Wednesday, October 2, 2024

MUSIC TALKS - PESUGIREN PESUGIREN UN IDHAYAM PESUGIREN SONG - TAMIL SONG LYRICS - VERA LEVEL PAATU !









பேசுகிறேன் பேசுகிறேன் உன் இதயம் பேசுகிறேன்
புயல் அடித்தால் கலங்காதே நான் பூக்கள் நீட்டுகிறேன்
எதை நீ தொலைத்தாலும் மனதை தொலைக்காதே
அடங்காமலே அலைபாய்வதே மனம் அல்லவா

கடல் தாண்டும் பறவைகெல்லாம் 
இளைப்பாற மரங்கள் இல்லை 
கலங்காமலே கண்டம் தாண்டுமே
முற்றுபுள்ளி அருகில் நீயும் 
மீண்டும் சின்ன புள்ளிகள் வைத்தாய் 
முடிவு என்பதும் ஆரம்பமே
வளைவில்லாமல் மலை கிடையாது 
வலி இல்லாமல் மனம் கிடையாது வருந்தாதே வா
அடங்காமலே அலைபாய்வதே மனம் அல்லவா

காட்டில் உள்ள செடிகளுக்கெல்லாம் 
தண்ணீர் ஊற்ற ஆளே இல்லை 
தன்னை காக்கவே தானாய் வளருமே
பெண்கள் நெஞ்சின் பாரம் எல்லாம்
பெண்ணே கொஞ்ச நேரம் தானே 
உன்னை தோண்டினால் இன்பம் தோன்றுமே
விடியாமல் தான் ஒரு இரவேது 
வழியாமல் தான் வெள்ளம் கிடையாது வருந்தாதே  வா
அடங்காமலே அலைபாய்வதே மனம் அல்லவா



No comments:

இந்த பதிவு எதனை பற்றியது என்று கண்டுபிடியுங்கள் - 1

1. Neurocysticercosis - A parasitic infection caused by the pork tapeworm. 2. Subacute sclerosing panencephalitis - A rare, chronic, progres...