சனி, 13 டிசம்பர், 2025

இதுதான் எங்கள் உலகம் ! - #TAMILWRITINGZ #001

 


நான் என்னுடைய வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டப்பட்டாலும் கடைசியில் தோல்வி மட்டும் தான் மிஞ்சும் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மக்களை என்னால் மட்டுமல்ல எல்லாராலும் இந்த விஷயத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது

இது ஒரு மிக முக்கியமான விஷயம், மக்களே. நமது இரத்தம் கொதிக்கிறது. ஆனாலும், சமூகத்தின் கட்டமைப்பை மாற்றாமலோ அல்லது அதன் குறைபாடுகளைச் சரிசெய்யாமலோ, தற்போது நம்மிடம் உள்ள அதிகாரத்தைக் கொண்டு நம்மால் எதையும் சாதிக்க முடியாது.

சராசரி உழைக்கக்கூடிய மனிதராக நம்மால் முடிந்த விஷயங்களை செய்துகொண்டுதான் இருக்கிறோம். ஆனாலும் நம்முடைய வாழ்க்கையில் முன்னேற்றம் இல்லவே இல்லை என்றால் நம்முடைய வாழ்க்கையிலேயே அடிப்படையில் நாம் ஒரு அமைப்புக்கு கட்டுப்பட்டு வாழக்கூடிய நிலையில் இருக்கிறோம்.நம்மிடம் பணம், காசு என்பது சேருவதில்லை சேர்ந்தாலும் நிலைப்பதில்லை

மனதுக்கு கஷ்டமாக இருக்கும் பொழுதுதான் நான் ஒரு விஷயத்தை கண்டுபிடித்தேன். நம்முடைய அறிவுத்திறனை இந்த 2026 ஆம ஆண்டுக்கு ஏற்றவாறு நாம் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இதனால்தான், பயனுள்ள பல விஷயங்களை நான் காணும்போது, ​​அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்வதற்காக இந்த வலைப்பதிவில் சில வாய்ப்புகளை வழங்கியுள்ளேன்.

நான் இதை மீண்டும் சொல்கிறேன்: இது முற்றிலும் தனிப்பட்ட கருத்துப் பகிர்வு. இந்த வலைப்பதிவு ஒரு தனிநபராலேயே நடத்தப்படுகிறது. உங்களுக்கு ஏதேனும் ஆட்சேபனைகள் இருந்தால், அவற்றை நீங்கள் கருத்துப் பகுதியில் தெரிவிக்கலாம். 

இந்த வலைப்பதிவில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என்றால், அதையும் நீங்கள் கருத்துப் பகுதியில் குறிப்பிடலாம். நான் அனைத்துக் கருத்துக்களையும் படித்து வருகிறேன்.








கருத்துகள் இல்லை:

CINEMA TALKS - 2023 - ல் வெளிவந்த தமிழ் படங்கள் !

  Dear Death Vindhya Victim Verdict V3 Thunivu Varisu Vallavanukkum Vallavan Beginning Meippada Sei Kalathil Vendr...