Saturday, October 19, 2024

GENERAL TALKS - கேலியும் கிண்டலும் பயனற்றது !




கேலி கிண்டல் பேசும் குப்பையான மனிதர்களை தூரம் தள்ளி வைப்பதே நல்லது ஒரு காலத்தில் கோவில் யானை ஒன்று நன்றாகக் குளித்துவிட்டு நெற்றியில் பட்டை தீட்டிக் கொண்டு சுத்தமாக வந்து கொண்டிருந்தது. ஒரு ஒடுக்கமான பாலத்தில் அது வரும் போது எதிரே சேற்றில் குளித்துவிட்டு ஒரு பன்றி, வாலை ஆட்டிக் கொண்டே வந்தது. யானை ஒரு ஓரத்தில் ஒதுங்கி நின்று அதற்கு வழி விட்டது. அந்தப் பன்றி, எதிரே இருந்த இன்னொரு பன்றியிடம், "பார்த்தாயா, அந்த யானை என்னைக் கண்டு பயந்து விட்டது!" என்று சொல்லிச் சிரித்தது. அந்த யானையைப் பார்த்து இன்னொரு யானை, "அப்படியா, நீ பயந்து விட்டாயா?" என்று கேட்டதுஅதற்குக் கோவில் யானை கீழ்க்கண்டவாறு பதில் சொன்னது:"நான் தவறி இடறி விட்டால் பன்றி நசுங்கி விடும். மேலும் நான் சுத்தமாக இருக்கிறேன். பன்றியின் சேறு என் மேல் விழுந்து நானும் அசுத்தமாகி விடுவேன். இந்தக் காரணங்களால், நான் ஒதுங்கிக் கொண்டேன்". நம் வாழ்க்கையிலும் சில பன்றிகள் வரலாம் நாம்தான் ஒதுங்கி போக வேண்டும். நீதி: தன் பலம், பலவீனம் தெரிந்தவர்கள் அடக்கத்தில் சிறந்தவர்களாக இருப்பார்கள். இவர்களை போல ஆட்கள் பக்கத்தில் இருந்தால் நம்முடைய வாழ்க்கை, நம்முடைய பலம் தெரியாமல் நாம் எப்போது அவனமானப்பட்டு நிற்போம் என்று காத்திருந்து காத்திருந்து அவமானப்படுத்தி ரசிப்பார்கள். இவர்களுக்கு வாழ்க்கையில் சந்தோஷம் கிடைக்க இன்னொருவரை வருத்தப்படுத்துவார்கள். இந்த மாதிரியான ஆட்கள்தான் கேலியிலும் கேளிக்கையிலும் ஈடுபடுவதை வாழ்நாள் வேலையாக செய்வார்கள். இவர்களை சரி செய்ய முடியாது. ஒரு நாள் காலத்தால் அடிபட்டு வாங்கி கட்டிக்கொண்டால் மட்டும்தான் இந்த கேலி பேசும் நபர்களுக்கு புத்தி வரும் என்றால் பார்த்துக்கொள்ளுங்களேன். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...