சனி, 13 டிசம்பர், 2025

NAMMA CINEMAKU ENNATHAAN AACHU MAKKALE !


என் நண்பர் ஒருவர் யூடியூபில் ஒரு மோசமான திரைப்படம் பார்த்ததைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர் இப்படிச் சொன்னார்: "நமது தமிழ் சினிமா எங்கேதான் போய்க்கொண்டிருக்கிறது, மக்களே? விமல் போன்ற ஒரு திறமையான நடிகர் இப்படிப்பட்ட குறைகள் நிறைந்த ஒரு திரைக்கதையைத் தேர்ந்தெடுத்திருப்பது மிகவும் ஏமாற்றமளிக்கிறது." அவரது வார்த்தைகளில் இதோ தேசிங்கு ராஜா 2 படம் சிரிக்க வைக்க வந்தது, ஆனால் சலிப்பை மட்டும் கொடுத்தது. காமெடி சொல்ல வந்தவர்கள் காமெடியையே மறந்துவிட்டார்கள் போல, ஜோக் குண்டுகள் வெடிக்காமல் நமத்து போவதால் வெறுமனே சலிப்பு வெடிக்கிறது. முத்து ராம லிங்கம் படத்தில் கழுவி ஊற்றப்பட்ட ஒரு காமடி மறுபடியும் கொடுப்பதாக ஒரு டிராக், மந்திரியின் வீடியோ, மூன்று அக்கிரிக்கல்ச்சர் கல்லூரி நண்பர்கள் இவை எல்லாம் சேர்த்து கதை சொல்ல முயன்றாலும், திரையில் அது பேஸ்புக் போலி போஸ்ட்கள் போன்ற மாதிரி சிதறி விழுகிறது. முதல் தேசிங்கு ராஜா 1 வெற்றியை நினைத்து இயக்குனர் எழில் பழைய நினைவுகளை மட்டும் கொண்டு வந்தார்; கதை, திரைக்கதை எல்லாம் ரயில்வே ஸ்டேஷன்லே விட்டுவந்த மாதிரி. இரண்டு மணி நேரம் படம் பார்த்தவுடன், “என் வாழ்க்கையில் இது எல்லாம் ஒரு படம் என்று பார்த்தேனே நான் எடுக்கும் வருங்கால முடிவுகள் சரியா? நான் என்ன அவ்வளவு முட்டாளாக மாறிவிட்டேனா என்று” என்று கேட்கும் நிலை ஏற்படுகிறது;  இது சினிமா இல்லை, விமல், புகழ், சிங்கம்புலி, ராஜேந்திரன் போன்ற காமெடி பவர் ஹவுஸ் நடிகர்கள் இருந்தும், படம் முழுக்க என்னவோ யுட்யூப் காமெடிக்கு எடுத்த ரிகர்ஸல் மாதிரி தான் தெரிகிறது. மொத்தத்தில் ஒரு பிரியாணி மாதிரி அதில் அரிசி இல்லாமல் மசாலா மட்டும் போட்டிருக்கிறார்கள்; சுவை இல்லை, சலிப்பு மட்டும்.இயக்குநர் எங்கோ சென்று நிம்மதியாகத் தூங்கிவிட்டார் போலிருக்கிறது, அல்லது அவருக்குப் பதிலாக வேறு யாரோ இந்தப் படத்தை இயக்கியிருக்கலாம். இந்தப் படத்திற்காக இயக்குநர் எழில் ஒரு முறையான விளக்கத்தை அளிக்க வேண்டும்.

கருத்துகள் இல்லை:

MUSIC TALKS - KAATHIRUNDHAI ANBE (ORE LATCHAM VINMEEN MAZHAIYAI POLIGIRATHEY !) - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !!

காத்திருந்தாய் அன்பே எந்தன் காதல் நீதானே ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே உன் விழியால் அன்பே என்னை உருகச் செய்தாயே என் சீனி கண்ணீர் உன்...