நிறைய நேரங்களில் நடந்த தவறுக்காக சின்சியரான மன்னிப்பை கேட்பவர்களும், அடுத்தடுத்த செயல்களில் தங்களுடைய நடவடிக்கைகளையும் பழகும் திறனையும் மாற்றிக்கொள்ளும்வர்களும் தான் பொதுவாக மெச்சூரிட்டி கொண்ட ஆட்களாக கருதப்படுகிறார்கள். ஒரு மனிதன் தவறு செய்த பிறகு, அதை உணர்ந்து, மனதார மன்னிப்பு கேட்பது மட்டுமல்லாமல், அடுத்தடுத்த வாழ்க்கை நடைமுறைகளில் அந்த தவறை மீண்டும் செய்யாமல் சுய மாற்றம் கொண்டு வருவது தான் உண்மையான வளர்ச்சி. மெச்சூரிட்டி கொண்டவர்களின் அடையாளங்கள் என்று சொல்லப்படுவது தவறை ஒப்புக்கொள்ளும் மனம் மேலும் தப்பை மறைக்காமல், அதை நேர்மையாக ஏற்றுக்கொள்வது போன்றதாகும் !
மாற்றம் செய்யும் திறன் தேவைப்படுகிறது. பழைய பழக்கங்களை விட்டுவிட்டு, புதிய நல்ல பழக்கங்களை ஏற்கும் மனப்பாங்கு இவர்கள் திருந்தினார்கள் என்றால் தேவைப்படுகிறது, உறவுகளை மதிக்கும் மனம் இவர்களுக்கு தேவைப்படுகிறது. தன்னுடைய சுயநலத்தை விட, உறவின் நிலைத்தன்மையை முன்னிலைப்படுத்துவது. ஒருவரின் குறைகளை உடனே தீர்ப்பதற்குப் பதிலாக, அவர்களுக்கு வளர்ச்சி பெறும் வாய்ப்பு கொடுப்பது என்பதே சிறந்தது.
வாழ்க்கை அனுபவங்களில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு, அதை நடைமுறையில் பயன்படுத்துவது இதுபோல நடந்த தவறுக்காக கேட்கப்படும் மன்னிப்பின் உண்மையான அர்த்தம் மன்னிப்பு என்பது வெறும் வார்த்தை அல்ல; அது நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்பும் பாலம்.
ஒருவர் உண்மையாக மன்னிப்பு கேட்டால், அவருக்கு மீண்டும் ஒரு வாய்ப்பு கொடுப்பது உறவுகளை வலுப்படுத்தும். ஆனால், தொடர்ந்து அதே தவறுகளை மீண்டும் மீண்டும் செய்வது, அந்த மன்னிப்பின் அர்த்தத்தை வெறுமையாக்கி விடும். மன்னிப்பை தவறாக பயன்படுத்தும் நிலைகள் மீண்டும் மீண்டும் தவறு செய்வது ஒரே குற்றத்தை பலமுறை செய்வது போன்றவைகளில் ஈடுபடுவார்கள்.
குறிப்பாக வெறும் வார்த்தை மன்னிப்பு: மாற்றம் இல்லாமல் "மன்னிக்கவும்" என்று சொல்லி விடுவது. உறவுகளை சோதனை செய்வது: மற்றவர்களின் பொறுமையை மீண்டும் மீண்டும் சோதிப்பது. இப்படிப்பட்ட சூழ்நிலைகளில், கடந்த காலத்தைப் பொறுத்து அவர்களுக்கு மன்னிப்பு கொடுப்பதே தேவையற்ற விஷயமாக மாறிவிடும்.
நிறைய பேர் இதனை புரிந்து கொள்ளாமல், "மன்னிப்பு கேட்டால் போதும்" என்று நினைத்து விடுகிறார்கள். ஆனால் உண்மையில், மன்னிப்பு என்பது மாற்றத்துடன் கூடியது. மாற்றமில்லாத மன்னிப்பு, உறவுகளை சிதைக்கும்; மாற்றத்துடன் கூடிய மன்னிப்பு, உறவுகளை வலுப்படுத்தும்.
மனித உறவுகள் நிலைத்திருக்க வேண்டுமென்றால், மன்னிப்பு உண்மையானதாக இருக்க வேண்டும். மாற்றம் நடைமுறையில் காட்டப்பட வேண்டும். மெச்சூரிட்டி வாழ்க்கையின் ஒவ்வொரு கட்டத்திலும் வெளிப்பட வேண்டும்.அதுவே கடந்தகால பிரச்சினைகளை விட்டு விட்டு, புதிய உறவுகளை அர்த்தமுள்ளவையாக மாற்றும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக