சந்திரகுப்த மௌரியர் எனப்படும் சான்ட்ரா கோட்டஸ் கி.மு.321 முதல் கி.மு.292 வரை ஆட்சி செய்தார். அவரின் மகன் பிம்பிசாரர் கி.மு.293 முதல் கி.மு.272 வரை ஆட்சி செய்தார். இவரது மகன் டயோடேட்டஸ் எனப்படும் அசோகன் ஆரிய கூட்டத்தாரால் இந்திய கதாநாயகனாக போற்றப்பட்டார். இவர்கள் கிரேக்க அலெக்சாண்டரின் படையிலிருந்து வந்தவர்கள். சாக்கிய இனப் பெண்களை திருமணம் செய்து கொண்டு, செலுகஸ் நிகேதர் தலைமையில் பிட்சு சாணக்கியனின் தட்சசீல பல்கலைக்கழகத்தில் கல்வி கற்றனர்.
அங்கு சாணக்கியனிடம் படித்தவர்களில் ஒருவனாக சான்ட்ரா கோட்டஸ் இருந்தான். கூலிப்படையின் தலைவனாக இருந்த அவன், அலெக்சாண்டர் இறந்த மறு ஆண்டில், கி.மு.322-இல் மௌரிய சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கினான். சான்ட்ரா கோட்டஸின் பெயரை சந்திரகுப்த மௌரியன் என மாற்றி, அவனையும் சாணக்கியனையும், பேரன் அசோகனையும் ஆரிய கூட்டம் இந்திய கதாநாயகர்களாக விளித்தது.
மௌரியர்கள் சாக்கியர்கள், யவன கிரேக்கர்கள், காம்போஜ சஜிகிஸ்தானியர்கள், பாரசீகர்கள், துருக்கிய இனங்களின் கலப்பினமாக சிந்துநதிக்குப் பின் வாழ்ந்தவர்கள். இவர்களை மிலேச்சர்கள் என்றும் அழைத்தனர். அலெக்சாண்டரின் பாரசீக படையெடுப்பின் போது இவர்கள் இந்திய பகுதிகளில் ஊடுருவி, காந்தாரா, இந்துஷ், சத்தாகிடியா போன்ற பிரதேசங்களை கைப்பற்றினர். அப்போரில் அபிசாரெஸ், போரஸ் (இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன்), அம்பி போன்ற சுதந்திர இந்திய மன்னர்கள் எதிர்த்தனர். போரஸ் பெரும் யானைப்படையுடன் போரிட்டதால் அலெக்சாண்டர் படுகாயமடைந்து தோல்வியுற்று பாபிலோனில் இறந்தான். சீன நூல்கள் இதனை குறிப்பிடுகின்றன.
அலெக்சாண்டரின் படையெடுப்புக்கு முன்னர் இந்தியப் பெருநிலப்பரப்பில் தமிழே பேசப்பட்டது. பின்னர் அது திரிபடைந்து வடமொழி, பிராகிருதம் என அழைக்கப்பட்டது. சாதவாகனர்கள், மகாராஷ்டிரம், கன்னடம், ஆந்திரம் ஆகிய பகுதிகளில் தமிழோடு இணைந்து பாவிக்கப்பட்டது.
பின்னர் சமஸ்கிருத கலப்பால் தனிமொழிகளாக பரிணமித்தன. சேர நாட்டுத் தமிழும் மலையாளமாக மாறியது. சிந்து ஆற்றின் மேற்குப் பகுதியில் கி.மு.7000–3200 இடையே உழவு நாகரிகம் விளங்கியது. மழவர்கள் அல்லது மள்ளர்கள் எனும் தமிழ்ப் பழங்குடிகள் சிந்துவெளியில் அரண் சூழ்ந்த நகரங்களில் வாழ்ந்து, அலெக்சாண்டரை எதிர்த்துப் போரிட்டனர் என கிரேக்க, உரோமானிய வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றனர்.
ஆய்வாளர் குணா, இந்தியப் பெருநிலப்பரப்பில் முதன்முதலில் வந்த ஆரியர்கள் இவர்களே எனவும் கைபர், போலான் கணவாய் வழியாக வந்ததாகக் கூறப்படுவது பொய்யான ஆரியக் கோட்பாடு எனவும் நிறுவுகிறார். ஆரிய சித்தாந்த வேதகாலம் என்பன பிந்தைய கற்பனைகள் எனவும் தெரிவிக்கிறார். அம்பேத்கார், விவேகானந்தர் போன்றோர் இந்திய தேசிய மொழியாக தமிழே தகுதியானது என கூறினர்.
சாணக்கியன் பாரசீக வம்சாவளியிலிருந்து வந்தவன். தட்சசீல விஹாரத்தில் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டவன். சந்திரகுப்த மௌரியர், பிந்துசாரர் ஆகியோருக்கு பிரதமராக இருந்தான். அர்த்தசாஸ்திரம் என்ற நூல் சங்க இலக்கியங்களில் எங்கும் குறிப்பிடப்படவில்லை. மௌரியர்கள் தமிழர்களின் எதிரிகளாக “வம்ப மோரியர்” என சங்க இலக்கியங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களால் தமிழகத்தை அடிமைப்படுத்த முடியவில்லை.
தமிழ்நாடு அகச்சமயத்தின் கோட்டையாக இருந்ததால் அசோக கல்வெட்டில் சேர, சோழ, பாண்டிய, ஈழம் ஆகியவை பிடிக்க முடியாத தேசங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. சந்திரகுப்த மௌரியரின் ஆட்சிக்காலத்திலேயே தென்னகத்தை கைப்பற்றும் முயற்சி தொடங்கியது. பிம்பிசாரரின் காலத்தில் அது தீவிரமானது. முதலில் வடுகர்களின் துணையுடன் துளுவ நாட்டைத் தாக்கி, நன்னன் மரபினனை முறியடித்து பாழியை கைப்பற்றினர்.
அங்கிருந்து அதியமான் எழினி, சோழ அமுந்தூர்வேல் திதியன், பாண்டிய மோகூர்த் தலைவன் ஆகியோரைத் தாக்கினர். சேரர் பிட்டங்கொற்றன் பல தடவை மோரியர்களோடு போரிட்டார். எழினி வட்டாறு, செல்லூர் இடங்களில் மோரியர்களை எதிர்த்தார். செல்லூர் போரில் வீரமரணம் அடைந்தார்.
அசோக கல்வெட்டில் அதியமான் மரபினர் ‘சத்திய புத்திரர்கள்’ என குறிப்பிடப்பட்டனர். திதியனும், மோகூர்த் தலைவனும் மோரியர்களை தோற்கடித்தனர். மோரியர்கள் பாழியில் நிலை கொண்டனர். தமிழக எல்லையில் ஏற்பட்ட தோல்வி மௌரியர்களை பெரும் படை திரட்டச் செய்தது. துளு, எருமை நாடுகளின் வழிகளில் பாறைகளை வெட்டி பாதைகள் அமைத்தனர். சங்க புலவர்கள் இதனைப் பாடல்களில் குறிப்பிட்டுள்ளனர்
பின்னர் மௌரியப் பெரும்படை தமிழகத்தைத் தாக்கியது. சோழர் இளஞ்செட்சென்னி தமிழர் கூட்டணியை திரட்டி, பெரும் படையுடன் போரிட்டார். வல்லம் போரில் மௌரியர்கள் பெரும் தோல்வியடைந்தனர். அகம் 336-ல் பாவைக் கொட்டிலார் மௌரியர்களை ஆரியர் எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பல தடவை தோல்வியடைந்த மௌரியர்கள் பாழிக்குப் பின்வாங்கினர்.
இளஞ்செட்சென்னி பாழி வரை படையெடுத்து வெற்றி பெற்றார். இவ்வாறு பழந்தமிழக மூவேந்தர்கள், அலெக்சாண்டரின் படையெடுப்புக்குப் பின்பாக இமயம் வரை சென்று தமது இலச்சினைகளை பொறித்தனர். இது அவர்கள் பூர்வீக அரசர்கள், சுதேச குடிகள் என்பதை உறுதிப்படுத்தியது. வம்ப மோரியர்கள் எனப்படும் அந்நியர்களை தமது இறையாண்மைக்கு கட்டுப்படுத்தும் நோக்கத்திலேயே இப்போர் நடைபெற்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக