இணையத்தில் இருந்து எடுத்த கருத்து பகிர்வு : கங்கை அமரன் தமிழ் திரையுலகில் இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், நடிகர் என பல்வேறு பரிமாணங்களில் தன்னை நிரூபித்தவர். அவர் இலையராஜாவின் தம்பி என்றாலும் தனித்திறமையால் தனக்கென ஒரு அடையாளம் பெற்றார்
கங்கை அமரன் – பல்திறமைகள் கொண்ட கலைஞர் 8 டிசம்பர் 1947, பண்ணைப்புரம், தேனி ! இசைஞானி இலையராஜா அவர்களின் தம்பி. அவரின் மகன்கள் வெங்கட் பிரபு (இயக்குனர்) மற்றும் பிரேம்ஜி அமரன் (நடிகர், இசையமைப்பாளர்) இசையமைப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர், திரைக்கதை ஆசிரியர், நடிகர், பாடகர் என பல்வேறு துறைகளில் பங்களிப்பு
வாழ்வே மாயம், சின்னத்தம்பி பெரியதம்பி, ஜீவா, பிள்ளைக்காக போன்ற படங்களில் அவர் இசையமைத்த பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன.
“மழலையின் மொழியினில் அழகிய தமிழ் படித்தேன் நான்” போன்ற பாடல்கள், தமிழ் மொழியின் இனிமையை இசையுடன் இணைத்தவை.
1980கள்–1990களில் அவர் எழுதிய காதல் மற்றும் தத்துவ பாடல்கள், கண்ணதாசன், வாலி ஆகியோருக்குப் பின் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவை.
தர்மதுரை படத்தில் வரும் “ஆணெண்ண பெண் என்ன” பாடல், சமூக சிந்தனையுடன் கூடிய அவரது கவிதைத் திறனை வெளிப்படுத்தியது. இயக்குனர் எனும் பரிமாணம் கோழி கூவுது படத்தில் இயக்குனராக அறிமுகமானார். எங்க ஊரு பாட்டுக்காரன், கரகாட்டக்காரன், ஊருவிட்டு ஊருவந்து, கோவில் காளை, தெம்மாங்கு பாட்டுக்காரன் போன்ற படங்கள் சூப்பர் ஹிட். அவரது படங்களில் ஒரு ஆழ்ந்த ஒன்லைன் (serious theme) இருந்தாலும், அதை கலகலப்பான காட்சிகளுடன் இணைத்து, ஜனரஞ்சகப்படமாக மாற்றும் திறமை அவருக்கே உரியது.
டைட்டில் காட்சிகள்: “செண்பகமே செண்பகமே”, “கரகாட்டக்காரன்”, “கும்பக்கரை தங்கையா”, “வில்லுப்பாட்டுக்காரன்” போன்ற படங்களில், ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த குறும்பு வீடியோக்களை டைட்டிலாக சேர்த்து, பார்வையாளர்களை ஈர்த்தார். பாடலாசிரியர் “கவிஞானி” கங்கை அமரன் எழுதிய பாடல்கள், காதல், தத்துவம், சமூக சிந்தனை ஆகியவற்றை இணைத்தவை. “ஒண்ணுக்கொண்ணு ஆதரவு உள்ளத்திலே ஏன் பிரிவு” போன்ற வரிகள், மனித உறவுகளின் ஆழத்தை வெளிப்படுத்துகின்றன. அதனால் அவரை “கவிஞானி” என்று அழைப்பது பொருத்தமானது.
ஜோடி, வில்லுப்பாட்டுக்காரன், ஊருவிட்டு ஊருவந்து, கரகாட்டக்காரன், பிரம்மா போன்ற படங்களில் சிறிய வேடங்களில் நடித்தார். எப்போதும் கலகலப்பான மனிதர்; அவரை பார்த்தாலே கிடைக்கும் என்று ரசிகர்கள் கூறுவர். பண்ணைப்புரம் எக்ஸ்பிரஸ் என்ற தொடரில், தனது சினிமா அனுபவங்களை நகைச்சுவையுடன் பகிர்ந்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக