சனி, 13 டிசம்பர், 2025

நடிகர் பிரசாந்த் அவர்களின் சினிமா வரலாறு !



இணையதளத்தில் இருந்து எடுத்த பதிவு : சினிமா குடும்பத்தில் பிறந்த பிரசாந்த், ஆரம்பத்தில் டாக்டராக ஆக வேண்டும் என்ற கனவு கொண்டிருந்தார். ஆனால் 17 வயதில் நடிகராக அறிமுகமானார். 1990ல் வெளியான வைகாசி பொறந்தாச்சு படம் அவருக்கு முதல் படமே பெரிய வெற்றியைத் தந்தது. அடுத்த ஆண்டு மலையாளத்தில் பெருந்தச்சன்—அதுவும் பிளாக்பஸ்டர். 90களில் தமிழ் சினிமாவை ஆளியிருந்த பல லீட் நடிகர்கள் இன்று “ஆல் அட்ரஸ்” இல்லாமல் போய்விட்டார்கள். அந்த பட்டியலில் முக்கியமானவர் பிரசாந்த். ஒருகாலத்தில் தளபதி விஜய்க்கு இருந்த ரசிகர் கூட்டம் போலவே, பிரசாந்துக்கும் இருக்க வேண்டியது. ஏனெனில் அவர் 90களில் தனக்கென ரசிகர்களை உருவாக்கி, டாப் ஸ்டாராக உயர்ந்தார். ஆனால் அந்த உயர்வு நீடிக்கவில்லை; ஜீரோவில் இருந்து தொடங்கி உச்சிக்குச் சென்ற அவர், மீண்டும் ஒன்றுமின்றி கீழே விழுந்தார். 1992ல் வண்ண வண்ண பூக்கள், ஐ லவ் யூ, செம்பருத்தி, உனக்காக பிறந்தேன், பிரேம் சிகரம் என ஆறு படங்கள் தமிழ், இந்தி, தெலுங்கில் வெளிவந்தன. இதில் வண்ண வண்ண பூக்கள் தேசிய விருது பெற்ற பிளாக்பஸ்டர். வைகாசி பொறந்தாச்சு ஹிந்தியில் ஐ லவ் யூ என ரீமேக் ஆனது, ஆனால் வெற்றி இல்லை 1993ல் எங்க தம்பி, தொவ்லிமுது, திருடா திருடா, கிழக்கே வரும் பாட்டு நான்குமே பிளாக்பஸ்டர். குறிப்பாக மணிரத்னம் இயக்கிய திருடா திருடா அவரது கரியரில் முக்கியமான படமாக அமைந்தது. 1994ல் ராசாமகள், கண்மணி, செந்தமிழ் செல்வன் மூன்றும் தோல்வி. 1995ல் அவரது தந்தை இயக்கிய ஆணழகன் வெற்றி பெற்று, பிரசாந்த் வேடிக்கேட்டபில் முதன்முறையாக வந்தார் 1996ல் கல்லூரி வாசல் (அஜித்துடன் முதல் படம்) தோல்வி, ஆனால் கிருஷ்ணா வெற்றி. 1997ல் மன்னவா தோல்வி. 1998ல் ஜீன்ஸ், கண்ணெதிரே தோன்றினாள், காதல் கவிதை மூன்றுமே வெற்றி. ஜீன்ஸ் அவரது கரியரில் மிகப்பெரிய மைல்கல். 1999ல் தாலு, பூமகள் ஊரவளம், ஜோடி, ஹலோ, ஆசையில் ஒரு கடிதம் அனைத்தும் வெற்றி. 2000–2003 காலத்தில் குடலசு, பார்த்தேன் ரசித்தேன் போன்ற படங்கள் வெற்றி. 2003ல் சுந்தர்.சி இயக்கிய வின்னர் பிளாக்பஸ்டர். ஆனால் 2004 – 2006 காலத்தில் ஜெய், ஷாக், ஆயுதம், லண்டன், ஜாம்பவான், தகப்பன்சாமி, அடைக்கலம் என்று மூன்று ஆண்டுகள் தொடர்ச்சியான தோல்விகள். இதே நேரத்தில் விஜய், அஜித் ஆகியோர் ரசிகர்களை வலுவாக பிடித்தனர். பிரசாந்த் நல்ல வாய்ப்புகளை (ராஜீவ் மேனனின் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், ஏ.ஆர். முருகதாஸ் தீனா) தவறவிட்டார். அந்த வாய்ப்புகள் அஜித்துக்கு சென்றன. 2007–2010 காலத்தில் எந்த படமும் வெளிவரவில்லை; காரணம் அவரது திருமண வாழ்க்கை பிரச்சினைகள். அவர் சினிமாவை விட்டு வணிகத்தில் கவனம் செலுத்தினார். 2008ல் டி.நகரில் 12 மாடி ஜுவல்லரி ஸ்டோர் திறந்தார். 2011ல் பொன்னர் சங்கர், மமட்டியான் இரண்டும் தோல்வி. 2012–2013 எந்த படமும் இல்லை. 2016ல் சாகசம் (தெலுங்கு ஜூலை ரீமேக்) தோல்வி. ரைட்யூம் (ஸ்பெஷல் 26 ரீமேக்) திட்டம் சூர்யாவுக்கு சென்றது. 2018ல் ஜானி (ரீமேக்) தோல்வி. 2019ல் வினய விஜயராம படத்தில் ஹீரோவின் அண்ணனாக நடித்தார். 2021–2023 எந்த படமும் இல்லை. 2024ல் அந்தகன் (ஹிந்தி அந்தாதோன் ரீமேக்) வெளியானது. ஆரம்பத்தில் மோகன் ராஜா இயக்க வேண்டும், ஆனால் பின்னர் அவரது தந்தை இயக்கினார். இந்த முறை ரீமேக் படம் நல்ல முறையில் எடுக்கப்பட்டதால் பாக்ஸ் ஆபீஸில் லாபம். அதே வருடம் கோட் படத்தில் தளபதியுடன் நண்பராக நடித்தார். மற்றபடி தமிழ் சினிமா மிஸ் பண்ணும் ஒரு ஹீரோ நம்ம பிரசாந்த் ! 

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - KAATHIRUNDHAI ANBE (ORE LATCHAM VINMEEN MAZHAIYAI POLIGIRATHEY !) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்...