சனி, 13 டிசம்பர், 2025

கொஞ்சம் சொந்த கதை , கொஞ்சம் சோக கதை !

 



காலமும் நேரமும் எப்போதுமே நிறைய மாற்றத்துக்கு உட்படும்.என்றைக்குமே நாம் நிறைய பேரின் மீது அதிகமாக நம்பிக்கை வைத்திருக்க கூடாது மனிதர்களுடைய மனதும் அதிகமாக மாற்றங்களுக்கு உட்படக்கூடிய விஷயமே.இதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் நாம் யாரேனும் ஒருவருக்கு மிகவும் அதிகமான அன்பு வைத்திருப்போம். அவர்களுக்கு தங்கத்தில் கைக்கடிகாரம் வாங்கிக் கொடுத்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டு இருப்போம். ஆனால் அவர்களோ நம்மை ஒரு டிஷ்யூ பேப்பரை போலத்தான் மதித்திருக்கிறார்கள். நம்மை பயன்படுத்திக்கொண்டு தூக்கி எறிந்து விடத்தான் ஆசைப்பட்டு இருப்பார்கள் , அத்தகைய மனிதர்களை நாம் அடையாளம் காணும்போதுதான், நாம் வாழ்க்கை என்று நினைத்தது முடிவல்ல என்றும், வாழ்க்கையில் இன்னும் நிறைய இருக்கிறது என்றும், இந்த வாழ்க்கையில் கற்றுக்கொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் பல உள்ளன என்றும் நாம் உணர்கிறோம். இந்த உணர்வின் மூலம் வாழ்க்கை நம் முகத்தில் அறைவது போல் இருக்கிறது. நாம் நமது உண்மையான ஆதரவாளர்களை அடையாளம் காண வேண்டும். போலி தலைமைப் பண்புகளைக் கொண்டவர்களும், நேர்மையற்ற ஆதரவை வழங்குபவர்களும் நமக்காக ஒருபோதும் பயனுள்ள எதையும் செய்ய மாட்டார்கள். நான் சொன்னது போல, சுதந்திரத்தைத் தேடி வாழ்வில் நாம் விரும்பிய இந்தத் தனிமையை, ஒரு தவிர்க்க முடியாத விளைவாக ஏற்றுக்கொண்டு, அதனுடன் வாழ்வைத் தொடர வேண்டும்.

கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2023 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dear Death Vindhya Victim Verdict V3 Thunivu Varisu Vallavanukkum Vallavan Beginning Meippada Sei Kalathil Vendr...