விவாகரத்து என்ற விஷயத்தை பற்றி இணையத்தில் கொடுக்கபப்பட்ட ஒரு கருத்து பகிர்வில் இருந்த கருத்துக்கள் : பெண்களை பெற்ற பெற்றோர், தங்கள் மகள் கருவை சுமக்கும் வரை மன அழுத்தத்தில் வாழ்கிறார்கள். காரணம், குழந்தை பாக்கியம் தாமதமாகும் போது அதையே விவாகரத்திற்கான முக்கிய காரணமாகக் காட்டுகிறார்கள். குழந்தை இல்லாததற்காக பெண்களை குற்றம் சாட்டுவது அநியாயம். ஆண்களும் மருத்துவ சிகிச்சை தேவைப்படலாம் என்ற உண்மையை சமுதாயம் மறைக்கிறது. மகப்பேறு சிகிச்சை, மன அழுத்தம், குற்றச்சாட்டு அனைத்தும் பெண்களுக்கே சுமத்தப்படுவது எழுதப்படாத விதியாகி விட்டது. பெண்களின் ஒழுக்கம், நடத்தை, குடும்ப பாரம்பரியம் ஆகியவற்றை கேள்விக்குறியாக்கி, அவர்களின் மனதை காயப்படுத்துகிறார்கள். திருமணத்திற்கு முன் ஆயிரம் விசாரணைகள் நடத்தும் குடும்பங்கள், திருமணத்திற்கு பின் சிறிய காரணத்திற்கே முறித்து விடுகின்றன. வரதட்சணை போன்ற விஷயங்களுக்கு என்றால் படித்த இளைஞர்களும் இந்த அநியாயத்தில் துணை போவது வேதனையானது. பெண்களின் வாழ்க்கையை அர்த்தமில்லாமல் செய்து விடுவது சமூகத்தின் மிகப்பெரிய குற்றம். கொடுமைபடுத்தினாலும் சகித்துக்கொண்டு குடும்பம் நடத்தும் பெண்களுக்கே குற்றம் சாட்டப்படுகிறது என்பதே சமுதாயத்தின் அநியாயம். விவாகரத்தான ஆணும் பெண்ணும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்கப்படுவதில்லை. மறுமணத்தில் பெண்களுக்கு அதிக சிக்கலும் குறைவான வாய்ப்புகளும் உள்ளது. உங்கள் பிள்ளைகளுக்கு கூட்டு குடும்பத்தில் வாழும் நெறிகளை கற்றுக் கொடுங்கள். மகளின் முடிவுகளை மதியுங்கள்; உங்கள் அனுபவங்களை அறிவுரை என்ற பெயரில் திணிக்காதீர்கள். மருமகன் தன் மனைவியை அனுசரிக்க வேண்டும் என நினைப்பவர்கள், தங்கள் மகன் மருமகளை அனுசரிக்கும்போது அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். மாப்பிள்ளையின் உடன்பிறப்புகள் அதிகாரம் செலுத்தும் நிலை மாறாத வரை மனக்கசப்புகள் குறையாது. வயதில் மூத்தவர்கள் தவறாக சொன்னால், அவர்களுக்கு அழகிய முறையில் புரிய வையுங்கள். வீட்டுக்கு வந்த மருமகளை தலையில் வைத்து கொண்டாட வேண்டாம்; காலில் மிதிக்கவும் வேண்டாம். சக மனிதரை போல மதியுங்கள். உரிமையை கொடுத்து, மரியாதையைப் பெறுங்கள். இங்கே மனம் விட்டு பேசினால் மட்டுமே நிறைய பிரச்சனைகள் தீர்ந்து போகும். கூர்மையான வார்த்தைகள் எலும்புகளையும் மனங்களையும் நொறுக்கும்; எனவே மென்மையான வார்த்தைகளைப் பயன்படுத்துங்கள். பேச்சுவார்த்தையால் நாடுகளுக்கிடையே சமாதானம் ஏற்படுகிறது அதுபோல குடும்பத்திலும் ஏற்பட வேண்டும். மருமகளையோ, மாமியாரையோ மூன்றாம் தர சொந்தமாக நினைக்காமல், நட்பு வட்டாரமாக பாருங்கள். பொன்சிரிப்பு, புன்முறுவல் எந்த பிரச்சனையையும் தவிர்க்கும் சக்தி கொண்டவை. பெண்கள் பெண்களுக்கு எதிரி ஆகாதீர்கள் சமுதாயத்தில் விவாகரத்தான பெண்களுக்கு மறுமண வாய்ப்பு மறுக்கப்படுவது பெரும்பாலும் பெண்களாலேயே. பெண்கள் முடிவெடுத்தால், தேங்கி இருக்கும் பெண்கள் மற்றும் முதிர் கன்னிகளின் வாழ்வு மலரும். ஆண்களின் பங்கு மிகக் குறைவு; பெண்களே பெண்களுக்கு தடையாக இருப்பது வேதனையானது. கரம்பிடித்த கணவன்களே, மனைவிகளுக்கு சமய உரிமை கொடுக்க முடியாவிட்டாலும், அடிப்படை உரிமை கொடுங்கள். அவர்களுக்கு ஆதரவாக இருங்கள். தவறு செய்தால் கண்டியுங்கள்; ஆனால் தண்டித்து விடாதீர்கள். அதிக தண்டனை, பெண்களின் மனதை ஒடித்து விடும் கூடுதல் நெறிமுறைப் புள்ளிகள் திருமணம் ஒரு புனித உறவு; அதை பொழுதுபோக்காகக் கருதாதீர்கள். பொறுமை, புரிதல், மரியாதை – இவை இல்லாமல் எந்த உறவும் நிலைக்காது. குழந்தை, பணம், சமூக அழுத்தம் – இவை திருமணத்தை முறிக்கும் காரணமாக இருக்கக் கூடாது. பெண்களின் கண்ணியமும், ஆண்களின் பொறுப்பும் சமமாக இருக்க வேண்டும். மேலும் மறுமணத்தை சமூகத்தில் ஏற்றுக் கொள்ளும் மனப்பான்மை வளர வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக