நம் வாழ்வில் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களே, நாம் எல்லோருக்கும் பிடித்த நபராக வாழ முடியாது. நம்மை விரும்புபவர்கள் இருப்பார்கள். நம்மைப் பிடிக்காதவர்களும் இருப்பார்கள். சிலருக்கு நம் உயரம் பிடிக்காது, நம் தோலின் நிறம் பிடிக்காது, நம் குரல் பிடிக்காது. இப்படி நம்மைப் பிடிக்காது என்று முடிவு செய்தவுடன் அவர்கள் நிறைய விமர்சனங்களைக் கொட்டுவார்கள்.
அடிப்படையில் இது போன்ற மனிதர்களுக்கு நாம் கடையில் ₹30 க்கு வெண்பொங்கல் வாங்கி சாப்பிட்டால் கூட நாம் நமக்கு பிடித்த சாப்பாட்டை சாபிடுகிறோம் என்ற பொறாமை பொங்கி விடும். நாம் எந்த வகையிலும் சந்தோஷமாக இருக்கக்கூடாது என்பதுதான் அவர்களுடைய சந்தோஷம் என்று நினைப்பார்கள். இதற்காக நம்முடைய வாழ்க்கையை நாம் விட்டுக் கொடுக்கலாமா என்ற கேள்வி உங்களுக்குள்ளே கேட்டுப் பாருங்கள்.
நம்முடைய வாழ்க்கை மிகவும் அர்த்தமுள்ளது. அனுபவமிக்க சிலர் என்ன சொல்கிறார்கள் என்றால் நம்மிடம் பிடித்தவர்களோடு நம்மால் சிரித்து பேச முடிகிறது. நம்மை பிடிக்காதவர்களோடு நம்மால் சிந்தித்து தான் பேச முடிகிறது என்று சொல்லியிருக்கிறார்கள்.
நமது நாட்டின் தலைவிதியை மாற்றும் திறன் கொண்ட இளம் தலைமுறையினர் நமது பள்ளிகளில் கடைசி பெஞ்சில் அமர்ந்திருக்கலாம் என்ற கருத்தை அவர் முன்வைத்தார். நமது மனம் மிகவும் வயதானது. ஜனாதிபதி அப்துல் கலாம்.
இந்த கருத்தைக்கூட எனக்கு பிடிக்கவில்லை. ஆகவே இவரையும் எனக்கு பிடிக்கவில்லை என்று சொல்லக்கூடிய.ஆட்களும் இருக்கத் தான் செய்கிறார்கள் - இவர்கள் எல்லாம் வைத்துக்கொண்டு நம்மால் என்னதான் செய்ய முடியும்?
கொஞ்சமாக லைக்குகளும், கமெண்டுகளும் கிடைத்து ஒரு சின்ன கூட்டத்தின் ஆதரவு கிடைத்தால் போதுமானது. நம்மால் யாரை வேண்டுமென்றாலும் இருக்க முடியும். அதன் மூலமாக சந்தோஷம் தேடிக் கொள்ள முடியும் என்று இதனையே ஒரு வேலையாக வைத்துக் கொண்டு வாழ்வதெல்லாம் ஒரு வாழ்க்கையா?
ஒன்று உண்மைதான் மக்களே, வெறுப்பு மாற்றத்தை உருவாக்காது, அன்பு மாற்றத்தை உருவாக்காது, உண்மையான மாற்றங்கள் நம் எண்ணங்களாலும் செயல்களாலும் உருவாக்கப்படுகின்றன. நாம் எப்போதும் நம் திறன்களையும் செயல்களையும் மற்றவர்களின் நலனுக்காக பாரபட்சமின்றி கொடுக்க முயற்சிக்கிறோம் என்பதை அனைவரும் புரிந்துகொள்வது நல்லது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக