ஒரு நாள் மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் நிழலில் படுத்து ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்தகளைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.” என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான், “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “என நினைத்துக்கொண்டே சென்றான். மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறதுஅதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான். சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி மன நிறைவோடு உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டு சென்றார். உங்களை பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அடுத்தவர்கள் நினைப்பதும் மிகவும் முக்கியமானது. மனித இனம் ஒரு சமுதாய விலங்கினம் என்பதை நினைவில் கொள்க ! உங்களுடைய எண்ணம் மற்றும் செயல் இந்த இரண்டும் நன்றாக இருந்தால்தான் உங்களை மதிப்பார்கள். உங்களை பற்றி யாரேனும் கேட்டால் உங்களுடய கௌரவம் மற்றும் மரியாதை குறையாத அளவுக்கு நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். கௌரவத்தை இழந்தால் திரும்ப அடைய முடியாது என்று எல்லாம் இல்லை. கௌரவத்தை அடைவது கடினமான எளிதில் சாத்தியப்படுத்த முடியாத செயலாக இருக்கும். உங்களுடய வாழ்க்கையில் இழப்பு என்று எதுவும் இருக்க கூடாது என்றால் கண்டிப்பாக உங்களுடைய செயல்களை 100 சதம் சரியாக செய்ய வேண்டும். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். உங்களுடைய செயல்களில் வேண்டும் கவனம்.
நிறைய சினிமா மற்றும் பொழுதுபோக்கு விஷயங்கள் நிறைந்த உங்களின் விருப்பமான தமிழ் கருத்துப்பகிர்வு தளம்! COPYRIGHT © 2023 - 2026 | NICE TAMIL BLOG | ALL RIGHTS RESERVED | DMCA PROTECTED SUPPORT • SHARE • SUBSCRIBE - ENJOY OUR BLOG - DON'T MISS THE ENTERTAINMENT OF READING THE BIGGEST PERSONAL BLOG EVER ! ENGLISH VERSION IS UNDER DEVELOPMENT ! ✔❤ #TAKE-CARE #BE-WELL ! GREETINGS FROM NTB!
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
SPECIAL TALKS - FT. HTML ARTWORKS - EP.4
--- போனைப் பார்க்காமலேயே சட்டைப் பைக்குள் கையை வைத்து 'Good Morning' அல்லது 'Good Night' என்று தப்பும் இல்லாமல் டைப் செய்யு...
-
The 2012 film The Avengers begins with the asgardian god Loki striking a bargain with an alien force known as the Chitauri. In exchange for ...
-
EN-2026/03 The 2010 film Prince of Persia: The Sands of Time follows the journey of Dastan, an orphan in the Persian Empire who is adopt...
1 கருத்து:
"வெற்றியோ தோல்வியோ நீ சம்பவக்காரன் தான் தலைவா"🔥💪🇪🇸
"ஜெய்க்கிறயோ தோற்கிறயோ 70 வருஷமா ஆண்ட கட்சிகள எதிர்த்து சண்டை செஞ்சி!
பல தடைகள், இழப்புகள், போராட்டம் எல்லாத்தையும் கடந்து 234 தொகுதியிலும் ஆளுங்களை நிறுத்தி ஒரு வரலாறு காணாத தேர்தலை நடத்தி முடிச்சு இருக்க தலைவா"
"தொண்டனின் வைரல் பதிவு"
#TamilNadu | #DMK | #TVK | #NTK | #VIJAY | #ADMK | #TamilNaduNews | #TVKVIJAY | #TamilNaduPolicalNews | #BreakiNewstoday
கருத்துரையிடுக