நல்லவர் போல பேசுவர்கள் அனைவரும் நடிக்க தெரிந்த கெட்டவர்கள். பணம் இருந்தால் உன் அருகில் ஆயிரம் காக்கைகள்; பணம் இல்லை என்றால் உன் அருகில் ஒரு எறும்பு கூட இருக்காது.
இந்த உலகத்தில் எதிரியை கூட நம்பலாம், ஏனென்றால் அவன் உன் பலம் தெரிந்தவன். ஆனால் கூட இருப்பவனை நம்பாதே, ஏனென்றால் அவன் உன் பலவீனம் தெரிந்தவன்.
எப்போதும் அதை பயன்படுத்தி உனக்கு எதிராக வேலை செய்வான். நல்ல உறவினர் என்று யாருமில்லை. நல்லவர்கள் என்று எதையும் அவரிடம் கூறாதே; நாளைக்கே அவர் போஸ்ட் ஒட்டுவார்.
உங்களது சுயநலம் மிக முக்கியம்; இல்லையென்றால் இளிச்சவாயன் என்று சொல்லப்பட வேண்டிய நிலை உருவாகும். யார்மீதும் கோபம் கொள்ளாதே, யாரை பற்றியும் யாரிடமும் கூறாதே; அது டைம் வேஸ்ட்.
கெட்டவர்களிடம் பேச்சுவார்த்தை கூட தேவை இல்லை, எவ்வளவு பெரிய மனிதனா இருந்தாலும். கடவுள் உண்டு; அவன் உன்னை பார்த்துக்கொண்டே உள்ளான். வார்த்தைகளை கொட்டாதே, மனதில் வைத்து கொள். யாரையும் நம்பாதே;
அதுதான் உண்மை. உனக்கு தெரியாதவை யாருக்கும் தெரியாது; முயற்சி செய், கண்டிப்பாக உனக்கு தெரியும். புகழ்ச்சிக்கு அடிமை ஆகாதே; அது ஆணவத்தின் முதற்புள்ளி. உன் வழி தனி வழி; அதுதான் சரியான சிந்தனை.
உன்னுடைய ரகசியத்தை யாரிடமும் கூறாதே; மற்றவர் அதை செயல்படுத்துவார்கள். விடா முயற்சி வீணாகாது; தொடர்ந்திரு. தன்னம்பிக்கை மிக முக்கியம்; நம்மீது வைத்திரு.
நல்லா அக்கறையாக பேசுகிறார் அவர் நல்லவர் என்று நினைக்காதே; கஷ்டத்தில் கொஞ்சம் பணம் கேட்டு பார், உன் பக்கமே திரும்ப மாட்டார். தெரியாதவரிடம் கருணை காட்டு.
தெரிந்தவர்களிடம் கருணை காட்டாதே. உன்னுடையதை சாப்பிட்டவர்களே உனக்கு கெட்டதை செய்வார்கள். பொறுமை மிக முக்கியம்; காத்திரு, நடக்கும். எதிலும் யாரையும் நம்பி இருக்காதே; கைவிட்டு விடுவார்கள். உன்னை புகழ்ந்து பேசும் போது அமைதியாக இரு; உன்னை இகழ்ந்து பேசும் போது கேட்காமல் இரு; காலம் வெற்றி தரும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக