ஒரு மனிதன் ஜெயிக்க கண்டிப்பாக பிளான் போட வேண்டும். உங்களிடம் சரியான பிளான் மட்டும் இருந்தால் உங்கள் சூழ்நிலை எப்படி உங்களை மட்டமாக மாற்றினாலும் நீங்கள் ராஜாவாக உங்களை மேலே கொண்டுவந்துவிடலாம். இந்த கருத்தை உணர்த்த ஒரு சிறுகதை இருக்கிறது.
ஒரு காலத்தில் சிறிய கிராமத்தில் மிகப் பெரும் பணக்காரனாக இருந்த ஒருவன் அடுத்த சில நாட்களில் அனைத்துச் சொத்துக்களையும் இழந்து, மரம் வெட்டிப் பிழைப்பான் என்று அவனது விதி அவனுடைய கனவில் வந்து ஆரூடம் சொல்லியதாம். இந்த வாக்கை போலவே வாழ்க்கையில் அடுத்தடுத்த தடங்கல்களும் நஷ்டங்களும் வந்து சொத்துக்களை இழக்கும்போது முதலில் தளர்ந்து போனாலும் மூளையை விட்டுக்கொடுக்காமல் சாதுர்யமாக யோசித்து அவன் ஒரு முடிவெடுத்தான். அதன்படி, அவன் வழக்கம் போல் தனவந்தனாகவே தொடர்ந்தது மட்டுமல்லாமல், முன்பைவிடவும் அதிக செல்வந்தனானான். அப்படி என்ன அவன் செய்தான்? மரம் வெட்டிப் பிழைக்க வேண்டும் என்பது தானே அவன் விதி? அதனால், காட்டுக்குச் செல்வான். அங்கே கண்ட கண்ட மரங்களையும் வெட்டாமல், சந்தன மரம் இருந்தால் மட்டுமே வெட்டுவான். இல்லையென்றால், அன்றைய தினம் பொழுது சாய்வதற்குள் அவன் கண்களில் எப்படியாவது ஒரு சந்தன மரம் தட்டுப்பட்டுவிடும். ஆமாம், மரம் வெட்டிப் “பிழைக்க” வேண்டும் என்பது அவன் விதியாயிற்றே! அதுவும் ரொம்பவும் சிரமப்பட்டெல்லாம் உடல் வருத்தி வெட்டமாட்டான். இரண்டு அல்லது மூன்று வெட்டுகள் போட்டதுமே, மரம் சாய்ந்துவிடும். எடுத்துப் போய் ஊரில் நல்ல விலைக்கு விற்க அவனுக்கு ஆள் பலம் அம்பு எல்லாம் உண்டு! அப்புறம், அவன் வளத்துக்குக் கேட்க வேண்டுமா என்ன? விதி சொன்ன வார்த்தையை விதிக்கே எதிராக பயன்படுத்துவதுதான் விதியை வெல்ல சரியான வழியாக கருதப்படுகிறது. விதி யாருக்குமே நன்மை செய்வதில்லை. அப்படியே செய்தாலும் இப்போது எல்லாம் தவறான ஆட்களுக்குதான் நல்லது செய்கிறது என்பதால் நாம்தான் புத்திசாலித்தனமான முடிவுகளை எடுக்க வேண்டும். இதுதான் வாழ்க்கை. இப்படித்தான் நாம் முடிவுகளை எடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment