உலக சினிமாவை பொறுத்தவரைக்கும் ஜப்பானிய சினிமாக்களுக்கு குறிப்பாக அனிமேஷன் படங்களுக்கு எப்பொழுதுமே பேரதரவு இருக்கிறது. இந்த வகையில் பார்க்க வேண்டிய ஒரு ஸைக்கலாஜிக்கல் ரொமான்டிக் பிலிம் இந்த படம். நமது கதாநாயகி தன்னுடைய வாழ்க்கையில் பெற்றோர் பிரிந்து செல்ல காரணம் தான் அதிகமாக பேசுவதால்தான் என்று முடிவை எடுத்து பள்ளிக்கூட நாட்களில் யாரிடமும் நேரடியாக வார்த்தை கொடுத்து பேசாமல் வாழ்ந்துகொண்டு இருக்கும்போது பள்ளி நண்பர்களோடு இணைந்து ஒரு கலாச்சார இசை நாடகத்தை பாடல் எழுதி நடிக்கும் பொறுப்பு நம்முடைய கதாநாயகிக்கு வருகிறது. பொதுவாக பேசவே மாட்டேன் என்று வாழ்ந்துகொண்டு இருக்கும் நம்முடைய கதாநாயகி எப்படியாவது இந்த போட்டியில் தான் நேசிக்கும் நண்பர்களுக்காக வெற்றி அடைய கண்டிப்பாக பாட்டு பாட வேண்டும் என்பதாலும் தயக்கத்தை எதிர்கொண்டு வெற்றியடைய வேண்டும் என்பதாலும் கிளைமாக்ஸ் வரைக்கும் செய்யக்கூடிய முயற்சிதான் இந்த படத்தின் கதைக்களமாக இருக்கிறது. ஒரு பள்ளிக்கூட வாழ்க்கை கதையாக பொதுவான ஜப்பானிய அனிமேஷன் படங்களின் டேம்ப்லேட்டை விட்டுக்கொடுக்காமல் வந்த கதை என்றாலும் காட்சி அமைப்பு மற்றும் திரைக்கதை சிறப்பாக உள்ளதால் எல்லோரும் கண்டிப்பாக ஒரு முறை பார்க்கலாம். நல்ல சாய்ஸ் இந்த திரைப்படம். வாழ்வியல் கதைகளை ரசனை கொண்டு தேடும் ரசிகர்களுக்கு இந்த படம் போதுமான காட்சியமைப்புகளை கொண்டுள்ளது.
No comments:
Post a Comment