Tuesday, October 15, 2024

MUSIC TALKS - NALAM VAALA ENNALUM EN VAAZHTHUKKAL - TAMIL KOORUM PALLANDU EN VAARTHTHAIGAL - ILA VENIL UN MEEDHU VANDHAADHUM - ILAM THENDRAL UN MEEDHU PUN PAADUM - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !



நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும் 
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும் 
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

மனிதர்கள் சில நேரம் நிறம் மாறலாம்
மனங்களும் அவர் குணங்களும் தடம் மாறலாம் 
இலக்கணம் சில நேரம் பிழையாகலாம்
எழுதிய அன்பு இலக்கியம் தவறாகலாம்
விரல்களைத் தாண்டி வளர்ந்ததை கண்டு 
நகங்களை நாமும் நறுக்குவதுண்டு 
இதிலென்ன பாவம் எதற்கிந்த சோகம் கிளியே

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்

கிழக்கினில் தினம் தோன்றும் கதிரானது 
மறைவதும் பின்பு உதிப்பதும் மரபானது
கடல்களில் உருவாகும் அலையானது 
விழுவதும் பின்பு எழுவதும் இயல்பானது

நிலவினை நம்பி இரவுகள் இல்லை 
விளக்குகள் காட்டும் வெளிச்சத்தின் எல்லை
ஒரு வாசல் மூடி மறுவாசல் வைப்பான் இறைவன்

நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்
இளவேனில் உன் வாசல் வந்தாடும் 
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
இளவேனில் உன் வாசல் வந்தாடும் 
இளந்தென்றல் உன் மீது பண் பாடும்
நலம் வாழ எந்நாளும் என் வாழ்த்துக்கள் 
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்


No comments:

Post a Comment

GENERAL TALKS - எல்லோருக்கும் ஒரு அதிர்ஷ்டமான பொருள் தேவைப்படுகிறது !

ஒரு காலத்தில் அவன் மிகவும் ஏழை. தன் குறைந்த வருமானத்தில் வாழ்க்கை நடத்திவந்தான். ஒரு நாள், தெருவில் பழங்காலக் காசு ஒன்று கிடைத்தது. அந்தக்...