Saturday, October 19, 2024

GENERAL TALKS - மோசமான எண்ணங்களின் கதை !




மனிதனுடைய பொறாமையை விட்டுக்கொடுத்தால் மட்டும்தான் முன்னேற முடியும் என்பதற்கு ஒரு கதை . ஒரு காலத்தில் ஒரு மன்னன் பணம் தேவை உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் அரண்மனைக்கு முன்பு வந்து வாங்கிக் கொள்ளுங்கள் என்று அறிவிப்பு செய்தான்.  நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்கள் திரண்டனர். அப்போது அங்கே வருகை தந்த அந்த மன்னன் ஒரு அறிவிப்பை வெளியிட்டான். எண்ணிடம் எல்லோருக்கும் கொடுக்கும் அளவிற்கு பணம் உள்ளது. ஆகவே யாரும் அடித்துக் கொள்ளாமல் வரிசையாக நில்லுங்கள் என்றானாம். உடனே அணைவரும் வரிசையாக நின்றனர். வரிசை பல கிலோமீட்டர் தூரம் வரை நீண்டது.  அப்போது மீண்டும் ஒரு அறிவிப்பை வெளியிட்டான் அந்த மன்னன் அதாவது முதலில் நிற்பவருக்கு ஒரு ரூபாயும், இரண்டாவதாக நிற்பவருக்கு இரண்டு ரூபாயும் ஆயிரமாவதாக¬ நிற்பவருக்கு ஆயிரம் ரூபாயும், லட்சமாவதாக நிற்பவருக்கு ஒரு லட்சரூபாயும் என கண்டிசன் போட்டு விட்டு ஒவ்வொருவராக வாருங்கள் என அழைத்துள்ளான்.  முதலில் நின்றவர் ”இங்கு என்ன நடக்கிறது" என்று ஒதுங்கிவிட்டார். இரண்டாவதாக நின்றவர் “தாகமாக இருக்கிறது தண்ணீர் குடிக்க போகிறேன்” என சென்று விட்டார். மூன்றாவதாக நின்றவரும் நகர்ந்து விட்டார்.  இப்படியே முதலில் ஒதுங்கிய மூன்று பேரும் வரிசையின் கடைசியில் சென்று அங்கே கடைசியாக இணைந்து கொள்வோம் என்று பேசிக்கொண்டார்கள். இப்படியே அடுத்தடுத்து வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் ஒவ்வொருவராக கலைந்து கொண்டே சென்றார்கள். யாருமே உதவிகள் பெற வரவே இல்லை. இந்த கதை நடப்பு வாழ்க்கைக்கு செட் ஆகுமா என்று ஒரு கேள்வி இருந்தாலும் அடிப்படையில் பொறாமை என்பது உங்களை முன்னேற விடாமல் தடுக்கும். உங்களுக்கு கஷ்டப்பட்டு கிடைப்பது இன்னொருவருக்கு இலவசமாக கிடைக்க கூடாது என்று நினைக்க வேண்டாம். யாரை பற்றியும் யோசிக்காமல் உங்களின் வேலையை மற்றும் மேம்படுத்துங்கள். வாழ்க்கை சிறப்பாக இருக்கும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...