பிரமாதமான ஆக்ஷன் அட்வென்சர் காட்சிகளுடன் 2000 களில் ஸ்பைடர் மேன் படங்கள் வெளிவந்த காலத்திலேயே ஒரு சூப்பர் சயின்ஸ் ஃபிக்ஷன் படம் வெளிவந்து இருக்கிறது என்பதை சமீபத்தில் தெரிந்துகொண்டேன் அதுதான் எக்ஸ்- மென். இந்த படத்தின் கதை என்னவென்றால் சாதாரண பொது மக்களில் கொஞ்சம் பேருக்கு மியூட்டேஷன் காரணமாக வித்தியாசமான பெரும் சக்திகளும் வல்லமையும் கொண்ட சூப்பர் சக்திகள் கிடைத்துவிடுகிறது ஆனால் மக்கள் இதுபோன்று மியூட்டேஷன் அடைந்த மியூட்டென்ட்களை வெறுத்து ஒதுக்குவதால் மெட்டல் கட்டுப்படுத்தும் சக்திகளை உடைய மேக்னேட்டோவும் அவருடைய அமைப்பான பிரதர்குட் ஆஃப் மியூட்டன்ட்ஸும் எப்படி மனதை படிக்கும் சக்திகளை உடைய சார்லஸ் சேவியர் மற்றும் அவருடைய மியூட்டேன்ஸ்கள் தங்கி படிக்கும் எக்ஸ் மென் கல்லூரி கூடத்தை தாக்குகிறார்கள் என்றும் இந்த வகையில் புதிதாக சேர்ந்த வோல்வெரின் எப்படி தன்னுடைய மியூட்டன்ட்ஸ் இனத்தின் சகாக்களை காப்பாற்ற போராடுகிறார் என்பதுதான் படத்தின் கதை. இந்த படம் தெளிவான ஒரு சூப்பர் ஹீரோ படம் கண்டிப்பாக மிஸ் பண்ணாமல் பாருங்கள் ஒரு தரமான படைப்பு ! இந்த படத்தின் அடுத்த பாகம் X2 - X MEN யுனைடெட் என்ற படம் 2003 ல் வெளிவந்தது.
No comments:
Post a Comment