இந்த உலகத்தில் சிலர் வெளியில் நல்லவர்களாக நடித்து உள்ளுக்குள் துரோகமாக இருப்பார்கள், அவர்களை எளிதில் நம்ப வேண்டாம், ஏனெனில் நம்பிக்கை தவறாகும் போது அது மிகப்பெரிய காயம் தரும்; மன்னிப்பு உயர்ந்த பண்பு என்றாலும் எல்லோரையும் மன்னிக்க வேண்டும் என்றில்லை, சிலர் செய்த துரோகம் வாழ்க்கையை முற்றிலும் சிதைக்கும், அப்படிப்பட்டவர்களை மன்னிக்காமல் விலகுவது தான் நிம்மதிக்கான வழி, ஏமாற்றியவர்களை மீண்டும் நம்புவது உங்கள் அமைதியை அழிக்கும்; அதனால் உங்கள் வாழ்க்கையில் கவனம் செலுத்த வேண்டியது வளர்ச்சி, உங்களை ஏமாற்றியவர்களை நினைத்து நேரத்தை வீணாக்காமல் 100 மடங்கு வளர்ந்து காட்டுங்கள், இறைவனை நம்புங்கள், நல்ல எண்ணம் கொண்டவர்களை தெய்வம் எப்போதும் காப்பாற்றும், துரோகிகளைப் பற்றி பேசாமல் உங்கள் இலக்கில் கவனம் செலுத்துங்கள், ஒருமுறை ஏமாற்றியவர்களிடம் இருந்து விலகுங்கள், அதுவே நிம்மதிக்கான பரிசு; உண்மையான மனிதர்கள் ஒருமுறை இழந்தால் அவர்கள் திரும்ப வரமாட்டார்கள், அதனால் நல்லவர்களை மதித்து அவர்களிடம் நம்பிக்கையை காப்பாற்றுங்கள், நன்றி கெட்டவர்களை சந்தித்தால் அவர்களை மன்னிக்காமல் விலகுங்கள், ஏனெனில் மன்னிப்பு எல்லோருக்கும் பொருந்தாது, துரோகம் செய்தவர்களை மன்னிப்பது அவர்களின் பாவத்தை உங்கள்மேல் சுமப்பது போல, அதனால் மறந்து விடுங்கள் ஆனால் மன்னிக்க வேண்டாம். இந்த கடினமான விஷயங்களை கண்டு கவலைப்பட வேண்டாம், வாழ்க்கை என்றால் இவைகள் இருந்தால்தான் சுவாரஸ்யமாக இருக்கும் !!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக