செவ்வாய், 2 டிசம்பர், 2025

GENERAL TALKS - மனிதநேயம் எப்போதும் நிறைந்த தலைவர் !




சமீபத்தில் தயாரிப்பாளர் ஆர்.எம். வீரப்பன் அவர்கள் நமது மக்கள் ஹீரோ எம்.ஜி.ஆர் அவர்களை பற்றி சொன்ன சம்பவத்தை பற்றிய இணைய பதிவு பார்த்தேன் - அந்த பதிவு உங்களுக்காக ! எம்.ஜி.ஆர் – மனிதநேயத்தின் கதை ராமாவரம் தோட்டத்தில் ஒரு நாள்.அங்கு வந்திருந்தார் ஒரு பழைய நாடக நடிகர். முகத்தில் கவலை, மனதில் சங்கடம். “எதற்காக வந்தீர்கள்?” என்று கேட்டபோது, அவர் மெதுவாகச் சொன்னார்: “குடும்பமே பட்டினி. ஒன்றும் முடியவில்லை. சின்னவரோட நாடகத்தில நடிச்சிருக்கேன். ஏதாவது உதவி கிடைக்குமோ என்று வந்திருக்கேன்.” சிறிது நேரத்தில் எம்.ஜி.ஆர் வெளியே வந்தார். தூரத்தில் நின்று அந்த நடிகரைப் பார்த்தார். சைகையால் “எப்படி வந்தே?” என்று கேட்டார். பின்னர், “இருந்து சாப்பிட்டுவிட்டு தான் போகணும்” என்று சொல்லிவிட்டு காரில் ஏறிச் சென்றார். அந்த நடிகர் குழப்பத்தில் நின்றார். நான் அவரிடம், “மதியம் சாப்பிட்டு போங்க” என்றேன். அவர் பதற்றமாக, “என் குடும்பமே பட்டினி இருக்கும்போது நான் எப்படி சாப்பிடுவது?” என்றார். நான் ஐநூறு ரூபாய் கொடுத்தேன். அவர் மகிழ்ச்சியுடன் சாப்பிட்டார். மதியம் எம்.ஜி.ஆர் மீண்டும் வந்தார். “சாப்பிட்டீர்களா?” என்று கேட்டார் அவர் “ஆம்” என்றதும், எம்.ஜி.ஆர் காரில் ஏறினார். கார் சில அடிகள் சென்றதும் நின்றது. சைகையால் நடிகரை அழைத்தார். அவர் காருக்கு அருகில் சென்றார். எம்.ஜி.ஆர் யாருக்கும் தெரியாமல் அவரது பாக்கெட்டில் ஒரு கவரை வைத்துவிட்டு, காரை முன்னேற்றினார். அவர் கவரைத் திறந்தார்.அதில் பத்தாயிரம் ரூபாய். கண்களில் கண்ணீர். ஆனந்தக் கண்ணீர். அந்த கண்ணீரைக் கண்ட நான், அவரைவிட அதிக மகிழ்ச்சி அடைந்தேன். மறுநாள், தோட்டத்தில் எம்.ஜி.ஆரிடம் கேட்டேன் “அந்த நடிகரை சாப்பிடச் சொன்னீர்கள். ஆனால் அவரிடம் எதுவும் கேட்கவில்லை. பிறகு காரில் ஏறிச் சென்றீர்கள். அவர் பதற்றத்தில் இருந்தார். பின்னர் அழைத்து பத்தாயிரம் ரூபாய் கொடுத்தீர்கள். ஏன் அண்ணே அப்படிச் செய்தீர்கள்?” எம்.ஜி.ஆர் அமைதியாக என்னைப் பார்த்தார். பின்னர் சொன்னார்:“கஷ்டப்பட்டு வர்றவங்களை அவங்க வாயால் பணம் கேட்க வைக்கக் கூடாது. அவர் கூச்சம் உள்ளவர். கேட்டால் கம்மியாத் தான் கேட்டிருப்பார். அதனால் நம்மளா கொடுத்திடனும்.” இதுவே எம்.ஜி.ஆர்.
அவர் இறந்தும் வாழ்வது – மனிதநேயத்தால் மட்டும்தான் ! 


கருத்துகள் இல்லை:

இது ஒரு தமிழ் வலைப்பூ ! - TAMIL-WRITINGZ-002

  நாம் எப்போதும் நம் சொந்தக் காலில் இருக்க வேண்டும். ஒரு பறவை அதன் இறக்கைகளையும் கால்களையும் மட்டுமே நம்புவது குறித்து யோசித்து இருந்தால் உங...