புதன், 23 அக்டோபர், 2024

CINEMA TALKS - X _MEN - UNITED - TAMIL REVIEW - திரை விமர்சனம் !

 



இந்த படம் 2002 ல் வெளிவந்த ஒரு பிரமாதமான சூப்பர் ஹீரோ படம் ! குறிப்பாக எக்ஸ் மென் படங்களின் வரிசையில் மிகவும் சிறப்பாக பிரம்மாண்டம் நிறைந்து அந்த காலத்திலேயே ஒரு படம் எடுத்து இருக்கிறார்கள். இந்த படத்தில் மியூட்டன்ட் மக்களை பிடித்து கொடுமைப்படுத்தி அவர்களின் சக்திகளை எடுத்துக்கொள்ள நினைக்கிறார் வில்லியம் ஸ்ட்ரைக்கர் என்ற ஒரு பாதுகாப்பு தலைவர். இவருடைய சதிவலைகள் நிறைந்த திட்டங்களில் சிக்கிக்கொள்ளும் ப்ரோப்பஸர் எக்ஸ் மற்றும் மேக்னட்டோவின் பாதுகாப்பில் இருக்கும் மியூட்டன்ட் சூப்பர் ஹீரோக்கள் எப்படி அவர்களை காப்பாற்றிக்கொண்டு சதிகளை முறியடிக்கிறார்கள் என்பதில்தான் படத்தின் மீதி கதை நகர்கிறது. சென்ற படம் சூப்பர் ஹிட் என்பதால் இந்த படத்தில் விசுவல் எஃபக்ட்ஸ் மிகவும் துல்லியமாக இருக்கவேண்டும் என்று மட்டும் யோசிக்காமல் கதைக்களத்தில் பின்னி பெடல் எடுத்து வேலை பார்த்து இருக்கிறார்கள். படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் செதுக்கப்பட்டு இருக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. மொத்தமாக பார்க்கும்போது இந்த காலத்தில் வெளிவந்த நிறைய படங்களுக்கு போட்டியாக வெளிவந்து ஹிட் கொடுக்க வேண்டும் என்பதால் மிகவும் தரமான ஒரு படத்தை கொடுத்து இருக்கிறார்கள் ! மேலும் வழக்கமான படங்களை போல இல்லாமல் சினிமாவுக்கு புதுமையாக நிறைய படைப்புகளை கொடுக்க வேண்டும் என்று நினைக்கும் இயக்குனர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படங்களில் இதுவும் உள்ளது. 

கருத்துகள் இல்லை:

GENERAL TALKS - நம்முடைய வாழ்க்கையின் மோட்டிவேஷன் ! #7

  நம் வாழ்வில் நம் கனவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். ஆனால் கற்பனையில் வாழக் கூடாது. இதைப் புரிந்துகொள்வது உங்களுக்...