Thursday, October 3, 2024

MUSIC TALKS - KODUTHATHELLAM KODUTHTHAN AVAN YAARUKKAGA KODUTHTHAAN ? ORUTHARUKKA KODUTHAAN ILLAI OORUKKAGA KODUTHTHAN - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !




கொடுத்ததெல்லாம் கொடுத்தான் அவன் யாருக்காக கொடுத்தான் ? ஒருத்தருக்கா கொடுத்தான் இல்லை ஊருக்காக கொடுத்தான்
மண்குடிசை வாசலென்றால் தென்றல் வர வெறுத்திடுமா ?
மாலை நிலா ஏழையென்றால் வெளிச்சம் தர மறுத்திடுமா
உனக்காக ஒன்று எனக்காக ஒன்று ஒருபோதும் தெய்வம் கொடுத்ததில்லை

படைத்தவன் மேல் பழியுமில்லை பசித்தவன் மேல் பாவம் இல்லை
கிடைத்தவர்கள் பிரித்துக்கொண்டார் உழைத்தவர்கள் தெருவில் நின்றார்
பலர் வாட வாட சிலர் வாழ வாழ ஒரு போதும் தெய்வம் கொடுத்ததில்லை

இல்லை என்போர் இருக்கையிலே இருப்பவர்கள் இல்லை என்பார்
மடி நிறைய பொருள் இருக்கும் மனம் நிறைய இருள் இருக்கும்
எது வந்த போதும் பொதுவென்று வைத்து வாழ்கின்ற பேரை வாழ்த்திடுவோம்



No comments:

GENERAL TALKS - பிரிவினை நீக்கப்பட வேண்டிய விஷயம்

சமூகத்தில் இருந்து சாதிப் பிரிவினைகளை அகற்ற, கல்வி என்பது நமக்குத் தேவையான மிக சக்திவாய்ந்த கருவிகளில் ஒன்றாகும்.  தரமான கல்வி, மக்கள் தன்னம...