அதனால் நல்லவர்கள் ஏழையாய் வாழ்கிறார்கள். பணம், கள்ளத்தனம், பொய், பித்தாலாட்டம், அடுத்தவர் உடமையை சுரண்டல், மனசாட்சி இல்லாதவர்களுக்கே சமுதாயம் மதிப்பு தருகிறது.
குடும்பத்தை தவிர யார்மீதும் அதிக அன்பு வைக்காதே; ஏமாற்றினால் தாங்கமாட்டாய். ஊரை விட்டு விலகி வாழ்; எந்த பிரச்சினையிலும் உன் பெயர் இருக்காது. உன்னால் எதையும் செய்ய முடியும்; முயற்சி செய்.
உறவினர்கள் உள்ளத்தில் விஷம் வைத்து வெளியில் தேனாய் பேசுவார்கள். சிறியவர்களிடம் வேடிக்கை வேண்டாம்; அசிங்கப்படுவாய். இன்று உன்னோடு இருப்பவர்கள் நாளை வேறொருவருடன் இருப்பார்கள்;
பணமும் குணமும் மாறும். உன் பேச்சை மீறாத பெண்ணை காதலி, திருமணம் செய்; பேச்சை மீறி நடக்கும் மனைவி பின்னால் கீழ்த்தரமான வேலை செய்வாள். இன்று உனக்காக பொய் பேசும் பெண், நாளை மற்றவர்களுக்காக உன்னிடமே பொய் பேசுவாள். நல்ல எண்ணத்தோடு நல்லது செய்தால் கடவுள் உன்னோடு இருப்பார்.
யாரையும் ஏமாற்றாதே; அது திரும்ப வரும். கெட்ட பழகத்திலிருந்து விலகி நில்; உன்னை நீ தனியாய் அறிவாய். நீ செய்யும் ஒவ்வொன்றும் நாளை உன்னை தேடி வரும்; நல்லதா கெட்டதா என்று முடிவு செய். கடவுளிடம் பக்தி தேவையில்லை; பயம் வேண்டும்.
எதிலும் நீயே அனுபவசாலி; உன் வேலையில் நுணுக்கம் கண்டுபிடி; நீயே முதலாளி. வேலை தெரிந்தவன் தினக்கூலி; வேலையில் நுணுக்கம் தெரிந்தவன் முதலாளி.
உன்னை அவமானப்படுத்தியவர்களை எதிரி என்று நினைக்காதே; உன் வாழ்வால் அவர்களை வருந்தச் செய். யாருக்கும் அறிவுரை கூறாதே; கேட்டு பின்னால் உன்னை தப்பா பேசுவார்கள்.
ஒருவருக்கு அவசரத்தில் உதவி செய்; அடிக்கடி செய்தால் அடிமை ஆகிவிடுவாய். வாழ்க்கை நிலையானது அல்ல; ஆணவம் வேண்டாம்.
எதிரி உனக்கு தேவை; உன்னை யாரென்று புரியவைத்தவன் எதிரி. ஆயிரம் பேர் தவறாக பேசினாலும் கவலைப்படாதே; ஒழுங்காக இரு, உயர்வாய். கஷ்டத்தில் உதவியவனை மறக்காதே; இன்பத்தில் இருந்தும் கஷ்டத்தில் ஓடியவனையும் மறக்காதே. மன்னிப்பு என்பது தவறுக்கு துணை.
தெரியாமல் செய்த தவறை மன்னித்துவிடு; தெரிந்தே செய்த தவறை தண்டிக்க மறக்காதே. உன்னை வெறுப்பவர்களும் எதிர்ப்பவர்களும் எதிரிகள் அல்ல; உன்னை அழிக்க நினைப்பவர்களே எதிரி.
குடும்பம் என்னும் வண்டியில் ஆண் முன் சக்கரம்; பெண் பின் சக்கரம். பெண் பின் சக்கரம் முந்தி சென்றால் குடும்பம் சிதைந்து போகும்.
காரியவாதிகளுக்கு நிரந்தர எதிரி கிடையாது; காரியம் சாதிக்க எதையும் செய்வார்கள்; எச்சரிக்கை. நல்லவர்கள் பாண்டவர்கள் போல வனவாசம் அனுபவித்தார்கள்; கெட்டவன் துரியோதனன் ராஜயோகம் அனுபவித்தான்; ஆனால் இறுதியில் அழிந்தான்.
நல்லவர் வாழ கிருஷ்ணன் போல கடவுள் உடன் இருப்பார்; கெட்டவர் அழிய சகுனி போல கடவுள் உடன் இருப்பார். கலகம் செய்வோரிடம் பேச்சுவார்த்தை வேண்டாம்.
வெற்றி பெற்றால் ஆணவம்; தோல்வி பெற்றால் அனுபவம். தோல்வியே சிறந்தது; சிறிய தோல்வி பெரிய வெற்றியின் ரகசியம். அதிகம் பேசாதே; அதிகம் கேள். உதட்டுக்கு ஓய்வு கொடு; செவிக்கு வேலை கொடு.
நீ தானே அறிவாளி; மற்றவரின் பேச்சை அப்படியே செய்யாதே; யோசி. அருகிலுள்ளதை உதாசீனம் செய்தால் அது போன பின் அதன் அருமை தெரியும். உனக்கு குரு தேவையில்லை; நீயே அறிவாளி; உன் அறிவில் பலமுறை செய்து கற்றுக்கொள்.
மனதை விட்டு கெட்ட எண்ணங்களை வெளியேற்று; நல்ல எண்ணம் உண்டாகும். ஆன்மிக பாதை தவறை தவிர்க்கும் பாதை. அதிகம் நேசித்ததே அதிகம் வேதனை தரும். கனவு நிழல் போல பின்தொடரும்; பயப்படாதே. உலகில் விளைமதிப்பற்றது கண்ணீர். கர்மா எத்தனை ஜென்மம் எடுத்தாலும் பின்தொடரும்; பாவம் சேர்க்காதே.
வாழ்க்கையில் எல்லாவற்றிலும் பசி; அந்த பசிக்கு மட்டும் உணவு கொடு. சிக்கனத்திலும் சிறிய உதவி செய். "தான்" என்ற கர்வம் உன்னை அழிக்கும். காலனி அணியாமல் நடந்து பழகு; மூளையில் புது உணர்ச்சி வரும். வலிக்கு மருந்து நல்ல தூக்கமும் நல்ல சாப்பாடும்.
கெட்டவர்களுக்கு கெட்டவரே பிடிக்கும்; நல்லவர்களுக்கு நல்லவரே பிடிக்கும். கெட்டவன் கேடு நினைப்பான்; இறைவனும் அவனுக்கு துணை இருப்பான்; அது விதி. நீ வெளியில் சொல்வது நடப்பதில்லை; சொல்லாததே நடக்கும். மானம் ஒன்றே பெரிது; சின்ன விசயங்களில் அசிங்கப்படலாம்; அனுபவமாக கொள்.
உன்னை மதிப்போரை மதிக்கவும்; மதிக்காதவர்களை மதிக்காதே. வாழ்க்கை இன்பம் பாதி, துன்பம் பாதி; துன்பம் வந்தால் சோர்ந்து போகாதே. வார்த்தைகள் கூர்மையான ஆயுதம்; கட்டுப்படுத்து. அடிப்பட்ட பிறகு அனுபவசாலி ஆகு; மீண்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக