யாரே நீ ? எங்கிருந்து வந்தாய் ? என் நெஞ்சில் சிறகு தந்தாய்
யாரோ நீ ? பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய்
ஒரு சில நொடி குழந்தையைப்போலே மறு சில நொடி கடவுளைப்போலே
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானாய்
உயிரினை தரும் உதிரத்தை போலே
உயரத்தை தொடும் சிகரத்தை போலே
அனு தினம் தினம் அதனினும் பெரிதாய் நீ ஆனாய்
வேறேதோ தூவுலகம் ஒன்றில் இவனாலே பூக்கிறேனா
ஊனுல்லா மின்னுணர்வு ஒன்று இவனாலே பாயிறேனா
இவனிடம் பணம் ஒரு துளி இல்லை மனிதரின் குணம் சிறு துளி இல்லை
இவனிடம் மனம் முழுவதும் முழுவதும் தந்தேனே !
திரை விலகிய மேடையை போலே பனி விலகிய கோடையைப்போலே
மழை நனைந்திடும் ஆடையைப்போலே ஆனேனே !
மரம் செடிகொடிகளை அணைத்தாயே ! மலர்களின் இதழ்களை துடைத்தாயே
உன் கையில் நான் சேர்ந்தால் என் செய்வாய் ?
வனங்களின் மகனென பிறந்தாயே புலிகளின் மடியினில் வளர்ந்தாயே
மான் என்னை நான் தந்தாய் என் செய்வாய் ?
மாறதே ! உன்னை உன் போல ஏற்றேனே !
ஆனாலும் உண்மை என்ன என்று கேட்டேனே ! உரைந்திடு
வனங்களின் மகனென பிறந்தாயே புலிகளின் மடியினில் வளர்ந்தாயே
மான் என்னை நான் தந்தாய் என் செய்வாய் ?
மாறதே ! உன்னை உன் போல ஏற்றேனே !
ஆனாலும் உண்மை என்ன என்று கேட்டேனே ! உரைந்திடு
யாரே நீ ? எங்கிருந்து வந்தாய் ? என் நெஞ்சில் சிறகு தந்தாய்
யாரோ நீ ? பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய்
ஒரு சில நொடி குழந்தையைப்போலே மறு சில நொடி கடவுளைப்போலே
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானாய்
யாரோ நீ ? பூந்துயிலில் வந்தாய் என் கண்ணில் கனவு தந்தாய்
ஒரு சில நொடி குழந்தையைப்போலே மறு சில நொடி கடவுளைப்போலே
பல நொடிகளில் அதனினும் மேலாய் நீயானாய்
No comments:
Post a Comment