Friday, October 4, 2024

GENERAL TALKS - ஆசைகள் நம்மை தடுத்து நிறுத்தும் காரணிகளாக மாற கூடாது !

 



ஒரு மனிதன் எப்போதும் அவனுடைய ஆசைகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்க வேண்டும். மேலும் தான் ஆசைப்படும் விஷயங்களை ஒவ்வொன்றாக அடைய முயற்சிக்க வேண்டுமே தவிர்த்து ஒரே நாளில் ஒரே நேரத்தில் அடைய முயற்சிப்பது கடினமானது. இது குறித்து சமீபத்தில் ஒரு சிறுகதை கேள்விப்பட்டேன். பள்ளிக்கூடம் முடித்து வீட்டிற்கு செல்லும் வழியில் ஒரு ஜாடி நிறைய வேர்க்கடலைளுடன் தரையில் யாரோ வைத்திருப்பதை பார்க்கிறான். அந்த ஜாடி குறுகிய கழுத்து பகுதியை கொண்டதாகவும், மேலும் முழுவதும் வேர்க்கடலை நிரம்பியதாகவும் இருந்தது. வேர்க்கடலையைக் கண்டதும் சிறுவன் அதை சாப்பிடுவதற்கு ஆசைப்பட்டான். எனவே, பதற்றத்துடன் அவன் தன் கையை ஜாடிக்குள் விட்டு, கை நிறைய வேர்க்கடலைகளை எடுக்க முயன்றான். ஆனால், அவன் கையை வெளியே எடுக்க முயன்றபோது, அவனால் கைகளை வெளியே எடுக்க முடியவில்லை. எனவே, அவன் ஏமாற்றமாக உணர்ந்து அழுதுவிட ஆரம்பித்தான். இந்த சோதனையை செய்யும் மனிதர் தூரத்தில் இருந்து சிறுவனின் நடவடிக்கைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் சிறுவனிடம் வந்து அவசரப்படாதே, கொஞ்சம் கொஞ்சமாக நீ இந்த வேர்க்கடலைகளை எடுத்தால்தான், நீ உன் கையை வெளியே எடுக்க முடியும். இப்படி செய்தால் எல்லா கடலையும் எடுத்துக் கொள்ளலாம் என்ற ஆசையை விடு என்றும் நிதானமாக எடுத்து சாப்பிட கற்றுக்கொள் என்றும் யோசனைகளை கொடுத்தார். அவர் கூறியது போல் சிறுவன் செய்தான், வேர்க்கடலைகளை எடுத்து சந்தோஷமானான். அவன் அந்த மனிதருக்கு நன்றி சொல்லிவிட்டு சென்றான். இந்த கதையில் லாஜீக் குறைவுதான் என்றாலும் சொல்லவரும் மேட்டர் என்னவென்றால் எல்லா நேரமும் நீங்கள் ஆசைப்படும் எல்லா விஷயமும் குறுகிய காலத்தில் கிடைத்துவிடும் என்று நினைக்க வேண்டாம். உங்களின் ஆசைகளை ஒவ்வொன்றாகவே நிறைவேற்றுங்கள். அதுதான் நிதானமானது. 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...