Saturday, October 19, 2024

GENERAL TALKS - எண்ணமும் செயலும் முக்கியமானது !




ஒரு நாள் மத்தியான வெயில் கொளுத்திக் கொண்டிருந்தது. மரத்தடியில் நிழலில் படுத்து ஒருவன் நன்றாக உறங்கிக் கொண்டிருந்தான். அந்த வழியாக வந்த விறகுவெட்டி அவனைப்பார்த்தான். “கடுமையான உழைப்பாளியாக இருக்க வேண்டும் உழைத்தகளைப்பால் தான் இந்த வெயிலிலும் இப்படிஉறங்குகிறான்.” என நினைத்துக் கொண்டே சென்றான். அடுத்ததாக திருடன் ஒருவன் அந்த வழியாக வந்தான், “இரவு முழுவதும் கண்விழித்து திருடி இருப்பான் போல தெரிகிறது அதனால்தான் இந்த சுட்டெரிக்கும் வெயிலிலும் அடித்துப் போட்டது போல் தூங்குகிறான் “என நினைத்துக்கொண்டே சென்றான்.  மூன்றாவதாக குடிகாரன் ஒருவன் அந்த வழியாக வந்தான். “காலையிலேயே நன்றாக குடித்துவிட்டான் போல இருக்கிறதுஅதனால் தான் குடிமயக்கத்தில் இப்படி விழுந்து கிடக்கிறான்” என நினைத்துக்கொண்டே சென்றான். சிறிது நேரத்தில் துறவி ஒருவர் வந்தார். “இந்த நண்பகலில் இப்படி மன நிறைவோடு உறங்கும் இவர் முற்றும் துறந்த ஞானியாகத்தான் இருக்க வேண்டும் வேறுயாரால் இத்தகைய செயலை செய்ய முடியும்” என அவரை வணங்கி விட்டு சென்றார். உங்களை பற்றி நீங்கள் என்ன நினைத்தாலும் அடுத்தவர்கள் நினைப்பதும் மிகவும் முக்கியமானது. மனித இனம் ஒரு சமுதாய விலங்கினம் என்பதை நினைவில் கொள்க ! உங்களுடைய எண்ணம் மற்றும் செயல் இந்த இரண்டும் நன்றாக இருந்தால்தான் உங்களை மதிப்பார்கள். உங்களை பற்றி யாரேனும் கேட்டால் உங்களுடய கௌரவம் மற்றும் மரியாதை குறையாத அளவுக்கு நீங்கள் நடந்துகொள்ள வேண்டும். கௌரவத்தை இழந்தால் திரும்ப அடைய முடியாது என்று எல்லாம் இல்லை. கௌரவத்தை அடைவது கடினமான எளிதில் சாத்தியப்படுத்த முடியாத செயலாக இருக்கும். உங்களுடய வாழ்க்கையில் இழப்பு என்று எதுவும் இருக்க கூடாது என்றால் கண்டிப்பாக உங்களுடைய செயல்களை 100 சதம் சரியாக செய்ய வேண்டும். ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம். ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி விஷம். உங்களுடைய செயல்களில் வேண்டும் கவனம். 

No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...