Thursday, October 17, 2024

GENERAL TALKS - சந்தோஷமான வாழ்க்கை என்பது இதுதான் !




இந்த கதையும் படித்தபோது பிடித்து இருந்தது ! ஒரு காலத்தில் ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட பேரரசன் ஒருவன் இருந்தான். இருந்தாலும் அவனுக்கு தன் மனதை தூய்மைப்படுத்திக் கொள்ளவும், இறை வழியில் வாழ்வை செலுத்தவும் விருப்பம்.”அதற்கு என்ன செய்வது?” என்று வழி தேடியவன், குரு ஒருவரை சந்தித்தான். தன்னுடைய விருப்பத்தை அவரிடம் வெளிப்படுத்தியவன், ”குருவே! நான் என்ன செய்ய வேண்டும்?” என்றான் மன்னனின் விருப்பத்தைக் கேட்ட அந்த குரு, ”நீ ஒரு தோட்டம் போடு” என்றார். “தோட்டம் போட்ட பிறகு என்ன செய்வது?” என்று கேள்வி கேட்டான் மன்னன். “நீர் பாய்ச்சு. பிறகு மரம் வளர்த்து அதன் பிறகு அந்த மரங்களை பராமரித்து வா.” என்றார் குரு. எப்போதும் குரு ஒரு விஷயம் சொல்கிறார் என்றால், அதில் ஆயிரம் பொருள் புதைந்திருக்கும் என்பதை உணர்ந்த மன்னன், தன்னுடைய அரண்மனை திரும்பினான். அரண்மனைக்கு அருகிலேயே பெரிய இடத்தில் தோட்டம் உருவாக்கத் தொடங்கினான். ஆயிரக்கணக்கானவர்களின் துணையுடன் இதற்கான பணியில் ஈடுபட்டான். ஒரு சில ஆண்டுகள் பெரும்பாடுபட்டு, அற்புதமான ஒரு தோட்டத்தை உருவாக்கினான். அந்தத் தோட்டம் ஏராளமான மரங்களுடன் பச்சைப்பசேல் என்று காட்சியளித்தது. பல மரங்கள் பல்வேறு வண்ண பூக்களுடன் பூத்துக் குலுங்கின. பார்க்கும் போதே அந்த இடம் மனதிற்கு இதம் அளிப்பதாக இருந்தது. அத்துடன் மிக ரம்மியமாகவும் அந்த இடம் காட்சியளித்தது. மன்னன், ஒரு நாள் குருவை சந்திக்கச் சென்றான். தான் ஒரு தோட்டத்தை உருவாக்கி விட்டதாகவும், அந்தத் தோட்டத்தை வந்து பார்வையிடும்படியும் குருவை அழைத்தான். அவரும் மறுநாள் வருவதாக கூறினார். குருவை வரவேற்க தடபுடலான ஏற்பாடுகளைச் செய்தான் மன்னன். தன் பணியாளர்களை வருத்தி எடுத்து, அங்கிருந்த காய்ந்த சருகுகள் அனைத்தையும் அப்புறப்படுத்தினான். காய்ந்த சுள்ளிகள், சருகுகள் எதுவும் இல்லாமல், அந்த இடம் மிகவும் தூய்மையாக பளிச்சென்று காட்சி தந்தது. சிறிது நேரத்தில் குரு வந்தார். மன்னன் மகிழ்ச்சியுடன் அவரை வரவேற்றான். தான் உருவாக்கிய தோட்டத்தை சுற்றிக் காண்பித்தான். தூய்மையாக வைத்திருப்பதைப் பார்த்து, குரு தன்னை பாராட்டுவார் என்று மன்னன் மிகவும் ஆவலோடு காத்திருந்தான். ஆனால் அவரது முகத்தில் கோபமும், வருத்தமும் மட்டுமே தென்பட்டது. இதைக் கண்ட மன்னன், ”குருவே! தோட்டம் எப்படி இருக்கிறது? நாங்கள் எதாவது தவறு செய்து விட்டோமா?” என்று கேட்டான். “எல்லாம் சரிதான். தூய்மையான தங்கக் காற்றைக் காணவில்லையே? எங்கே அந்த புனிதமான பொன்னிறக் காற்று எங்கே?” என்றார் துறவி. மன்னனுக்கு எதுவும் புரியவில்லை. குரு எதையோ தேடுவதுபோல் அங்கும் இங்குமாக ஓடினார். இறுதியாக ஓரிடத்தில் சேகரித்து வைக்கப்பட்டிருந்த காய்ந்த சருகுகளையும், பழுத்த இலைகளையும் அள்ளி வந்து தோட்டத்திற்குள் கொட்டினார். அந்த நேரம் பார்த்து வீசிய காற்றில், வீசிய காற்றில் இலைகளும் சறுகுகளும் ஆட ஒரு சலசலப்பு. இப்பொழுதுதான் இந்த தோட்டம் உயிரோட்டமாக உள்ளது. இலைகளின் நடனமும் ஒலியும் இல்லாமல் இதுவரை இந்த தோட்டம் உயிரோட்டம் இல்லமால் ஒரு ஓவியம் போல இருந்தது. மஞ்சள் நிறத்தில் இருந்த பழுத்த இலைகள் தோட்டமெங்கும் சுழன்று பறந்தோடின. அதைக் கண்ட குரு, ”பிரமாதம். இது தானப்பா நான் கேட்ட பொன்னிறக் காற்று. இப்போது பார். உன்னுடைய தோட்டம் உயிரோட்டமாக மாறிவிட்டது” என்றார் குதூகலமாக. இதனை கேட்ட மன்னன், ”குருவே! மரங்களில் உள்ள இலைகள் எல்லாம் உதிர்ந்துவிட்டால் என்ன நிகழும்” என்றான். அதற்கு அந்த துறவி “அங்கே பொன்னிற காற்று தவழும்” என்றார். பின்னர் மன்னனிடம் கூறினார், ”ஒரு நாள் என்பது பகல் மட்டுமல்ல. இரவும்தான். மரணம் என்பது வாழ்க்கையின் நிறைவே. வாழ்க்கையின் கடைசி பருவம். அந்த பருவத்தையும் நேசிக்க வேண்டும். மரணத்தை எண்ணி பயம் கொள்ள கூடாது. தோட்டத்தில் இருக்கும் இந்த சருகுகளும், பழுத்த இலைகளும். எண்ணங்கள் சுழன்று ஓடுவதுதான் புனிதமான பொன்னிறக் காற்று. தெளிவு என்பது அந்த எண்ணங்களை அப்புறப்படுத்தி. வெற்றி கொள்வது அல்ல. மாறாக அதனைக் கடந்து சென்றுவிடுவதே” என்றார்.

No comments:

Post a Comment

GENERAL TALKS - பொதுவாக அவசரப்பட கூடாது , நிதானமாக யோசிக்க வேண்டும் !

ஒரு சிறுகதை இருக்கிறது. பணத்தை எப்போதுமே அவசரத்தை உருவாக்க பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் விளைவு நெகட்டிவ்வாக முடிய வாய்ப்பு இருக...