சமீபத்தில் நான் இணையத்தில் ஒரு கருத்தைக் கண்டேன். அதன் சாராம்சம் என்னவென்றால், மக்கள் ஒருவரைத் தேர்ந்தெடுத்து அவரைத் தலைவராக முன்னிறுத்த விரும்பினால், அனைவரும் மக்களைச் சிறிய குழுக்களாகப் பிரிக்க விரும்புவார்கள்.
அவ்வாறு செய்வதன் மூலம்தான் மக்களை எளிதாகக் கட்டுப்படுத்த முடியும் என்பதே அதிகாரத்தில் இருப்பவர்களின் எண்ணமாக இருக்கிறது.
பணம், சாதி, அழகு போன்ற பல உள்ளார்ந்த காரணிகளின் அடிப்படையில் நீங்கள் மக்களைப் பிரித்துப் பார்க்கக்கூடும்.
இது அடிப்படையில் தவறானது. மக்களே, இதைப்பற்றிச் சிந்தித்துப் பாருங்கள். நமது முன்னோர்கள் ஒரு குழுவாக ஒற்றுமையாக இருந்ததாலும், நாமும் ஒரு குழுவாக ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று நமக்கு அறிவுறுத்தியதாலும்தான், நம்மால் அனைத்தையும் சாதிக்க முடிந்தது.
நமது முன்னோர்கள் பிளவுபட்டு அல்லது தங்களுக்குள் சண்டையிட்டுக்கொண்டிருந்திருந்தால், இன்று அவர்களின் சந்ததியினர் எவரும் உயிருடன் இருந்திருக்க மாட்டார்கள்.
நமது சூரிய நடித்த கருடன் திரைப்படத்தை பார்த்து இருக்கிறீர்களா?நடிகர் சூரி அவர்கள் அந்த திரைப்படத்தின் மூலமாக ஒரு விஷயத்தை இயக்குனர் சொல்ல.வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த விஷயம் என்னவென்றால் மண்ணாசை, பொன்னாசை, பெண்ணாசை என்ற மூன்று விஷயங்களுமே மனிதனுடைய வாழ்க்கையை சீரழித்துவிடுகிறது.
மனிதனுக்குள்ளே இருக்கக் கூடிய ஒற்றுமையை குலைத்து மனிதனை பேராசைக்காரனாக மாற்றி சண்டை போட வைக்கிறது என்பதுதான் நிதர்சனம்.
இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்ள உங்களுக்குப் பொதுவாகப் பல ஆண்டுகள் ஆகும். ஆனால் காலம் மாறிவிட்டது. தொழில்நுட்பமும் நிதி நிறுவனங்களும் மிக வேகமாக முன்னேறி வருகின்றன. எனவே, நீங்கள் இவை அனைத்தையும் விரைவாகக் கற்றுக்கொண்டு, வாழ்க்கைக்கு ஈடுகொடுக்கும் வகையில் அதற்கேற்ப முன்னேறுவது புத்திசாலித்தனம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக