வாழ்க்கையில் நீங்கள் நிறைய நல்ல படங்களை பார்த்து இருக்கலாம். இந்த படங்கள் உங்களுக்கு நிறைய கருத்துக்களை சொல்லியிருக்கலாம். இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான ஒரு படம்தான் ஜோஷி - டைகர் அண்ட் ஃபிஷ். இந்த படத்துடைய கதை. கதாநாயகி ஜோஷி நடக்க முடியாமல் சக்கர நாற்காலியில் இருக்கிறாள். இருந்தாலும் சிறப்பாக வரையும் திறன்களை கொண்டு இருப்பதால் எப்படியாவது சம்பாதித்து உலகத்தை சுற்றி பார்க்க வேண்டும் என்று ஆசையோடு இருக்கிறாள். இப்போது நம்முடைய கதாநாயகிக்கு கிடைக்கும் தோழனாக வரும் நம்முடைய கதாநாயகன் சுனியோ எப்படி சுதந்திரமான உலகத்தை சுற்றி வர உதவுகிறார் என்பதையும் மேலும் பின்னாட்களில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும் ஒருவரை ஒருவர் விட்டுக்கொடுக்காமல் சேர்ந்து சந்தோஷமான வாழ்க்கையை அமைத்துக்கொள்வதும் படத்துடைய கதை. இந்த படம் கண்டிப்பாக மிகவும் மோட்டிவேஷன் நிறைந்த படம். வாழ்க்கையில் நீங்கள் உடைந்துபோனால் இந்த படத்தை கண்டிப்பாக பாருங்கள் உங்களுக்கு கண்டிப்பாக அடுத்த கட்ட குறிக்கோள் கிடைக்கும். இந்த படம் ஒரு அனிமேஷன் திரைப்படம் என்றாலும் மிகவும் எண்டர்டெயின்மெண்ட்டாக ஸ்டோரியை மட்டுமே ஃபோகஸ் பண்ணி நகராமல் திரைக்கதையில் வேகமாக நகர்த்தி இருக்கிறார்கள். காட்சிகள் துரிதமாக நகர்கிறது. ப்ரொடக்ஷன் டிசைன் பிரமாதம். இன்னும் சுருக்கமாக சொல்லப்போனால் ஆர்ட் பிலிம் ஸ்டைல்லில் ஒரு நல்ல கம்மெர்ஷியல் ரொமான்ஸ் பிலிம் இந்த திரைப்படம். கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள்.