சமீபத்தில், எனது வலைப்பதிவைப் பார்த்த ஒரு நண்பர், இந்த வலைப்பதிவில் மேலும் பல ஹேஷ்டேக்குகளையும் முக்கிய வார்த்தைகளையும் சேர்த்தால், இந்த இணையதளம் அதிக மக்களால் பார்க்கப்படும் என்றும், அதிக பார்வைகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்றும் கூறினார். இருந்தாலுமே இதனை பற்றிய பின்னணி ஆராய்ச்சி செய்யும் பொழுதுதான் இந்த மாதிரியாக அதிகப்படியான ஹேஷ்டேக்குகளும் முக்கிய வார்த்தைகளும் பதிவு செய்யப்பட்டால், விளம்பர நிறுவனம் அவற்றைக் குறைத்துவிடும் என்றும், அதனால் வருவாய் குறையும் என்றும் அந்த இணையதளம் கூறுகிறது. இது மக்களின் விளம்பரக் குறிப்புகளைக் கட்டுப்படுத்தி, ஈடுபாட்டை ஒழுங்குபடுத்தும் ஒரு செயல்முறை என்றும், இது விளம்பரங்களில் தாமதத்திற்கும் வருவாய் குறைவிற்கும் வழிவகுக்கும் என்றும் அது மேலும் கூறுகிறது. ஒருகட்டத்தில் இந்த வலைப்பூவுக்காக நிறைய செலவு செய்வதற்காக நான் நிறைய பணத்தை சேர்த்து வைத்திருந்தேன். ஆனால் அந்த பணமோ என்னுடைய கைகளை மீறி சென்று விட்டது. அது ஒரு சிறிய திட்டமாக இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது, ஆனால் அது ஒரு மிக பெரிய திட்டமாக மாறிவிட்டது. இருப்பினும், இந்த வலைப்பதிவின் எதிர்காலம் நிச்சயமற்றதாகவே உள்ளது. மக்களே, இந்த நாட்களில் செயற்கை நுண்ணறிவு வந்துவிட்டது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில், ஆன்லைன் வீடியோ தளங்களின் வருகைக்குப் பிறகு வலைப்பதிவுகளின் செல்வாக்கு கணிசமாகக் குறைந்துவிட்டது. நான் ஒரு கருத்தைப் பதிவிட வேண்டும் என்றும், கடமைக்காக ஒரு செய்தியை அனுப்ப வேண்டும் என்றும் உணர்ந்ததால், இதையும் அனுப்பினேன். BEE GEES - STAYIN ALIVE - ஒரு ஆங்கிலப் பாடல் இப்படிச் செல்கிறது. டைட்டானிக் கப்பல் மூழ்கிக்கொண்டிருந்தபோது, சமைப்பதற்காகக் கப்பலில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த உயிருள்ள இறால் மீன்களும் , நண்டுகளும் கடலுக்குள் சென்றுகொண்டிருந்தபோது இந்தப் பாடலை மகிழ்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்தன இது வெளிநாட்டில் சொல்லப்படும் ஒரு இருண்ட நகைச்சுவைத் துணுக்கு. என் வாழ்க்கை இப்போது அப்படித்தான் இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக