Wednesday, October 16, 2024

MUSIC TALKS - ADHO ANDHA NADHI ORAM ILAM KAADHALAR MAADAM ! IDHO INDHA ALAI ELLAM ENGAL KAAVIYA KOODAM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம் 
அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

தூது செல்லடி தோழி வான்மதி
மாது நிம்மதி மறைந்ததடி குறைந்ததடி
சேதி சொல்லடி தேனின் நாயகி
தேகம் பாதியாய் கரைந்ததடி கலங்குதடி
அணை போட்ட போதும் நிலை மாறிடாது
அலை போல மோதும் மனம் தாங்கிடாது
நீ இல்லாத போதிலே வாழ்வதேது காதலே
நினைக்காத நேரம் ஏது வாடும் போது கூறு தூது

அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

கூடல் என்பது கூடி வந்தது தேடி வந்தது 
திரை மறைவில் தெரிகிறது
தேகம் என்பது கோவில் போன்றது 
யாகம் செய்ய வா 
பலன் உடனே கிடைக்கின்றது
சுகம் மாலை சூடும் தினம் ராகம் பாடும்
சுவை நாளும் கூடும் துயர் யாவும் ஓடும்
காதல் என்ற தேகமே ஆளுகின்ற யோகமே
கலைக் கோயில் தீபம் ஏற்று பாடிப் போற்று ஆசை ஊற்று
கரம் தொடும் போது சுக வரம் தரும் மாது
இரு கரம் தொடும் போது சுக வரம் தரும் பூமாது

அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம் 
அவன் வருகின்ற நேரம் நான் தழுவிட வேண்டும்
இது விரகத்தின் வேகம் விலகிடு என் தோழி
அதோ அந்த நதியோரம் இளம் காதலர் மாடம்
இதோ இந்த வனமெல்லாம் எங்கள் காவியக் கூடம்

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...