ஆத்தி வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா
மயங்கி மருகறேயே மறந்து நானும் போவேனா ?
மலைய நாராக்கி மாலை கட்ட மாட்டேனா ?
ஆத்தி வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா
என்னதான் உறவிருந்தாலும் உன்னைத்தான் நினைக்கிறேன்
இருந்தும் உசுரு இல்லாம என்னமோ இருக்கிறேன்
தங்கமே உன்ன எண்ணித்தானே தவியா தவிக்கிறேன்
தரையில் துடிக்கிற மீனை தண்ணிக்குள் இழுக்கிறேன்
பொட்டு வச்ச குமரிபெண்ணே கேளடி !
நீ எட்டு வச்சா இமயமலை ஏழடி !
அழற பொன்னே கொஞ்சம் சிரிச்சிப்புடு
அந்த சிரிப்புக்குள்ள துன்பம் எரிச்சுப்புடு
ஆத்தி வாடையில பட்ட மரம் கோடையில கொழுந்து விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா
அடி போடி முள்ளுக்குள்ள போட்ட விதை முட்டி முட்டி முளைச்சு விடாதா
அழுது போலம்புறது அர்த்தம் இல்லை அம்மாளு !
நம்பியே நடந்து வந்தா நாளைக்கு நீ நம்மாளு !
கனவு அறுத்து விட்டாலே மீண்டும் தொடருமா ?
காதல் தொலைந்து விட்டாலே கையில் சேருமா ?
நெருப்பை ஒளிச்சு வச்சாலும் நெசமா அணையுமா ?
நெஞ்சை தொலச்சுபுட்டாலும் நினைப்பு தொலையுமா ?
நீ வாழ்வதுனா வாழ்க்கை வரும் பாரம்மா
அந்த வானமேல்லாம் பொம்பளைக்கு கீழம்மா
அடி பறக்க ஒரு ரெக்கை இருக்கு
வானம் ரொம்ப பக்கம் இருக்கு

No comments:
Post a Comment