ஞாயிறு, 7 டிசம்பர், 2025

காலத்தின் பயணத்தில் தமிழ் சினிமா ! #11

 



2004-ம் ஆண்டு வெளியான ஜனா திரைப்படம், மலையாள இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கத்தில், காஜா மெய்தீன் தயாரிப்பில் உருவானது. இதில் அஜித், சினேகா, ரகுவரன், ஸ்ரீவித்யா, சித்திக் உள்ளிட்டோர் நடித்தனர். இசையை தீனா அமைத்தார். கதை: மும்பையில் டானாக இருக்கும் ஜனார்த்தனன் (ஜனா) தனது குடும்பத்தை இழந்ததால் கிராமத்தில் விவசாயம் செய்து வாழ்கிறார். ஆனால் மும்பையில் பழிதீர்க்க நினைக்கும் வில்லன் கிராமத்திற்கு வரும்போது, அதனால் ஏற்படும் மோதல்களே படத்தின் மையம் தமிழ் சினிமாவில் கேங்ஸ்டர் படங்களுக்கு பாட்ஷா முக்கிய இடம் பெற்றது. அந்த படத்தின் தாக்கம் ஜனா படத்திலும் காணப்பட்டது. பல காட்சிகள் பாட்ஷாவை ஒத்ததாக இருந்ததாக விமர்சகர்கள் குறிப்பிட்டனர். காஜா மெய்தீன், தமிழ் திரையுலகில் வெற்றிப் படங்களை தந்தவர். ஆனால் ஜனா படம் அவருக்கு மிகப்பெரிய தோல்வி. ஆரம்பத்தில் மலையாள படம் கலிகாலம் ரீமேக் என திட்டமிடப்பட்டது. 20 நாட்கள் படப்பிடிப்பு நடந்தபின், அஜித் சக்ரவர்த்தி படத்தில் நடித்ததால் குழப்பம் ஏற்பட்டது. ஒரிஜினல் எழுத்தாளர் எஸ்.என்.சாமி, சக்ரவர்த்தி மீது கடும் விமர்சனம் செய்தார். பின்னர் கதையில்லாமல், பாட்ஷா படத்தின் காட்சிகளைப் போன்று எடுத்ததால், படம் தரம் இழந்தது ஜனா படம் பாக்ஸ் ஆபிஸில் படுதோல்வி அடைந்தது. இதனால் காஜா மெய்தீன் சினிமாவை விட்டு விலகினார். அவர் கூறியதாவது: “இது அஜித்துக்கு தெரிந்து நடந்ததா தெரியாமல் நடந்ததா எனக்கு தெரியாது. ஆனால் சக்ரவர்த்திதான் காரணம். 2004 மே 1 அன்று வெளியான ஜனா, 168 நிமிடங்கள் ஓடியது. பாக்ஸ் ஆபிஸில் மோசமான நிலையை சந்தித்தது. பின்னர் இது தெலுங்கில் ரவுடி டான் என்றும், ஹிந்தியில் மெயின் ஹூன் சோல்ஜர் என்றும் ரீமேக் பண்ணப்பட்டதாக தகவல். - இணையதளத்தில் இருந்து எடுத்த கருத்துப்பகிர்வு !

கருத்துகள் இல்லை:

THEY CALL HIM OG (TAMIL REVIEW) - இவரு ரொம்ப பயங்கரமான ஆளாச்சே !!

ஷாகோ படத்தோடு கொடுத்த கனேக்ஷன், TRAVELLING SOLIDER பாட்டு, மொரட்டு வாள் காட்சிகள், ஜெயிலர் படம் பாணியில் மாஸ் கிளைமாக்ஸ் என்று பக்கா மசாலா ப...