Thursday, October 17, 2024

GENERAL TALKS - போறாமைப்பாடுவது என்பது தவறானது !




இந்த கதை நான் படித்தபோது பிடித்து இருந்தது !அது ஒரு அடர்ந்த காடு. கிழட்டு சிங்கம் ஒன்று, அந்த காட்டிலுள்ள விலங்குகளை ஆளுமை செய்து வந்தது. காட்டின் நடுவிலுள்ள பாறை முகப்பில் படுத்துக் கிடக்கும் சிங்கத்தை அனைத்து விலங்குகளும் வணங்கி, தாங்கள் வேட்டையாடிய இறைச்சியை போட்டுச் செல்லும். இதையே நாள்தோறும் பார்த்துக் கொண்டிருந்த குள்ளநரிக்கு பயங்கர ஆத்திரம் வந்தது. சிங்கத்திற்கு மட்டும் ஏன் இந்த மரியாதையை கொடுக்க வேண்டும். அப்படி என்ன சாதனையை அது செய்துவிட்டது என, தனக்குதானே யோசித்துக் கொண்ட குள்ளநரி, சிங்கத்தின் ஆசனத்தை கைப்பற்ற சதி செய்தது. அருமையான சிங்க ராஜாவே. நீங்கள் அமர்வதற்கு இலை, பூக்களுடன் நிறைந்த ஆசனத்தை அதோ அங்கே தயார் செய்து வைத்துள்ளேன். இனிமேல் நீங்கள் அங்கிருந்தபடியே இந்த காட்டை ஆட்சி செய்யலாம், வாருங்கள் என்று, பணிவுடன் அழைத்தது. சிங்கம் அமைதியாக கிடந்தது. அந்த ஆசனம் மலை உச்சியில் உயரமான இடத்தில் இருப்பதால், யார் எதை, எதை வேட்டையாடுகிறார்கள் என்பதை அங்கிருந்தபடி நீங்கள் பார்த்து, அவர்களிடம் கறாராக உங்களுக்கான உணவை கேட்டுப் பெறலாம், வாருங்கள் என்று கூறி சிங்கத்தின் ஆசையை நரி தூண்டியது.அந்த ஆசைக்கு மயங்கிய கிழட்டு சிங்கம், நரி கூறிய ஆசனத்தில் அமர அதன் பின்னே மலை உச்சியை நோக்கி தள்ளாடியபடி நடந்து சென்றது. மலை முகட்டின் அருகே வந்தபோது, திடீரென கிழட்டு சிங்கத்தை நரி கீழே தள்ளிவிட்டது. பல நூறு அடி பள்ளத்தில், பாறைகளில் தலை மோதி கிழட்டு சிங்கம் பரிதாபமாக பலியானது. தனது திட்டம் வெற்றிப் பெற்றதாக குஷியடைந்த குள்ளநரி, இனிமேல் இந்த காட்டிற்கு தானே ராஜா என பேராசை பொங்க, கிழட்டு சிங்கம் வழக்கமாக படுத்துக்கிடக்கும் பாறையில் வந்து அமர்ந்தது. அந்த வழியாக செல்லும் விலங்குகள் தன்னை வணங்கிச் செல்லும் என நரி எதிர்பார்த்தது. ஆனால், எந்த விலங்குகளுமே நரியை பொருட்படுத்தவே இல்லை. ஏமாற்றமடைந்த குள்ளநரி அனைத்து விலங்குகளையும் தடுத்து நிறுத்தி, இங்கே படுத்திருந்த கிழட்டு சிங்கத்திற்கு நீங்களெல்லாம் மரியாதை கொடுத்ததைப்போல என்னையும் வணங்கிச் செல்லவ வேண்டும் என்று கூறியது. இதை கேட்ட மற்ற விலங்குகள், குள்ளநரியை கடித்தும், உதைத்தும் விரட்டியடித்தன. உயிர் தப்பினால் போதும் என குள்ளநரியும் தலைதெறிக்க ஓடி தப்பியது. பவர் என்பது இருக்கற இருக்கை இல்ல, அதுல வந்து இருப்பான் பாரு ஒருத்தன். அவனைப் பொருத்ததே என்பதை நரி உணர்ந்தது. ஒருவருடைய வலிமை பண்ணப்பட்டது என்றால் பேரசைப்படுவது ஒரு சில விஷயங்களில் போறமைப்படுவது தவறானது ! நம்முடைய வாழ்க்கையை நாம் பார்த்துக்கொண்டால் போதும் !

No comments:

Post a Comment

GENERAL TALKS - பொதுவாக அவசரப்பட கூடாது , நிதானமாக யோசிக்க வேண்டும் !

ஒரு சிறுகதை இருக்கிறது. பணத்தை எப்போதுமே அவசரத்தை உருவாக்க பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் விளைவு நெகட்டிவ்வாக முடிய வாய்ப்பு இருக...