARI THERIYAATHA - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே அன்புள்ள
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா
கிளியே கிளியே போ தலைவனை தேடி போ
முள்ளில் தூங்குகிறேன் கனவை அள்ளி போ
தனிமையின் கண்ணீரை கண்களில் ஏந்தி போ
வா வா கண்ணா இன்றே கெஞ்சி கேட்க போபோ
வாசல் பார்த்து வாழும் வாழ்வை சொல்ல போ போ
இளமை உருகும் துன்பம் இன்றே சொல்ல போ போ
குழு : நிதமும் இதயம் எங்கும் நிலைமை சொல்ல போபோ
கிளியே கிளியே போ போ
காதல் உள்ளத்தின் மாற்றம் சொல்ல போ
மீண்டும் மன்னிப்பு கேட்டுக்கொள்ள போ

நடந்ததை மறந்திட சொல் உறவினில் கலந்திட சொல்
மடியினில் உறங்கிட சொல் கண்கள் தேடுது திருமுகம் காண
வந்தேன் என்று கூற வண்ணக் கிளியே போ போ
வாசமல்லி பூவை சூட்ட சொல்லு போ போ
இதயம் இணையும் நேரம் தனிமை வேண்டும் போ போ
உந்தன் கண்கள் பார்த்தால் வெட்கம் கூடும் போ போ
நித்தம் பலநூறு முத்தம் கேட்க போ சத்தம் இல்லாமல் ஜன்னல் சாத்தி போ
விழிகளில் அமுத மழை இனி ஒரு பிரிவு இல்லை
உறவுகள் முடிவதில்லை கங்கை வந்தது நெஞ்சினில் பாய
அன்புள்ள மன்னவனே ஆசை காதலனே
இதயம் புரியாதா என் முகவரி தெரியாதா

SPECIAL TALKS - இந்த மாதிரி பாட்டு வரிகளை இந்த காலத்தில் கண்டிப்பாக எழுத முடியாது !

\


அய்யயோ ஐனாவரம் மைனா வர்ராடா அச்சச்சோ மைனாவோட நைனா வர்ரான்டா
அம்மம்மா டுமீல் குப்பம் நிம்மி வர்ராடா அப்பப்பா நிம்மி கூட மம்மி வர்ராடா
ப்ராட் கேஜ் ஆன்டி வர்ராடா அள்ளு அள்ளு மீடில் ஏஜ் அங்கிள் வர்ரான்டா தள்ளு 
அரபு குதிரை போல் அசைஞ்சு வர்ராலேடா அள்ளு 
குதிரை காரன்தான் கூட வரானுடா தள்ளு
ஹுண்டாய் வருது அள்ளு அள்ளு தண்ணிலாரிய தள்ளு தள்ளு தள்ளு
ஸ்கூட்டி வருது அள்ளு அள்ளு புல்டோஸரை தள்ளு தள்ளு தள்ளு
அனுசரிச்சா அள்ளு அள்ளு அனல் அடிச்சா தள்ளு தள்ளு
சிரிச்சதுன்னா அள்ளு அள்ளு மொறச்சதுன்னா தள்ளு தள்ளு
அதோ பாரு காக்கா காக்கா காக்கா கடையில விக்குது சீக்கா சீக்கா சீக்கா
பொண்ணு வர்ரா ஷோக்கா எழுந்து போடா மூக்கா
ஆடுற வயசுல ஆடி தான் பார்க்கணும்டா அள்ளு
அட்வைஸ் பண்ண எவனாச்சும் வந்தானா தள்ளு
உனக்கு பிடிச்சா அள்ளு அள்ளு ஊரு கிடக்கு தள்ளு தள்ளு தள்ளு
அடிச்சு பிடிச்சு அள்ளு அள்ளு அரைச்சு சலிச்சு தள்ளு தள்ளு தள்ளு
மனச மட்டும் அள்ளு அள்ளு மத்ததெல்லாம் தள்ளு தள்ளு
கலகலப்ப அள்ளு அள்ளு கவலை எல்லாம் தள்ளு தள்ளு

MUSIC TALKS - ADI POONGUYILE POONGUYILE KELU - NEE PAATEDUTHTHA KAARANATHAI KOORU - YAARIDATHIL UN MANASU POCHU - NOOLAI POLA UN UDAMPU AACHU - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

 


அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு 
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 
யாரிடத்தில் உன் மனசு போச்சு 
நூலை போல உன் உடம்பு ஆச்சு

அடி பூங்குயிலே பூங்குயிலே கேளு 
நீ பாட்டெடுத்த காரணத்த கூறு 
யாரிடத்தில் உன் மனசு போச்சு 
நூலை போல உன் உடம்பு ஆச்சு
வட்டம் இட்டு சுத்தும் கண்ணு வீச்சு
வாய விட்டு போனதென்ன பேச்சு

ஆத்தங்கரை அந்தப்புறம் ஆக்கி கொள்ளவா 
அந்த அக்கரைக்கும் இக்கரைக்கும் கோட்டை கட்டவா
மாமன் கையில் பூவை தந்து சூடி கொள்ளவா
அடி ஆசை என்னும் ஊஞ்சல் கட்டி ஆடி கொள்ளவா
சொல்லு சொல்லு திட்டம் என்ன சொல்லுவது கஷ்டமா 
பொத்தி பொத்தி வச்சதென்ன என்ன என்னவோ இஷ்டமா
கூவாம கூவுறியே கூக்கூ கூக்கூ பாட்டு மாட்டாம 
மாட்டி புட்டா  சொக்கு பொடி போட்டு
யாரிடத்தில் உன் மனசு போச்சு நூல போல உன் உடம்பு ஆச்சு

ஊரை எல்லாம் சுத்தி வந்த ஒத்த கிளியே
இப்போ ஓரிடத்தில் நின்றதென்ன சொல்லு கிளியே
சொந்த பந்தம் யாரும் இன்றி வந்த கிளியே 
ஒரு சொந்தம் இப்போ வந்ததென்ன வாசல் வழியே
வேரு விட்ட ஆலங்ககன்னு வானம் தொட பாா்க்குது 
வானம் தொடும் ஆசையில மெல்ல மெல்ல பூக்குது
பூ பூவா பூக்க வச்ச மாமன் அவன் யாரு 
பாடுகிற பாட்டுலதான் நீயும் அதை கூறு


MUSIC TALKS - AAYIRAM KODI SOORIYAN POLE MALARNDHA KAADHAL POOVE - AASAIGAL KODI MANADHINIL VALARTHA KARISAL KAATU POOVE - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !


ஆயிரம் கோடி சூரியன் போலே மலர்ந்த காதல் பூவே
ஆசைகள் கோடி மனதினில் வளர்த்தாய் கரிசக்காட்டு பூவே
வானவில்லை போலே வானவில்லை போலே நீ 
பார்க்கும் இடமெல்லாம் வரும் பூவே பூவே பூவே வா

நானாக நான் இல்லையே நீயாக நான் ஆகிறேன்
நீராக நீரூற்றினால் வேறாக நானாகிறேன்
கொடியாக நான் ஆகிறேன் கிளையாய் நீ ஊன்று
செடியாக நானகிறேன் நிலமாய் நீ தாங்கு
வானத்து நிலவே வாசலில் இறங்கு
வாசனை மலர்கள் உனக்கென விரித்தேன் கரிசக்காட்டு பூவே !

உன்னை நான் கேட்காமலே உன்னோடு நான் வாழ்கிறேன்
என்னை நீ சேராமலே என்னோடு நீ வாழ்கிறாய்
என் மூச்சில் எப்போதுமே உன் காற்றை வாங்கினேன்
உன் காட்சி எப்போதுமே என் கண்ணால் பார்க்கிறேன்
எனக்குள் நீயும் உனக்குள் நானும் இருப்பதனாலே
இனி என்ன வேண்டும் கரிசகாட்டு பூவே !


MUSIC TALKS - CHELLA KILIGALAAM PALLIYILE - CHEVVANDHI POOKALAAM THOTTILILE - EN PONMANIGAL YEN THOONGAVILLAI - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



செல்லக்கிளிகளாம் பள்ளியிலே 
செவ்வந்திப் பூக்களாம் தொட்டிலிலே
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

கன்றின் குரலும் கன்னித் தமிழும்
சொல்லும் வார்த்தை அம்மா அம்மா
கருணைத் தேடி அலையும் உயிர்கள்
உருகும் வார்த்தை அம்மா அம்மா
எந்த மனதில் பாசம் உண்டோ
அந்த மனமே அம்மா அம்மா
இன்பக் கனவை அள்ளித் தரவே
இறைவன் என்னை தந்தானம்மா
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை

தந்தை ஒருவன் அந்த இறைவன்
அவனும் அன்னை இல்லாதவன்
தன்னைத் தேடி ஏங்கும் பிள்ளை
கண்ணில் உறக்கம் கொள்வானவன்
பூவும் பொன்னும் பொருந்தி வாழும்
மழலைக் கேட்டேன் தந்தான் அவன்
நாளை உலகில் நீயும் நானும்
வாழும் வழிகள் செய்வான் அவன்
என் பொன்மணிகள் ஏன் தூங்கவில்லை


MUSIC TALKS - AMAIDHIYAANA NADHIYINILE ODUM ODAM ALAVILLADHA VELLAM VANDHAAL AADUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



அமைதியான நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும் 
காற்றினிலும் மழையினிலும் 
கலங்க வைக்கும் இடியினிலும் 
கரையினிலே ஒதுங்கி நின்றால் வாழும் 
ஹோய் ஹோய்

தென்னம் இளங்கீற்றினிலே….
தாலாட்டும் தென்றல் அது 
தென்னைதனை சாய்த்துவிடும் 
புயலாக வரும்பொழுது 

அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

ஆற்றங்கரை மேட்டினிலே 
ஆடி நிற்கும் நாணலது 
காற்றடித்தால் சாய்வதில்லை 
கனிந்த மனம் வீழ்வதில்லை 

நாணலிலே காலெடுத்து 
நடந்து வந்த பெண்மை இது
நாணம் என்னும் தென்றலிலே 
தொட்டில் கட்டும் மென்மை இது

அமைதியான
நதியினிலே ஓடும்
ஓடம் அளவில்லாத
வெள்ளம் வந்தால் ஆடும்

அந்தியில் மயங்கி விழும்
காலையில் தெளிந்து விடும் 
அன்பு மொழி கேட்டுவிட்டால் 
துன்ப நிலை மாறிவிடும் 

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் 
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

காற்றினிலும் மழையினிலும் 
கலங்க வைக்கும் இடியினிலும்
கரையினிலே ஒதுங்கி நின்றால் 
வாழும் ஹோய் ஹோய்

அமைதியான நதியினிலே ஓடும் ஓடம் 
அளவில்லாத வெள்ளம் வந்தால் ஆடும்

Monday, January 13, 2025

CINEMA REVIEW - LUCKY BHASKER (2024) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !




ஒரு சில படங்கள் மட்டும்தான் சினிமா வெறும் பொழுது போக்கு சாதனம் மட்டும் இல்லை என்று நிருபிக்கும். கமேர்ஷியல் படங்கள் கூட ஒரு அருமையான கருத்துக்களை சொல்லக்கூடிய ஒரு சிறப்பான கருவி என்று நிரூபிக்கும் அந்த வகையில் ஒரு சூப்பர் படம்தான் இந்த லக்கி பாஸ்கர், ஒரு வங்கி காசாளராக 1990 களில் வேலை பார்த்தாலும் கடன் தொல்லையில் கஷ்டப்பட்டுக்கொண்டு இருக்கும்போது ஒரு நுணுக்கமான வேலையை செய்தால் ரிஸ்க் எடுத்ததுக்கு ஏற்ப அதிகமாக சம்பாதிக்கலாம் என்று ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. வாழ்க்கையில் வேறு வழியே இல்லாமல் கொஞ்சம் இல்லீகலாக இறங்கி வேலை பார்க்கும் பாஸ்கரும் அவருடைய குழுவினரும் பின்னாட்களில் எப்படி இந்த பிரச்சனைகளில் இருந்து எல்லாம் வெளியே வருகிறார்கள் என்பதை சிறப்பாக சொல்லி இருக்கிறார்கள் , தமிழ் , தெலுங்கு , மலையாளம் , ஹிந்தி , கன்னடா என்று நிறைய இந்திய மொழிகளின் பிலிம் மேக்கிங் ஸ்டைல் எல்லாம் கலந்து ஒரு ஸ்பெஷல்லான காமிரா வொர்க் இந்த படத்தில்தான் நான் பார்க்கிறேன். என்னதான் இந்த 2025 வருடம் என்னவோ நல்ல விஷயம் நடப்பது போல தோன்றினாலும் வருடம் ஆரம்பித்த முதல் வாரமே காட்டூ காட்டென்று பிரச்சனைகள் காட்டுவதால் - அடடா , இந்த வருஷமும் கரடு முரடாக கஷ்டமாக இருக்கிறதே என்று தோன்றுவதால் இந்த லக்கி பாஸ்கர் படம் எப்படியாவது முன்னேற்றம் அடைந்துவிடலாம் என்ற நம்பிக்கை கொடுத்துக்கொண்டு இருக்கிறது என்றால் கண்டிப்பாக மிகையாகாது. பொதுவாக வாரிசுடு போன்ற - ஒரு சொத்து , ஒரு வணிகம் , ஒரு பிஸினேஸ் என்றால் என்னவென்றே தெரியாமல் போதுமான ரிஸர்ச் இல்லாமல் மாஸ் - நடிகரின் வேல்யூவை மட்டுமே வைத்து படம் எடுக்கும் விஷயங்களை தவிர்த்துவிட்டு ஃபினான்ஷியல் லெவல்லில் நடக்கும் விஷயங்கள் என்ன ? இது அடிப்படையில் நம்முடைய வாழ்க்கையின் பெர்ஸ்பெக்டிவில் இருந்து எப்படி அணுகப்படுகிறது என்று மிகவும் தெளிவாக எல்லோருக்கும் புரியும் வகையில் காட்சிகள் இருக்கிறது. அதே சமயம் , கேரக்ட்டர் டெவலப்மென்ட் , எமோஷனல் ஆங்கில் , சின்ன சின்ன கேரக்ட்டர்களுக்கும் கொடுக்கும் இம்பார்டன்ஸ் , கதையின் இடையில் கொடுக்கப்படும் டுவிஸ்ட்ஸ் இது எல்லாமே பார்க்கும்போது துல்கர் சல்மான் அவர்களுடைய ஸ்கிரிப்ட் செலக்ஸன் எந்த அளவுக்கு நேர்த்தியாக உள்ளது என்பதையும் பார்க்க முடிகிறது. குருப் , ஸ்கேம் 1992 , கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் , ஃபர்ஸி (FARZI) - போன்ற இண்டெலிஜன்ஸ் மற்றும் இன்டரெஸ்டிங்கான்



















CINEMA REVIEW - I, ROBOT (2004) - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 


இந்த படத்துடைய கதை, வருங்காலத்தில் மனித இயந்திரங்கள் மனிதர்களுக்கு உதவி செய்வதற்காக உருவாக்கப்படுகிறது. இந்த கதை நடக்கும் 2035 களில் கிட்டத்தட்ட 10 மனிதர்களுக்கு ஒரு இயந்திரம் என USR நிறுவனத்தாரால் இயந்திரங்கள் வடிவமைக்கப்பட்டு மக்களுடைய அன்றாட வாழ்க்கையில் வேலைக்கார இயந்திரங்கள் ஒரு தவிர்க்க முடியாத அங்கமாகவே மாறிவிட்ட ஒரு காலகட்டம் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். ஒரு கட்டத்தில் இந்த இயந்திர தயாரிப்பு நிறுவனமான USR ன் உருவாக்கத்துக்கு காரணமாக இருந்த முன்னாள் தொழில் அதிபரும் சைண்டிஸ்ட்டும்மான ஒருவர் மர்மமான முறையில் உயரமான கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து மரணிக்கவே இந்த வழக்கு விசாரணையில் இடம்பெறும் காவல்துறை அதிகாரி ஸ்மித் கொஞ்சம் கொஞ்சமாக இந்த மரணம் ஒரு மனித இயந்திரத்தால் நிகழ்த்தப்பட்டு இருக்கிறது என்ற கோணத்தில் ஆராய்ந்து பின்னாட்களில் இந்த கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட விஷயங்களை உயிரை பணயம் வைத்து கண்டறிந்து நடக்கப்போகும் பேராபத்துக்களை தடுக்க போராடுவதே இந்த படத்தின் கதை. ஒரு படமாக பார்க்க இந்த படம் பிரமாதமாக உள்ளது. இந்த படம் வெளிவந்த ஆண்டான 2004 ல் இவ்வளவு துல்லியமான பிசிறு தட்டாத விஎஃப்எக்ஸ் மிகவுமே பாராட்டத்தக்கது. லொகேஷன் , காஸ்டியூம் , டிசைன் , ஆர்ட் வொர்க் , சவுண்ட் எடிட்டிங் என்று எல்லாமே பிரமாதம். ஸ்பெஷல் எஃபக்ட்ஸ்ஸில் கண்ணாடி உடையும் காட்சிகள் எல்லாம் தெளிவாக இருக்கிறது. நம்ம ஊரூ எந்திரன் படம் கூட இந்த படத்தில்  இருந்து கொஞ்சம் காட்சிகளை கடன் வாங்கி வைத்து இருக்கிறது என்றே சொல்லலாம். ரொம்பவுமே தெளிவான படமாக குறிப்பாக ஆக்ஷன் அட்வென்சர் மிஸ்ட்டெரி என்று எல்லாமே நிறைந்த ஒரு படமாக இந்த படம் இருக்கிறது. இந்த படத்துடைய கதைக்கு ஏற்றவாறு பெரிய பட்ஜெட் கொடுத்து இருந்தாலும் டெர்மினேட்டர் - ஜெட்ஜ்மென்ட் டே - போன்ற படங்களோடு கம்பேரிஸன் பன்னும்போது மிகவும் சுத்தமான சயின்ஸ் ஃபிக்ஷன் படமாக இந்த படம் வெளிவந்ததால் கமேர்ஷியல் சக்ஸஸ் என்று சிறப்பாக பாக்ஸ் ஆபீஸ் சாதனை எதுவும் கொடுக்கவில்லை என்றாலும் விருதுகளை இந்த படம் வாங்கி குவித்துள்ளதால் இந்த படத்தினை கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள். 

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...