திங்கள், 8 டிசம்பர், 2025

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #13

 


இணையதளத்தில் இருந்து எடுத்த பதிவு : 

ஆட்டோகிராஃப் வாழ்க்கையின் நினைவுகள் - 2004-ஆம் ஆண்டு வெளியான ஆட்டோகிராஃப் திரைப்படம், சேரனின் வாழ்க்கை அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டது. காதல் தோல்வி, வேலை தேடி அலையும் இளைஞனின் வாழ்க்கை, பள்ளி கல்லூரி இளமை பருவங்களில் சந்திக்கும் காதல் அனுபவங்கள் ஆகியவை மனதுக்கு நெருக்கமாக பேசப்பட்டன. இந்த படத்தில் சேரனே கதாநாயகனாக நடித்தார். 

அவருடன் கோபிகா, சினேகா, மல்லிகா, கண்ணதாசன், ராதிகா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்தனர். படம் 100 நாட்களுக்கு மேல் ஓடியது. தேசிய விருதுகள் மற்றும் இசை வெற்றி ஆட்டோகிராஃப்’ திரைப்படம் மூன்று தேசிய விருதுகளை பெற்றது: சித்ரா  “ஒவ்வொரு பூக்களுமே” பாடலுக்கான சிறந்த பாடகி விருது பா. விஜய்  சிறந்த பாடலாசிரியர் விருது பரத்‌வாஜ் சிறந்த இசையமைப்பாளர் விருது இந்த படத்தின் பாடல்கள் இன்றும் ரசிகர்களின் மனதில் இடம்பிடித்துள்ளன.

“மனசுக்குள்ளே காதல் வந்திச்சா” “ஒவ்வொரு பூக்களுமே” "நினைவுகள் நெஞ்சினில் புதைந்ததினால்" இவை இன்னும் பட்டித் தொட்டி எங்கும் ஒலிக்கின்றன.சமீபத்தில், மெகா டிவி நேர்காணலில் சேரன், ‘ஆட்டோகிராஃப்’ படத்தின் வெளியீட்டுக்கான ஒரு சம்பவத்தை பகிர்ந்தார். அவர் கூறியதாவது:
“சினேகாவிற்கு பேசப்பட்ட சம்பள தொகை ஒன்று. ஆனால் படம் ரிலீஸுக்கு முன்னர் நான் கொடுத்தது ஒரு பகுதி மட்டுமே. மீதித் தொகையை கொடுக்க முடியவில்லை. அப்போது நான் சினேகாவிடம் கேட்டேன் ‘படத்தை ரிலீஸ் செய்ய வேண்டும். உங்களுக்கு கொடுக்க வேண்டிய தொகை என்னிடம் இல்லை. நீங்கள் அனுமதி கொடுத்தால் ரிலீஸ் செய்கிறேன். படம் ஓடிவிட்டால் மீதித் தொகையை கொடுக்கிறேன்.’ அதற்கு சினேகா மிகப் பெருந்தன்மையாக, ‘நீங்கள் ரிலீஸ் செய்யுங்கள், பார்த்துக் கொள்ளலாம்’ என்றார். படம் நன்றாக ஓடியது, நிறைய பணம் வந்தது. பின்னர் நான் அவருக்கு மீதித் தொகையை திருப்பிக் கொடுத்தேன். 

யாரையும் ஏமாற்றக் கூடாது, பணம் வரவில்லை என்றாலும் கொடுக்க வேண்டும். ஒரு நல்ல கலைஞன் இன்னொரு கலைஞனுக்கு செய்த உதவி அது.” சேரன் எப்போதும் சமூக உணர்வுகளுடன் கூடிய கதைகளை தேர்வு செய்கிறார். குடும்ப பாசம், காதல் தோல்வி, சமூகப் பொறுப்பு, மனித உறவுகள், போன்ற நிறைய நல்ல விஷயங்களை இவரது படைப்புகள் மற்றும் பங்களிப்புக்கள் கொண்ட படங்களில் பார்க்க முடிகிறது. 

கருத்துகள் இல்லை:

THEY CALL HIM OG (TAMIL REVIEW) - இவரு ரொம்ப பயங்கரமான ஆளாச்சே !!

ஷாகோ படத்தோடு கொடுத்த கனேக்ஷன், TRAVELLING SOLIDER பாட்டு, மொரட்டு வாள் காட்சிகள், ஜெயிலர் படம் பாணியில் மாஸ் கிளைமாக்ஸ் என்று பக்கா மசாலா ப...