Thursday, October 24, 2024

GENERAL TALKS - இவர்களை சமாளிப்பது கஷ்டமாக இருக்கிறது !

 



இந்த குட்டி கதைகளும் கருத்துக்களும் முக்கியமானது ! ஓய்வு நேரத்தை எப்படிப் பயன்படுத்தலாம் என்று ஓர் இளைஞர் நண்பர்களிடம் கேட்டார். சிலர் சினிமாவுக்குப் போகச் சொன்னார்கள். சிலர் நண்பர்களுடன் செலவிடச் சொன்னார்கள். ஒவ்வொருவரிடம் இருந்தும் ஒவ்வொரு யோசனை வந்தது. பிறகு, நேர நிர்வாகவியல் நிபுணரை அழைத்து ஆலோசனை கேட்டார் இளைஞர். புத்தகம் படி, நல்ல காரியங்கள் செய் என்றெல்லாம்தான் சொல்லப்போகிறார் என்பது இளைஞரின் எதிர்பார்ப்பு. நேர நிர்வாகவியல் நிபுணர் மிக நிதானமாகச் சொன்னார். “உன் ஓய்வு நேரத்தை மற்றவர்கள் தவறாகப் பயன்படுத்தாமல் பார்த்துக்கொள். அதுவே பயனுள்ள நேரங்களைத் தொடங்கி வைக்கும் என்று சொல்கிறார் அனுபவஸ்தர். பெரும்பாலும் மனிதன் சமுதாயமாக வாழந்தே பழக்கப்பட்டதாலோ என்னவோ மனிதன் சமூகம் என்பதை தன்னுடைய இணைப்பாக கருதுகிறான். நெருக்கமான இரத்த உறவாக இருந்தாலும் மதிப்பு குறையும்போது அல்லது பகைமை அதிகரிக்கும்போது எந்த வகை உறவாக இருந்தாலும் சரி இன்னும் சொல்லப்போனால் சக்தியாளராக இருந்தாலும் சரி நம்மை வேதனைப்படுத்தி சுகம் காணுவார்கள். நம்மை நாம்தான் பார்த்துக்கொள்ள வேண்டும்.  ஒருவன் தன் கழுதை மேல் சுமை ஏற்றிக் கொண்டிருக்கும் போது எதிரிகள் வருவதைப் பார்த்தான். பயந்துபோய், “கழுதையே வா! நாமிருவரும் ஒடிப்போய்விடலாம். எதிரிகள் வருகிறார்” என்றான். கழுதை, “நான் வரவில்லை. நீ ஓடு!” என்றது. ” ஏன் கழுதாய்?” எனக் கேட்டான் ” எதிரிகளுக்கும் பொதி சுமக்கத்தானே போகிறேன். உன்னுடன் வந்தால் எனக்கு சுமை குறையப்போகிறதா?” என்றது. நம்மை மேனேஜ்மெண்ட் பண்ணுபவர்கள் கண்டிப்பாக முட்டாள்தனமான ஆட்களாக இருக்க நிறைய வாய்ப்பு உள்ளது. இவர்களை சமாளிப்பது எல்லாம் பயங்கர நரகமாக இருக்கிறது. இந்த வாழ்க்கை எப்போதுமே மாறாது. நாம்தான் மாற்ற வேண்டும். 

No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...