நம்முடைய வாழ்க்கையில் நாம் யாரை எதிர்த்து போராடுகிறோமோ அவர்களை சுலபமாக ஜெயிக்க ஒரு யோசனை இருக்கிறது. அவர்கள் அந்த போராட்டத்தில் அதிகமான செயல்களை செய்யாமல் தடுத்து அவர்களுக்கு உள்ளே ஒரு தாழ்வான மனப்பான்மையை உருவாக்கினால் மட்டும் போதுமானது. மீதி வேலைகளை நாம் உருவாக்கிய அந்த தாழ்வான மனப்பான்மையே பார்த்துக்கொள்ளும். இதுதான் இப்போதைக்கு எதிர் தரப்பில் இருந்து நடக்கிறது. உண்மையில் நான் அவ்வளவாக புத்திசாலி அல்ல என்று பொருள் எடுத்துக்கொள்ள முடியாது. நிஜமான புத்திசாலிகளை கூட கவனமாக திட்டமிட்டால் நடக்கும் சம்பவங்களை கட்டுப்படுத்தி அவர்களை முட்டாள்கள் என்று அவர்களுடைய மனசாட்சியின் அடிப்படையில் நம்பும் ஆட்களாக மாற்றிவிடலாம். நடந்துகொண்டு இருப்பது நேருக்கு நேரான போர். இதனை நான் ஜெயித்தே ஆகவேண்டும். இந்த விஷயத்தில் எனக்கு இன்னுமே சிக்கலாக இருப்பது என்னவென்றால் இன்றைய நண்பன் நாளையை எதிரி என்ற மனப்பான்மைதான். இதுதான் வாழ்க்கை என்றும் கடந்த இருபதாயிரம் ஆண்டுகளாக வாழ்க்கையில் இதுதான் நடக்கிறது என்றும் பெரும்பாலான நேரங்களில் மக்கள் உணருவதே இல்லை. இந்த உண்மையை ஒரு மனிதன் எப்போதுமே மறக்க கூடாது என்று புரிந்துகொண்டேன். பிரதிபலன் இல்லாமல் யாருமே யாருக்குமே நல்லது பண்ண மாட்டார்கள். அப்படி நல்லது பண்ணுபவர்கள் சந்தோஷமான வாழ்க்கையில் இருக்க மாட்டார்கள் என்பதையும் புரிந்துகொண்டேன். சக்தியாளரை நம்புவது வேகவைத்த விதைகளில் இருந்து மரம் முளைக்கும் என்று நம்புவது போன்றதாகும். சக்தியாளரை நம்புவது அதிகப்படியான மனித முட்டாள்தனம். இந்த முட்டாள்தனத்தில் இருந்துதான் விடியல் நமக்கு தேவைப்படுகிறது.
No comments:
Post a Comment