இந்த காலத்து ஜெனரேஷன் தான் தெளிவாக இருக்கிறார்கள். அதாவது தோல்வி என்பது நம்முடைய வாழ்க்கையின் ஒரு சான்ஸ் தானே தவிர வாழ்க்கையை பற்றி வாழ்க்கையுடைய கட்டுப்பாட்டால் உருவாக கூடிய ஒரு விஷயமாக தோல்வி கருதப்படாது.
நாம் தான் சரியாக விளையாடிய விளையாட்டில் எங்கேயோ ஒரு இடத்தில் தவறு செய்திருப்போம்.அந்த தவறால்தான் நமக்கு தோல்வி உருவாகி இருக்கிறது.
பொதுவாக தான் வாழக்கூடிய வாழ்க்கை மட்டும் தான் வாழ்க்கை என்றும் மற்றவர்களை பற்றி கவலையில்லை என்றும் எதிர்பார்ப்பார்கள். நிச்சயமாக தோல்வியை மட்டும் தான் அவர்கள் வாழ்க்கையில் திரும்ப திரும்ப பார்த்து கொண்டேதான் இருப்பார்கள்
நம் வாழ்வில் நமது அகங்காரத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால், யாரும் நம்மைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள், நாமும் மற்றவர்களைப் பற்றி சிந்திக்க மாட்டோம். அங்கேதான் நாம் தவறு செய்கிறோம்.
இப்போது, நீங்கள் ஒரு பொறியியல் நிபுணராக விரும்பினால், தற்போதுள்ள பொறியியலாளர்களிடமிருந்தும் அவர்களின் பொறியியல் துறையிலிருந்தும் நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டும்.
நீங்கள் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டும்; நீங்கள் செய்வது மட்டுமே உண்மையான பொறியியல் என்று நினைக்கும் அகந்தையை வளர்த்துக்கொள்ளக் கூடாது.
இது கொஞ்சம் பெரிய கான்செப்ட் மக்களே. அடுத்த போஸ்ட் களில் இன்னும் தெளிவாகக் காணலாம்
1 கருத்து:
சொல்லறதெல்லாம் கரெக்டுதான், நியாயம்தான், வாஸ்தவம்தான், ஆனா யாருமே கேக்கமாட்டாங்களே ! 😵
கருத்துரையிடுக