உங்களுக்கு அமெரிக்கன் சினிமா பிடிக்கும் என்றால் நீங்கள் கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு திரைப்படம் இதுவாகும். ஒரு காலத்தில் தனக்கு சிறப்பான கெரியர் இருந்தாலும் இப்போது அவருடைய சினிமா வாழ்க்கையில் வயதான காரணத்தால் வெளியேற வேண்டிய கட்டாயத்தில் இருக்கக்கூடிய ஒர ஆக்ஷன் ஹீரோ டேனியல் என்றால் அவருடைய வாழ்க்கையில் நண்பராக அவருடைய ஸ்டண்ட் டபுளாக இருக்கும் பிராட்ன் வாழ்க்கை தனியாக நகர்கிறது. இந்த படத்தை 70 ஸ் களின் பிலிம் மேக்கிங் இன்டஸ்ட்ரிக்கு ஒரு கௌரவம் என்றே சொல்லலாம். காரணம் என்னவென்றால் விஷயம் அவ்வளவு இருக்கிறது. ஒரு அமெரிக்க பிலிம் மேக்கிங் இண்டஸ்ட்ரி எப்படி வளர்ச்சியை அடைந்தது என்பதை ஒரு பக்கம் சொன்னாலும் கிளைமாக்ஸ்ஸில் ஹாலிவுட்டில் நடந்த ஒரு முக்கியமான துயரமான இன்ஸிடேன்ட்டை கண்களுக்கு முன்னால் கொண்டு வந்து நிறுத்தி பிரமாதப்படுத்தி இருக்கிறார் இயக்குனர் க்வென்டின் டாரன்டினோ ! பயோகிராபி படங்களை இவ்வளவு நன்றாக எடுப்பது எப்படி என்று இவருடைய படத்தை பார்த்து நிச்சயம் கற்றுக்கொள்ளலாம். மற்றபடி இந்த படம் சிறப்பான காட்சிகளோடு சீனியர் நடிகர்களின் சப்போர்ட் இருப்பதால் தெளிவான நடிப்பு திறன் நிறைந்து நன்றாகவே காணப்படுகிறது. மேலும் 70 களின் ஸெட்கள் மற்றும் காஸ்ட்யூம்கள் மிகவும் தெளிவாக ரிஸர்ச் பண்ணி கொடுக்கப்பட்டது திரைக்கதையை ரசிக்க வைக்கிறது.
No comments:
Post a Comment