செவ்வாய், 2 டிசம்பர், 2025

இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-001

 


நாம் எவ்வளவு கடினமாகப் போராடினாலும், வாழ்க்கை நம்மை அதிகமாகச் சோதிக்கிறது மக்களே. ஒரு வடிவேலு அவர்களின் காமெடி காட்சியில் உனக்கு என்ன பிரச்சனை ? என்று கேட்கும் பொழுது பிரச்சனையே நீதாண்டா என்று சொல்லக்கூடிய டயலாக்தான் நினைவுக்கு வருகிறது.வாழ்க்கையில் ஒருபோதும் கவனக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ இருக்கக்கூடாது மக்களே  ஒருவரை, குறிப்பாக ஒருவரை மட்டுமே அதிகமாக நம்பக்கூடாது, அலட்சியமாக இருக்கக்கூடாது. அந்த நம்பிக்கை பின்னர் நமக்கு தீங்கு விளைவிக்கும். 

மற்றவர்களுக்கு மகிழ்ச்சியளிக்கும் வாழ்க்கையையும், தங்களுக்கு உண்மையாக இருக்கும் வாழ்க்கையையும் வாழ்பவர்கள் அவர்களுக்குச் சொந்தமான வாழ்க்கையை பார்த்தால் அது திருப்திகரமானது அல்ல மேலும்  சோகமானது அந்த வாழ்க்கை. 

எல்லோரும் நமக்காக எப்போதும் லைக் பட்டனை அழுத்துவார்கள் என்று நாம் நினைக்கக்கூடாது. வாழ்க்கையில் பலர் நமக்கு டிஸ்லைக் பட்டனைக் கொடுப்பார்கள். ஆனால் இவை அனைத்தும் இணைந்தால்தான் வாழ்க்கை முழுமையடையும். 

டிஸ்லைக் பட்டனைப் பயன்படுத்தினால்தான் மற்றவர்களின் வெறுப்பைப் புரிந்துகொள்ள முடியும். நமது போட்டி மனப்பான்மை அதிகரிக்கும், நாம் வெற்றி பெற முடியும்

நம் வாழ்வில் உள்ள பிரச்சனை என்னவென்றால், நாம் அனைவரையும் மகிழ்விக்க முடியும் என்று நம்புகிறோம். மற்றவர்களின் மகிழ்ச்சி அல்லது மற்றவர்களின் சோகம் என்பது அவர்களின் சொந்த உணர்வுகளைப் பொறுத்தது. நாம் எடுக்கும் செயல்கள் அவர்களிடம் எந்த நீடித்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது என்பதைப் புரிந்து கொள்ளுங்கள். !!

கருத்துகள் இல்லை:

இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-002

  நாம் எப்போதும் நம் சொந்தக் காலில் இருக்க வேண்டும். ஒரு பறவை அதன் இறக்கைகளையும் கால்களையும் மட்டுமே நம்புவது குறித்து யோசித்து இருந்தால் உங...